• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’

by Tamil2daynews
October 20, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’

 

ஆர் ஜே பாலாஜி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகி வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிக்கும் இப்படத்தை பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ மற்றும் ‘காலா’ திரைப்படங்களில் உதவி மற்றும் இணை இயக்குநராக பணியாற்றிய சித்தார்த் விஸ்வநாத் இயக்குகிறார்.

இயக்குநர் செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமாகிய நட்டி (நடராஜன் சுப்பிரமணியன்) மலையாள திரையுலகை சேர்ந்த பிரபலங்களான சானியா ஐயப்பன், ஷரஃப் உதீன் மற்றும் ஹக்கீம் ஷா, இயக்குநர் பாலாஜி சக்திவேல், கருணாஸ், இசையமைப்பாளர் அனிருத்தின் தந்தை ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன் மற்றும் மெளரிஷ் ஆகியோர் சொர்க்கவாசல் திரைப்படத்தில் முக்கிய பாத்திரங்களை ஏற்றுள்ளனர்.

சிறையை பிரதான கதைக்களமாக கொண்டு உருவாகும் இந்தப் படம், சிறைச் சுவர்களுக்கு உள்ளே இருப்பவர்களின் கடுமையான வாழ்வியல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் என்று இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் தெரிவித்தார்.
Image‘சொர்க்கவாசல்’ திரைப்படத்திற்காக தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டு கதாபாத்திரமாகவே மாறி, கடின உழைப்பை ஆர் ஜே பாலாஜி வழங்கியுள்ளார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் சிறப்பான பங்களிப்போடு அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக ‘சொர்க்கவாசல்’ உருவாகியுள்ளது என்று இயக்குநர் மேலும் கூறினார்.

இப்படத்தின் கதையை தமிழ்ப்பிரபா மற்றும் அஷ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் எழுதியுள்ளார். மம்முட்டி நடித்து பெரும் வெற்றி பெற்ற ‘பிரம்மயுகம்’ படத்திற்கு இசையமைத்த கிறிஸ்டோ சேவியர் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். ஒளிப்பதிவை பிரின்ஸ் ஆண்டர்சன் கவனிக்க, செல்வா ஆர் கே படத்தொகுப்பை கையாளுகிறார். கலை இயக்கம்: எஸ் ஜெயச்சந்திரன், சண்டை பயிற்சி: தினேஷ் சுப்பராயன், உடைகள் வடிவமைப்பு: ஸ்ருதி மஞ்சரி, உடைகள் தலைமை: அனந்தா நாகு, ஒப்பனை: சபரி கிரீசன், ஒலி வடிவமைப்பு: சுரேன் ஜி மற்றும் எஸ் அழகியக்கூத்தன், ஒலிப்பதிவு: வினய் ஶ்ரீதர், வி எஃப் எக்ஸ்: லார்வென் ஸ்டுடியோஸ், டிஐ: பிக்ஸெல் லைட் ஸ்டூடியோஸ், காஸ்டிங் இயக்குநர்: வர்ஷா வரதராஜன், பப்ளிசிட்டி வடிவமைப்பு: கபிலன் செல்லையா, மக்கள் தொடர்பு: நிகில் முருகன், ப்ரோமோஷன்ஸ்: ஏகேடி, ஆடிட்: ஃபினாங்கி கன்சல்டிங், லீகல்: டி எஸ் லீகல், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: பி எஸ் ராஜேந்திரன்,  நிர்வாக தயாரிப்பு: விக்ரம் வைபவ் ஆர் எஸ், தயாரிப்பு ஆலோசனை:  ஏ கே அனிருத், கிரியேட்டிவ் ஆலோசனை: கிருஷ்ணா மாரிமுத்து.

ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் சித்தார்த் ராவ் மற்றும் பல்லவி சிங் தயாரிப்பில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி நாயகனாக நடிக்கும் ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. இதன்  படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Previous Post

முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசை நிகழ்ச்சி

Next Post

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா.

Next Post

நடிகர் கிருஷ்ணா நடிக்கும் 23 வது படத்தின் துவக்க விழா.

Popular News

  • ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரலில் உருவான ஸ்ரீ ராமரை கொண்டாடும் ‘ஜெய் ஜெய் ராம்’ பாடல் ‘ராமாயணம்’ திரைப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவடி டிசம்பர் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • லெலின் பாண்டியன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரடைஸ் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

டோரதி – விமர்சனம்

September 25, 2026

இதுவரை காணாத ஹாட் லுக்! ஆலியா பட்டின் ‘லவ் & வார்’ (Love & War) முதல் பார்வை போஸ்டர்கள் வைரல்!

September 25, 2026

“வெற்றிமாறன் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்களின் பார்வையை!” – பாடலாசிரியர் மதன் கார்க்கி விளக்கம்!

September 25, 2026

‘பத்தா’ படத்தின் டிரெய்லர் வெளியீடு – விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் வித்தியாசமான டிரெய்லர்

September 25, 2026

மீசைய முறுக்கு2 – விமர்சனம்

September 25, 2026

பாரடைஸ் – விமர்சனம்

September 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.