• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மதிப்பிற்குரிய குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜு, இந்த வருடம் 2024ல் நடைபெற இருக்கும் 77வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் மதிப்புமிக்க ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பைப் பெற்றுள்ளார்.

by Tamil2daynews
August 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மதிப்பிற்குரிய குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜு, இந்த வருடம் 2024ல் நடைபெற இருக்கும் 77வது சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் மதிப்புமிக்க ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பைப் பெற்றுள்ளார்.

 

தனது முதல் தெலுங்குத் திரைப்படமான ‘நாட்டியம்’ படத்திற்காக இரண்டு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றவர் சந்தியா ராஜு. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தொழில்துறையின் தலைவர் தொழிலதிபர் ஸ்ரீ பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஹைதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலா ஃபிலிம்ஸின் நிறுவனராக சந்தியா ராஜூ உள்ளார். குச்சிப்புடியின் கிளாசிக்கல் நடன வடிவத்திற்கு ஜோதி கொடுத்து, அதை தனது நேரடி நிகழ்ச்சிகள், நடன அகாடமி மற்றும் சினிமா மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளார்.

ஒரு நடிகை, பாரம்பரிய நடனக் கலைஞர், தேசிய விருது பெற்ற நடன இயக்குநர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் என அவர் தொடர்ந்து இந்தியாவின் கலாச்சார கட்டமைப்பை ஊக்குவித்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரால் 2024 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தன்று சிறப்புமிக்க நிகழ்வாக ’அட் ஹோம்’ நடைபெறுகிறது. ஆகஸ்ட் 15 மாலையில் சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் கொடியேற்ற விழாவைத் தொடர்ந்து உடனடியாக இது தொடங்குகிறது.
Imageமூத்த அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், இராஜதந்திரிகள் மற்றும் பிற குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் உட்பட பல முக்கிய விருந்தினர்களை பாரம்பரிய உடையில் ஜனாதிபதி வரவேற்கும் முக்கியமான நிகழ்வாகும். இதில் விருந்தினர்கள் ஃபார்மல் மற்றும் செமி-ஃபார்மல் முறையில் உடை அணிய அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும், இந்த நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்று கலந்து பேசுதல் மற்றும் சிற்றுண்டி ஆகியவை அடங்கும். விருந்தினர்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளவும், நாட்டின் சுதந்திரத்தை கௌரவமான அமைப்பில் கொண்டாடவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இந்திய வரலாற்றில் அன்றைய தினத்தின் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு நிகழ்வுகளில் இதுவும் ஒன்றாகும்.
Imageஇந்த பிரத்யேக நிகழ்வுக்கு அவரது அழைப்பானது, இந்திய பாரம்பரிய நடனம் மற்றும் சினிமாவில் ஒரு நடிப்பு கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பையும், குச்சிப்புடியின் கலாச்சார பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய பங்கையும் அங்கீகரிப்பதாகும்.

சந்தியா ராஜு தனது நன்றியைத் தெரிவித்து பேசியதாவது, “இந்தியாவின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரால் அழைக்கப்படுவது எனது கௌரவமும் மரியாதையும் ஆகும். இந்த அழைப்பு இதுவரை நான் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம் மட்டுமல்ல, அடையாளமாகவும் உள்ளது. குச்சிப்புடி நடனம் மற்றும் தெலுங்கு சினிமாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை உயர்த்துவதற்கு என் நாட்டிற்கான பொறுப்பாகவும் இதை உணர்கிறேன். டெல்லியில் நடக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சி” என்றார்.

Previous Post

தமிழகம் முழுக்க 5000 மரக்கன்றுகளை நடும் நடிகர் சௌந்தரராஜா

Next Post

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு

Next Post

பிரசாந்த் நடிக்கும் 'அந்தகன்' திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு

Popular News

  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.