• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

by Tamil2daynews
June 4, 2025
in சினிமா செய்திகள்
0
எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எழுச்சித் தமிழர்’ தொல்.திருமாவளவன் வெளியிட்ட ‘குயிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

 

B M ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் நடிகை லிசி ஆண்டனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘குயிலி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் ‘எழுச்சித் தமிழர்’ தொல். திருமாவளவன் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும், நடிகருமான பாலாஜி சக்திவேல் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள ‘குயிலி’ திரைப்படத்தில் லிசி ஆண்டனி, ரவி சா, தாஷ்மிகா, தீப்தி, புதுப்பேட்டை சரவணன், ராட்சசன் சரவணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பிரவீண் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜூ ஸ்மித் இசையமைத்திருக்கிறார். ஒரு தாயின் வைராக்கியம் மிக்க தொடர் வாழ்க்கை போராட்டத்தை எடுத்துக்காட்டும் விதமாகவும் மதுவின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை விநியோகஸ்தர் மோகன் வெளியிடுகிறார்.

விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு நிகழ்வில் படக்குழுவினருடன் மக்களவை உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன், இயக்குநரும் நடிகருமான பாலாஜி சக்திவேல், இயக்குநர் ஸ்ரீஜர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் அருண் குமார் பேசுகையில், ”இங்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த அனைவரையும் வரவேற்கிறேன். இப்படம் சிறப்பாக உருவாவதற்கு உழைத்த படக்குழுவினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில் என்னுடைய பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் ‘ஏமாற்றாதே’, ‘பொய் சொல்லாதே’, ‘திருடாதே’, ‘கடினமாக உழைத்தால் வெற்றி கிடைக்கும்’ என்ற விஷயங்களை சொல்லிக் கொடுத்து வளர்த்தனர். அவற்றை பின்பற்றி இப்படத் தயாரிப்பின் போது பல தடைகள், தாமதங்கள் ஏற்பட்டாலும் அனைத்தையும் கடந்து வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறோம். இதற்காக கடினமாக உழைத்த ‘குயிலி’ பட குழுவினர் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  இந்த திரைப்படத்திற்காக முதலீடு செய்த நண்பர்களையும் வாழ்த்துகிறேன், வரவேற்கிறேன், நன்றி தெரிவிக்கிறேன்.

இந்தத் திரைப்படம் ஒரு அம்மாவின் வலியை பேசுகிறது. ஒரு அம்மா தன் மகனை வளர்ப்பதற்காக எவ்வளவு சவால்களை எதிர்கொள்கிறார்கள்?எவ்வளவு போராட்டங்களை சந்திக்கிறார்கள்? அவர்கள் வாழ்க்கையில் இறுதிவரை எப்படி போராடுகிறார்கள்? என்பதை இப்படம் விவரிக்கிறது. குயிலியாக நடித்த நடிகை லிசி ஆண்டனி உள்ளிட்ட இப்படத்தில் நடித்த அனைத்து நட்சத்திரங்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இது கமர்ஷியல் படமாக இல்லாமல் சமூகத்திற்கான படமாக உருவாகி இருக்கிறது.‌ இதற்காக இயக்குநரை பாராட்டுகிறேன். இந்த திரைப்படம் வெளியான பிறகு படத்தை பார்த்தவர்களில் ஐந்து சதவீத மக்களாவது தங்களை திருத்திக் கொண்டால்.. அதுவே இப்படத்தின் வெற்றியாக கருதுகிறோம்,” என்றார்.

நடிகை தாஷ்மிகா பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிப்பதற்கு எனக்கு திடீரென்று வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு இந்த தருணம் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு படப்பிடிப்பில் சிறிய வேடத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது இப்படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வந்தது. குடிக்கு எதிரான படத்தில் நீங்கள் நாயகியாக நடிக்க வேண்டும் என படக் குழுவினர் சொன்னவுடன் உற்சாகம் அடைந்தேன். என் மேல் நம்பிக்கை வைத்து இந்த கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி,” என்றார்.
மூத்த தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், ”குறிப்பிட்ட சமுதாயத்திற்கோ, குறிப்பிட்ட சாதிக்கோ இல்லாமல்,  எல்லாருக்குமான தலைவராகவும், ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் தலைவராக திகழும் தொல் திருமாவளவனை வருக, வருக என வரவேற்கிறேன்.

அவர் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே எனக்கும், அவருக்கும் பழக்கம் உண்டு. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெறும் தருணத்தில் நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்வோம்.

இந்தியா கூட்டணி உருவாவதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினை போல் இவருக்கும் பங்கு இருக்கிறது. பாராளுமன்றத்தில் இவருடைய குரல் ஓங்கி ஒலித்திருக்கிறது, ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

பி எம் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ‘குயிலி’ திரைப்படம் அற்புதமான குடும்ப படம். ஒரு தாய் தன் குடும்பத்திற்காக எப்படி போராடுகிறார் என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக இயக்குநர் முருகசாமியையும் இப்படத்தை துணிச்சலுடன் தயாரித்த தயாரிப்பாளர் அருண்குமாரையும் பாராட்டுகிறேன்.

