• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு தமிழில் ‘என்அன்பே’ என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

by Tamil2daynews
October 26, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அவள் பெயர் தமிழரசி ,விழித்திரு ஆகிய படங்களின் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்த இயக்குநர் மீராகதிரவன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும்  படம் ஹபீபி.அரபுச் சொல்லான ஹபீபிக்கு  தமிழில் ‘என்அன்பே’ என்று அர்த்தம். இதன் firstlook poster நேற்று வெளியாகி சமூகவளைத்தளங்களில் பெரும்வரவேற்பை பெற்றுள்ளது.

 

படம் குறித்து இயக்குநர் மீரா கதிரவன் கூறும்போது, “இப்படி ஒரு படம் பண்ண வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவிற்கு வந்தேன். இருபத்திரண்டுகளுக்கு பிறகு சாத்தியமாகியிருக்கிறது.   நமது ஆரவாரமான பேச்சுக்களை ஓதுக்கிவைத்துவிட்டு சகமனிதனின் தோளில் கைகளை போட்டவாறு மனங்களைப்பற்றி பேசவேண்டிய நேரமிது.   மனிதத்தையும் அன்பையும் சக மனிதன் மீதான சகிப்புத்தன்மையையும் பேசவேண்டிய தேவையுள்ளது.
இந்த படம் தமிழகத்தின் தென்பகுதியில் இருக்கும் தமிழ் பேசக்கூடிய இஸ்லாமியர்களின் வாழ்வியலை பற்றிய படமாக இருந்தாலும் எல்லா மக்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். இதன் பின்னணியில் ஒரு அழகான காதல் கதை ஒன்றும் பின்னப்பட்டுள்ளது.
இப்படத்தை காணும் அனைவரும் தங்கள் வாழ்கையோடு  தொடர்புபடுத்தி பார்த்து தங்களையே பார்த்துக்கொள்ளக்கூடியதாக  இருக்கும்.   அந்தவகையில் சர்வதேச அளவில் வியாபார ரீதியாகவும்  இந்த படம் சென்று சேரும் என்பதால் இந்த படத்திற்கு ஹபீபி என டைட்டில் வைத்துள்ளோம்

பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கஸ்தூரிராஜா இதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக அறிமுகமாகும் முதல் படம் இது என்றே சொல்லலாம். அவரது திரையுலக பயணத்திலும் இது ஒரு முக்கிய படமாக இருக்கும். இந்த படத்திற்காக கஸ்தூரிராஜாவை அணுகியபோது நான் முதலில் திரைக்கதையை படித்துப் பார்க்கிறேன் என்று கூறினார். இந்த கதை அவருக்கு பிடித்து போய் விட்டதுடன் இதில் தனது பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும் என்று கூறி இதில் நடிக்க ஒப்புக்கொண்டார். அறிமுக நாயகன் ஈஷா நடிக்க ஜோ என்கிற படத்தின் மூலம் இளைஞர்களிடேயே பெரிதும் கொண்டாடப்பட்ட மாளவிகா மனோஜ் நாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தை

மாநாடு, வணங்கான் படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை பார்த்துவிட்டு அவரே விருப்பப்பட்டு தனது வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில் வெளியிட இருக்கிறார்” என்று கூறினார்.

தொழில்நுட்ப குழுவினர் விவரம்
இயக்கம் ; மீரா கதிரவன்
இசை ; சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு ; மகேஷ் முத்துசுவாமி
படத்தொகுப்பு ; ராஜா முகமது
கலை ; அப்புன்னி சாஜன்
மக்கள் தொடர்பு ; A.ஜான்
Previous Post

ஹிட் லிஸ்ட் படத்தின் கதாசிரியர் தேவராஜ், நடிகர் விஜய்க்கு கடிதம்

Next Post

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Next Post

சசிகுமாரின் 'நந்தன்' படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • அக்கரன் திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “துடிக்கும் கரங்களுக்கு முன்.. துடிக்கும் கரங்களுக்கு பின்..” ; உண்மையை உடைத்து பேசிய விமல்

    0 shares
    Share 0 Tweet 0
  • பீஸ்ட் சரியா போகல, கொஞ்சம் யோசிங்கன்னு சொன்னாங்க..!

    0 shares
    Share 0 Tweet 0
  • பெல்-விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.