• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 75 இயக்குநர்கள் & முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘அஸ்திரம்’ பட டிரைலர்.

by Tamil2daynews
February 3, 2025
in சினிமா செய்திகள்
0
திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 75 இயக்குநர்கள் & முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘அஸ்திரம்’ பட டிரைலர்.
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக 75 இயக்குநர்கள் & முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து வெளியிட்ட ‘அஸ்திரம்’ பட டிரைலர்.

 

பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன சண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அஸ்திரம்’. கிரைம் இன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் ஷாம் கதாநாயகனாக நடிக்க, மாடலிங் துறையை சேர்ந்த நிரா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்த அனுபவம் பெற்றவர்.

‘அஸ்திரம்’ படத்தில் முக்கிய வேடங்களில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி, அருள் டி.சங்கர் மற்றும்  அறிமுக நடிகர் ரஞ்சித் DSM உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இதன் கதை,திரைக்கதையை எழுதியுள்ளார் கதாசிரியர் ஜெகன். த்ரில்லர் பாணியில் இந்த படம் விறுவிறுப்பான துப்பறியும் படமாக உருவாகியுள்ளது.

இந்தநிலையில் தமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த சீனியர் இயக்குநர்கள் முதல் சமீப காலமாக சின்ன சின்ன படங்களில் கூட தங்களது முத்திரைகளை அழுத்தமாக பதித்து வரும் இளம் இயக்குநர்கள் வரை மொத்தம் 75 பேரும்,   தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜய்சேதுபதி, விஷால், ஆர்யா, சரத்குமார், அருண்விஜய் மற்றும் யோகி பாபு என 6 பேரும் இன்று (ஜன-31) மாலை 6:04 மணிக்கு இந்த படத்தின் டிரைலரை ஒரே நேரத்தில் வெளியிட்டனர். சினிமா வரலாற்றிலேயே இப்படி இத்தனை பிரபலங்கள் ஒரு படத்தின் டிரைலரை ஒன்றிணைந்து வெளியிடுவது என்பது இதுவே முதன்முறை.

இந்த டிரைலர் வெளியீடு குறித்து ‘அஸ்திரம்’ பட இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் கூறும்போது, “ ‘அஸ்திரம்’ படத்தை வெகு ஜன மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு புதிய முயற்சியாக இந்த டிரைலர் வெளியீட்டை நடத்த முடிவு செய்தோம். அதற்காக நாங்கள் பல இயக்குனர்களை அணுகியபோது அனைவருமே எந்த மறுப்பும் சொல்லாமல் எங்களுக்கு அன்புடன் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அது மட்டுமல்ல படத்தின் டிரைலரை பார்த்த பெரும்பாலான இயக்குநர்கள் இந்த படம் நடிகர் ஷாமுக்கு இரண்டாவது இன்னிங்ஸை துவக்கி வைக்கும் படமாக இருக்கும் என உறுதிபட கூறினார்கள்.

மேலும் நடிகர் ஷாமும் இந்த படம் உருவாகியுள்ள விதம் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறார். வரும் பிப்ரவரி இறுதி வாரத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.  என்று கூறியுள்ளார்.

பார்க்கிங், மகாராஜா, கருடன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை வெளியிட்ட பைவ் ஸ்டார் நிறுவனம் ‘அஸ்திரம்’ படத்தை தமிழகமெங்கும் வெளியிட இருக்கிறது..

ஐரா, எட்டு தோட்டாக்கள், பொம்மை நாயகி ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமூர்த்தி இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

விரைவில் வெளியாக உள்ள ரேஞ்சர், ஜாக்சன் துரை 2 படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கல்யாண் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று படங்களில் துணை படத்தொகுப்பாளராக பணியாற்றிய பூபதி இந்த படத்தின் மூலம் படத்தொகுப்பாளராக அறிமுகம் ஆகிறார்.

கலை வடிவமைப்பை ராஜவேல், சண்டை பயிற்சியாளராக முகேஷ் பொறுப்பேற்றுள்ளார்கள்.

மக்கள் தொடர்பு ; A.ஜான்
Previous Post

ராஜ பீமா – விமர்சனம் ரேட்டிங் 3 / 5

Next Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட ‘ஆர் பி எம் ‘ ( R P M )படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர்

Next Post

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட 'ஆர் பி எம் ' ( R P M )படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர்

Popular News

  • ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹோப்’: உலகத் தரத்தில், திரைப்படமாகும் 30 நிமிட குறும்படம்

September 7, 2026

‘பிளாஸ்ட்’ பிளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் எம் எஸ் ஆனந்தன் இயக்கத்தில் ஜெய், பிரியங்கா மோகன், யோகி பாபு நடிக்கும் ‘ஏஜிஎஸ் 29’

September 7, 2026

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

September 7, 2026

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படக்குழுவினரை பாராட்டிய உலகநாயகன் கமல்ஹாசன் !!

September 7, 2026

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.