• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக, சூர்யா நடிப்பில் ‘சூர்யா 45’ படத்தை, பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது !!

by Tamil2daynews
October 15, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம்  அடுத்ததாக, சூர்யா நடிப்பில்  ‘சூர்யா 45’ படத்தை, பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறது !!

 

தமிழில் மிகச்சிறந்த தரமான திரைப்படங்களைத் தொடர்ந்து வழங்கி வரும் முன்னணி நிறுவனமும்  ’ஜோக்கர்’, ’அருவி’, ’தீரன் அதிகாரம் ஒன்று’, ’கைதி’, ’சுல்தான்’, ’கணம்’ மற்றும் ’ஃபர்ஹானா’ போன்ற விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பிளாக்பஸ்டர்களை உருவாக்கிய   புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமுமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், நடிகர் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 45’ படத்தைப்  பூஜையுடன் தொடங்கியுள்ளது.

தற்போதைய நிலையில் பெயரிடப்படாத இந்தப் படம், தயாரிப்பு நிறுவனத்தின் புகழ்பெற்ற பட வரிசையில் மிகப்பெரும் பொருட் செலவில் உருவாகும் படமாக இருக்கும். மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற நகைச்சுவை  மற்றும் சமூக அக்கறையுடன் கூடிய படங்களை இயக்கிய,  நடிகர், இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இந்த பிரம்மாண்டமான ஆக்‌ஷன் படத்தை இயக்கவுள்ளார்.
Imageஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த படத்தின் பரபரப்பான திரைக்கதையை உருவாக்கி வரும், இயக்குநர்  RJ பாலாஜி தற்போது சூர்யா 45 படத்தின் முன் தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்தப் பக்கா என்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்கான  இடங்களை  பல இடங்களுக்குச் சென்று தேர்வு செய்து வருகிறார்.

ஆர்.ஜே.பாலாஜியின் திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட ஆஸ்கர் விருது நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.  ஏ.ஆர்.ரஹ்மானும் சூர்யாவும் இதற்கு முன்பு ’சில்லுனு ஒரு காதல்’, ’ஆயுத எழுத்து’ மற்றும் ’24’ போன்ற கிளாசிக் படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர்-இசையமைப்பாளர் ஜோடியின், இந்த புதிய படத்தின் பாடல்களும் இசை ஆர்வலர்களின்  மத்தியில் ஆட்சி செய்யும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

RJ பாலாஜி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், இந்த மதிப்புமிக்க திரைப்படத்திற்காக, பல திறமையான பிரபல கலைஞர்களை இப்படத்தில் இறுதி செய்து வருகின்றனர். நவம்பர் 2024-ல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது.  2025-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் “சூர்யா 45” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும். இப்படத்தில் நடிக்கவுள்ள  நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு  விரைவில் வெளியாகும்.

Previous Post

விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், தாரக் சினிமாஸின் பான் இந்தியா திரைப்படம் நாகபந்தம், படத்தினை மெகாஸ்டார் சிரஞ்சீவி துவக்கி வைத்தார் !!

Next Post

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்

Next Post

ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த 'மொய் விருந்து' உணவு பயணம்

Popular News

  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவரும் பட அதிபருமான கே ஆர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

    0 shares
    Share 0 Tweet 0
  • அண்ணாசாலையில் கரை வேட்டியுடன் பைக்கில் வலம் வந்த அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • கும்கி-2 – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘லக்கிமேன்’ விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீகாந்த்தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்ட கருவறை குறும்பட இயக்குனரை பாராட்டிய இளையராஜா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.