• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!

by Tamil2daynews
April 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!

 

கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில்  அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர்.

நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர்  பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.
இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான  கதைத்  தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும், அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார். இப்படத்தில் அவரது பாத்திரம் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கும்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகவுள்ளது.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

நடிகர்கள் :
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, தபு

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

Previous Post

‘ஐகான் ஸ்டார்’அல்லு அர்ஜுன் – இயக்குநர் அட்லி – சன் பிக்சர்ஸ் – கூட்டணியில் உருவாகும் பான் வேர்ல்ட் சினிமா

Next Post

குட் பேட் அக்லி (GBU) – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

குட் பேட் அக்லி (GBU) - விமர்சனம் ரேட்டிங் - 4 / 5

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0
  • அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.