• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் – இல் கலக்கும் மிஸ் யூ…

by Tamil2daynews
December 18, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

Week end இல் வேகமெடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் – இல் கலக்கும் மிஸ் யூ…

 

என்.ராஜசேகர் இயக்கத்தில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் வெளியான மிஸ் யூ திரைப்படத்தை 7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனத்தின் சாமுவேல் மேத்யூ தயாரித்து இருக்கிறார்..

டிசம்பர் 13ஆம் தேதி, வெளியான மிஸ் யூ திரைப்படத்தின் முதல்நாள் காட்சிகள் ஓரளவு மக்களால் திரையரங்குகளில் பார்க்கப்பட்டது. ஆனால் பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் கொடுத்த அனுபவம், அவர்களை நேர்மறையாக விமர்சனம் செய்ய வைத்தது.. பார்த்தவர்கள் கொண்டாடியதுடன்,  குடும்பத்துடன் பார்க்க இத் திரைப்படம் நல்ல தேர்வு என ஆதரவு தெரிவித்தனர். பெரிய அளவில் ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் இத்திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி வெளியாகவில்லை என்றாலும்,  தற்பொழுது தரமான திரைப்படம் என்னும் மதிப்புடன் வார இறுதி நாட்களில் முன்பதிவை மும்மடங்கு பெருக்கி இருக்கிறது.

குறிப்பாக, ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிக்கும் படியான திரைப்படங்கள் வெளியாகி சில காலம் ஆகிவிட்டது. அந்தக் குறையை நீக்கி இருக்கிறது மிஸ் யூ திரைப்படம்.. திரையரங்கில் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து, பார்த்து, ரசித்து, சிரித்து, மகிழ்ச்சியுடன் திரையரங்கில் இருந்து வெளியேற இது ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அப்படி அந்த குடும்பங்கள் பகிரும் வார்த்தைகள் தான் மிஸ் யூ திரைப்படத்தின் வெற்றி ஆக மாறி இருக்கிறது. வித்தியாசமான காதல் கதை, அதற்கேற்ற திரைக்கதை, சிறப்பான நகைச்சுவை, ஆழமான வசனங்கள், அருமையான இசை என எல்லா அம்சமும் மிஸ் யூ படத்தை கொண்டாடும் காரணிகளாக மாறியுள்ளன.
Miss You Movie Review: Siddharth-Ashika Ranganath's self-aware love story works in parts - India Today

மிஸ் யூ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 மைல்ஸ் பெர் செகண்ட், பொதுமக்களின் நேர்மறையான விமர்சனங்களால் ஊக்கம் பெற்று, நம்பிக்கையுடன் மிஸ் யூ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த முயற்சி வரும் நாட்களில் மேலும் அதிகமாக,  திரையரங்குகளை நோக்கி ரசிகர்களை ஈர்க்கும் எனும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.

திரைத்துறை பின்னணியில் இயங்கி வருபவர்கள்  “மிஸ் யூ” படம் வரும் வாரங்களில் இன்னும் அதிகமாக,  திரையரங்குகளை நோக்கி பார்வையாளர்களை ஈர்க்கும் என கணித்துள்ளனர்.  தற்போதைய சூழ்நிலையில் குடும்ப உறவுகளை மைப்படுத்திய,  ஒரு ஃபீல் குட் காதல் திரைப்படம் வெளியாகி உள்ளது என்றால் அது மிஸ் யூ மட்டுமே. அதிலும்,  நகைச்சுவை, காதல், மனத்தைத் தொடும் காட்சியமைப்புகள் மட்டுமல்லாமல் நல்ல கதையம்சத்தையும் கொண்டுள்ளது மிஸ் யூ படம்.  அப்படிப்பட்ட ஒரு நல்ல படைப்பிற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைத்தால் அது எப்படிப்பட்ட வெற்றியை கொடுக்கும் என்பதை மிஸ் யூ திரைப்படம் உணர்த்தியுள்ளது.

தற்போது வெளியான படங்களில் ஒரு ஆச்சரியத்தக்க வெற்றியை தனதாக்கியிருக்கிறது மிஸ் யூ திரைப்படம்.
Previous Post

“கிராவனின் பயணத்தின் கதையை நேர்மையாகச் சொல்ல இதுவே ஒரே வழி.” – ‘கிராவன் தி ஹண்டர்’ ஏன் ‘ஆர்’ என மதிப்பிடப்பட்டது என்பது குறித்து ஜே.சி. சன்டோர்!

Next Post

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Next Post

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.