ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி இன்று திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தை பெரியளவில் கொண்டாடி வருகிறார்கள். அர்ஜூன் தாஸ் , த்ரிஷா , பிரசன்னா , உள்ளிட்ட பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள் ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அஜித் குமார் ரசிகர்களுக்கான மாபெரும் கொண்டாட்டமாக அமைந்திருக்கிறது குட் பேட் அக்லி படம். பழைய சூப்பர் ஹிட் படங்களின் ரெபரன்ஸை வைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஆதிக். அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதே சமயம் அஜித் ரசிகர் இல்லாதவர்களுக்கும், பழைய படங்கள் பற்றி தெரியாதவர்களுக்கும் இதெல்லாம் என்னவென்ற குழப்பம் ஏற்படலாம்.
அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார் திரிஷா.
இதனால் அஜித் போலிஸிடம் சரண்டர் ஆகி, திருந்தி 17 வருடம் கழித்து தன் பழைய கேங்ஸ்டர் வாழ்கையை மறைத்து மகனை பார்க்க வருகிறார்.அப்படி பார்க்க வந்த இடத்தில் அஜித் மகனை அர்ஜுன் தாஸ் போலிஸிடம் ஏதோ ஒரு காரணத்துகாக சிக்க வைக்கிறார். இதனால் குட் இருந்த அஜித் பேட் ஆக மாறுகிறார்.
அர்ஜுன் தாஸ் ஏன் தன் மகனை ஜெயிலுக்கு அனுப்பினார் காரணத்தை தெரிந்து தன் மகனை ஜெயிலில் இருந்து AK மீட்டாரா என்ற சரவெடியே இந்த GBU மீதிக்கதை.
அஜித் ஒன் மேன் ஷோ தான் இந்த குட் பேட் அக்லி. ஆதிக் ஒவ்வொரு ப்ரேமும் ரசித்து ரசித்து எடுத்துள்ளார், இந்த அஜித்தை தானயா கேட்கிறோம் என ரசிகர்கள் ஆர்பரிப்பு தான் அஜித்தின் பெர்ப்பாமன்ஸ் படம் முழுவதும்.குட் அப்பாவாக எல்லோரையும் கலாய்த்து ஜாலியாக இருக்க மகனுக்காக பேட் ஆக மாற அவர் எடுக்கும் செய்யும் காட்சிகள் சரவெடி தான். அதிலும் இடைவேளை போது பேங் ஆ, மொட்டையா என்ற காட்சி மங்காத்தா பிறகு ஒரு அடி தூள் இண்டர்வெல்.

அர்ஜுன் தாஸ் இவர் எப்படி அஜித்திற்கு வில்லன் என கேட்டவர்களுக்கு நல்ல பதிலடி, 2கே கிட்ஸ் அஜித்தை வம்பு இழுத்தால் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்துள்ளார்கள்.
படம் முழுவதும் அஜித் ரெபரன்ஸ் என ரசிகர்கள் கத்திக்கொண்டே இருக்கட்டும் என நினைத்தார் போல ஆதிக், ஏதாவது வந்துக்கொண்டு இருக்கிறது.

அதே நேரத்தில் இந்த பழைய பாடல், சவுண்ட் எல்லாம் ஒரு கோட்டத்திற்கு மேல் போதும்ப்பா என்ற சலிப்பையும் தட்டுகிறது, ஆதிக் அதை கொஞ்சமாக பயன்படுத்துங்கள், லாஜிக் கொஞ்சம் கூட எதிர்ப்பார்க்க கூடாது போல.
படம் முழுக்க இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ராஜ்ஜியம் படைத்திருக்கிறார்.
படத்தில் முழுக்க முழுக்க அஜித்தோட ராஜ்ஜியம் தெறி பறக்கிறது.
அஜித் குமாரை இப்படி பெரிய திரையில் காட்டி ரசிகர்களை உற்சாகப்படுத்த சரியான ஆள் நான் தான் என நிரூபித்துவிட்டார் ஆதிக் ரவிச்சந்திரன். தியேட்டர்களில் தொடர்ந்து விசில் சத்தமாக கேட்கிறது. மசாலாவை தூக்கலாக வைத்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் ஆதிக்.