ஏவிஆர் அன்பு சினிமாஸ் தயாரிப்பில், இயக்குநர் பாலாஜி ஜெயபாலனின் இயக்கத்தில் பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி நடிக்கும் திரைப்படம் *படைப்பாளி’
‘சென்னை 28’, ‘பேரழகன்’ உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தமிழகத்தில் வெற்றிகரமாக விநியோகித்த முன்னணி விநியோகஸ்தரான பிரம்மா அன்புராஜ் தனது ஏவிஆர் அன்பு சினிமாஸ் பேனரில் தயாரிக்கும் முதல் படம் ‘படைப்பாளி’.
கதாநாயகியாக நடிகை சவுந்தரியா அறிமுகமாகும் ‘படைப்பாளி’ திரைப்படத்தில் பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன், ‘காதல் கண்கட்டுதே’ திரைப்படத்தின் இயக்குநர் சிவராஜ், கார்த்திகேயன் கோவிந்தராஜ், பிரசாந் வர்மன், ஏ.எம்.எஸ். ஹரிகிருஷ்ணன், பிரியதர்ஷினி, டோமினிக், ஆண்ட்லின், தர்மராஜ், பிரதீப், தயனேஷ், கார்த்திக் மானஸ் ஆகியோர் நடித்துள்ளனர். பல படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றிய எஸ்.ஆர். ராம் இசையமைத்துள்ளார்.
‘படைப்பாளி’ குறித்து பேசிய இயக்குநர் பாலாஜி ஜெயபாலன், “வெற்றிப்பட விநியோகஸ்தரான பிரம்மா அன்புராஜ் அவர்களின் முதல் தயாரிப்பை இயக்குவது மகிழ்ச்சி. பிரபல மலேசிய நடிகர் யுவராஜ் கிருஷ்ணசாமி உள்ளிட்ட அனைவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக செல்லும் வகையில் ‘படைப்பாளி’ உருவாகியுள்ளது,” என்றார்.









