• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“சார் படம் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட் !!

by Tamil2daynews
October 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“சார் படம் மூலம் அடுத்த கட்டத்தை எட்டிய இயக்குநர் போஸ் வெங்கட் !!

 

தமிழ் திரைத்துறையில் தான் இயக்கிய முதல் இரண்டு படங்களிலேயே சமூக அக்கறை மிக்க தனித்துவமிக்க படைப்பாளி எனும் பாராட்டைப் பெற்றிருக்கிறார் நடிகர் இயக்குநர் போஸ் வெங்கட்.  சமீபத்தில் SSS Pictures சார்பில் சிராஜ் S தயாரிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில், நடிகர்  விமல் நடிப்பில் உருவான, “சார்”  கல்வியின் அவசியம் மற்றும் சமூக மாற்றத்தைப் பேசும் அழுத்தமான படைப்பு என்ற பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழ் தொலைக்காட்சித் தொடரில் துணை நடிகராக  அறிமுகமான போஸ் வெங்கட் மிக விரைவிலேயே, தன் தனித்துவமான நடிப்புத் திறமையால் நல்ல நடிகன் என மக்களின் மனதில் இடம் பிடித்தார். அடுத்தகட்டமாக வெள்ளித்திரையிலும் தன் பன்முகத் திறமையால் வெற்றி பெற்றார்.

ஒரு நடிகனாக மட்டுமே சுருங்கி விடாமால் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தன் பயணத்தை செழுமைப்படுத்தியவர், தற்போது ஒரு படைப்பாளியாக மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.  தன் முதல் படமான ‘கன்னிமாடம்’ படத்திலேயே  ஜாதிய அடுக்குமுறை, கௌரவக் கொலை பற்றிப் பேசி ஒரு அழுத்தமான படைப்பாளியாக கவனம் பெற்ற போஸ் வெங்கட், தற்போது சார் மூலம் தமிழின் தனித்துவமான படைப்பாளிகளுல் ஒருவராக வெற்றி பெற்றுள்ளார்.

கல்வியை மையப்படுத்தி, ஆசிரியர்களின் தியாகத்தையும், நம் சமூகத்தில் கல்வி தந்த மாற்றத்தையும் ஒரு அருமையான கமர்ஷியல் திரைப்படமாக தந்து, ரசிகர்களிடம் தனக்கென தனி இடத்தைப் பெற்றிருக்கிறார் போஸ் வெங்கட். ரசிகர்கள், விமர்சகர்கள், திரைக் கலைஞர்கள் என பலபுறங்களிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அடுத்த கட்டமாக மிக விரைவில் பெரிய முன்னணி  நட்சத்திரத்தோடு இணையவுள்ளார். தன் இரண்டாவது படத்தின் மூலம் ஏ லிஸ்ட் இயக்குநர்கள் எனும் இடத்திற்கு நகர்ந்துள்ளார் போஸ் வெங்கட்.

சார் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவர் பாராட்டைப்பெற்று, திரையரங்குகளில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்திற்கான வரவேற்பால் திரையரங்கு எண்ணிக்கையும் கூட்டப்பட்டுள்ளது.

போஸ் வெங்கட் இயக்கியுள்ள  இப்படத்திற்கு ஒளிப்பதிவு இனியன், படத்தொகுப்பு சிவா, இசையமைப்பு சித்து குமார், மற்றும் கலை இயக்கம் பாரதி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இயக்குநர் வெற்றிமாறனின் திரைப்பட  நிறுவனமான கிராஸ்ரூட் நிறுவனம் இப்படத்தை பெருமையுடன் வழங்கியுள்ளது.  ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை வெளியிட்டு வரும்  ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கோட் படத்திற்குப் பிறகு சார் படத்தை தமிழகமெங்கும்  வெளியிட்டுள்ளது. இப்படம் திரையரங்குகளில் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Previous Post

ஹாரர் இஸ் த நியூ ஹ்யூமர் : இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸின் முதல் ஹாரர்-காமெடி “தி ராஜா சாப்” படத்தின், முதல் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Next Post

ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ், நடிகர் விஜய்க்கு கடிதம்

Next Post

ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ், நடிகர் விஜய்க்கு கடிதம்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆட்டி’ படம் பெண்களின் வீரத்தையும் நீதிக்கான போராட்டத்தையும் பேசும்! ; இசக்கி கார்வண்ணன்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.