இந்தத் திரைப்படம் குடிகாரர்களை ஒழிப்பதற்காக எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் கவர்ச்சி இல்லை, ஓரளவு அறிமுகமான நடிகர்களை வைத்து இயற்கையாக உருவாக்கியிருக்கிறார்கள். குடியினால் என்ன கொடுமை நடைபெறுகிறது என்பதை அற்புதமாக சொல்லி இருக்கிறார்கள்.

நான் தமிழக முதல்வருடனும், திருமாவுடனும் நெருக்கமாகத் தான் இருக்கிறேன். ஆனால் இந்த மது விஷயத்தில் சற்று விலகியே இருக்கிறேன். குடி பல குடும்பங்களை கெடுத்திருக்கிறது. பல குடும்பங்கள் பலியாகி இருக்கிறது. அதனால் குடியை தமிழகத்திலிருந்து மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதற்கு தடை விதிக்க வேண்டும்.

தற்போதுள்ள சூழலில் 20 முதல் 25 சதவீத பெண்களும் குடிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் நாடு மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது.

அதனால் தமிழக முதல்வரை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் ஒரு வழியில் மதுவை ஒழிக்க வேண்டும்.

இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. ஆனால் என்னை பொருத்தவரை இந்த படத்திற்கு இத்தனை பாடல்கள் தேவை இல்லை. திரையரங்கத்தில் பாடல் காட்சிகளை ரசிகர்கள் விரும்பி பார்ப்பதில்லை. ஆனால் இந்த பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. கருத்துள்ள பாடல் இருக்கிறது, மது ஒழிப்பை பற்றி பேசுகிறது, மதுவால் தாய்மார்கள் படும் வேதனையை பேசுகிறது. இதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதை பெருமிதமாக கருதுகிறேன். இப்படம் வெற்றி பெற வேண்டும். படத்திற்கு முதலீடு செய்த பணம் தயாரிப்பாளருக்கு திரும்ப கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன். இதற்கு தமிழ் ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

முன்னணி நடிகர்கள் திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என தயாரிப்பாளர்களிடத்திலும் , இயக்குநர்களிடத்திலும் பரிந்துரைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இந்தப் படத்தை எளிய மனிதர்களின் பார்வையில் இருந்து இயக்கியிருக்கிறார். அதில் வீரியம் இருக்கும். இதுதான் இப்படத்தின் பலம். இப்படத்தின் திரைக்கதையும் நன்றாக அமைத்து இருப்பார் என்று நம்புகிறேன். இந்தப் படம் வெற்றி பெற அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை லிசி ஆண்டனி பேசுகையில், ”சுய விருப்பம், கடின உழைப்பு, விடாமுயற்சி, பொறுமை ஆகிய நான்கு விஷயங்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்திருப்பவள். இதைத்தான் நான் என் வாழ்க்கையில் தற்போது வரை கடைப்பிடித்து வருகிறேன். இந்த விஷயங்களை தயாரிப்பாளர் அருண்குமாரிடமும் நான் பார்த்தேன்.

இந்தப் படத்திற்கான அழைப்பு அவரிடம் இருந்து தான் எனக்கு முதலில் வந்தது. அவரே இப்படத்தின் கதையை என்னிடம் விவரித்தார். என் வாழ்க்கையில் முதல் முதலாக தயாரிப்பாளர் ஒருவர் கதையை அழகாக சொன்னது என்றால் அது இவர் தான். அந்த அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது. இந்த திரைப்படம் பேசும் விஷயமும் எனக்கு பிடித்திருந்தது.

இந்தப் படத்திற்கு ‘குயிலி’ என்று தான் தலைப்பு இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் சொன்னேன். உடனே அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்.

இந்தப் படம் வெற்றி பெறுவதற்கு ரசிகர்களும், ஊடகங்களும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், ”சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பழங்குடி இன மக்கள் மீதான ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி இயக்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதால் இங்கு இந்நிகழ்ச்சிக்கு
மதுவால் ஏற்படும் பிரச்சனை என்ன என்பது அதனால் பாதிக்கப்பட்டவர்கள் சொல்லும்போது தான் பொருத்தமாக இருக்கும். ஒரு சில தருணங்களில் உண்மையை சொல்லலாம். அது அனைவருக்கும் பயன்படும்…
நானும் மது பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு இப்படத்தின் பாடல்களை எழுதி இருக்கிறேன். இதற்கு உறுதுணையாக என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் இருந்தனர்…
மதுவை தொடாதீர்கள். தொட்டாலும் அதனை விட்டு விடுங்கள். அப்போதுதான் உங்களிடம் மகிழ்ச்சி இருக்கும்,” என்றார்.
Previous Post

”உம்மா தர்ரேன்…” பாடல் மூலம் பிரலமான ‘ராஜபுத்திரன்’ கே.எம்.சபி !., விரைவில் ஹீரோ அவதாரம் எடுக்கிறார் !!

Next Post

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

Next Post
கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின்  சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

Popular News

  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.