• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

காட் ஆஃப் மாஸஸ்’ , ‘பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

by Tamil2daynews
June 10, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

காட் ஆஃப் மாஸஸ்’ , ‘பத்ம பூஷண்’ டாக்டர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் ‘அகண்டா 2: தாண்டவம்’ படத்தின் டீஸர் வெளியீடு

 

‘காட் ஆப் மாஸஸ் ‘ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் நடிப்பில் தயாராகி, ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் ‘அகண்டா 2 : தாண்டவம்’. பாலகிருஷ்ணாவுடன் நான்காவது முறையாக இயக்குநர் போயபதி ஸ்ரீனு இணைந்திருக்கிறார். மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘அகண்டா’ திரைப்படத்தின் தொடர்ச்சியாக அகண்டா படத்தின் இரண்டாம் பாகம், அதிரடி மிக்க ஆக்சன் படைப்பாக இருக்கும் என படக் குழு உறுதி அளிக்கிறது. ஆக்சன் காட்சிகள்- ஆன்மீக பின்னணியுடன் கலந்திருக்கிறது. இந்த திரைப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார்.

‘ பத்மபூஷண் ‘நந்தமுரி பாலகிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயாரிப்பாளர்கள் ‘ அகண்டா 2 : தாண்டவம்’ படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். படக்குழு, படத்தின் நாயகனான பாலகிருஷ்ணாவிற்கு பிறந்தநாள் பரிசாக இந்த டீசரை வெளியிட்டுள்ளனர்.
Imageஇந்த டீசரில் பாலகிருஷ்ணாவின் பரபரப்பான மிரட்டலான தோற்றம் – அவரது கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக தோன்றக்கூடிய மூர்க்கத்தனமும், தெய்வீகத்தின் ஆற்றலும் கலந்த கலவையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் போயபதி ஸ்ரீனு மீண்டும் ஒருமுறை பாலகிருஷ்ணாவை வேறு எவரையும் விட நன்றாக புரிந்து வைத்திருப்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் நட்சத்திர பிம்பத்தை கூடுதலாக பிரகாசிக்கும் வகையில் படத்தின் டீசரை அவர் உருவாக்கி இருக்கிறார்.

நந்தி – திரிசூலம் – பனி மூடிய கைலாசம் இவற்றின் பின்னணி பார்வையாளர்களை வசீகரிக்கிறது. அத்துடன் கதாபாத்திரத்தின் நுட்பத்தையும், படம் பேசும் விசயத்தையும் பிரதிபலிக்கிறது. பாலகிருஷ்ணாவின் கம்பீரமான தோற்றமும், நடையும் தனித்துவமான அடையாளத்தை உறுதிப்படுத்துகிறது.

அவர் குண்டர்களை ஒதுக்கி தள்ளும் காட்சிகளும், திரிசூலத்துடன் கூடிய ஷாட்டும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்கிறது. சண்டை பயிற்சி இயக்குநர்களான ராம்- லக்ஷ்மன் பாலகிருஷ்ணாவின் திறமையை துல்லியமாக வடிவமைத்துள்ளனர். அவரது உரையாடல் எப்போதும் போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

எஸ். தமனின் பின்னணி இசை, டீசரை தெய்வீகமான உணர்வுக்கு உயர்த்துகிறது. பாலகிருஷ்ணாவின் தோற்றம் பிரம்மாண்டத்தை நிறைவு செய்கிறது. பாலகிருஷ்ணாவிற்கு இசையமைத்திருப்பதன் மூலம் தமன் முற்றிலும் மற்றொரு உலகத்தை உருவாக்கியிருக்கிறார்.

14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனத்தின் தயாரிப்பின் தரம் மிக உயர்ந்தவை என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டமும், செழுமையும் இணைந்திருக்கின்றன.

இந்த டீசரின் ஒவ்வொரு ஃபிரேமும் .. குழுவினரின் பேரார்வத்துடன் கூடிய அர்ப்பணிப்பை உணர்த்துகிறது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் நடைபெற்று வருகிறது. அங்கு ஒரு வியப்பில் ஆழ்த்தக்கூடிய காட்சிக்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

நவராத்திரி திருவிழா விடுமுறை தினத்தை கொண்டாடும் வகையில் செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் ‘அகண்டா 2 :-தாண்டவம்’  படம் வெளியாகும் என தயாரிப்பாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இப்படத்தின் தெய்வீகம் .. தேசம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை காந்தம் போல் ஈர்க்கும் என்பது உறுதி. இந்த டீசர் ஏற்கனவே அந்த மாயஜாலத்தை நிகழ்த்தியுள்ளது.

‘அகண்டா 2: தாண்டவம் ‘ படத்தில் நடிகர் ஆதி பினிஷெட்டி வில்லனாக நடிக்கிறார். ‘அகண்டா’ படத்தின் முதல் பாகத்தில் நாயகனுக்கு ஜோடியாக நடித்த சம்யுக்தா இதிலும் நாயகியாக தொடர்கிறார். இந்த திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.

சி . ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தம்மிராஜு கவனிக்க கலை இயக்குநராக ஏ. எஸ் .பிரகாஷ் பணியாற்றி வருகிறார்.

நடிகர்கள் :
‘காட் ஆப் மாஸஸ் ‘ நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி .

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : போயபதி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா
தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் : எம் தேஜஸ்வினி நந்தமுரி
இசை : எஸ். தமன்
ஒளிப்பதிவு : சி. ராம் பிரசாத் – சந்தோஷ் டி டெடகே
கலை : ஏ .எஸ். பிரகாஷ்
படத்தொகுப்பு : தம்மிராஜு
சண்டை பயிற்சி : ராம் – லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

Previous Post

வார் 2 படத்தில் ஜூனியர் என்.டி.ஆரை ஒரு ஸ்டைல் ஆன மனித இயந்திரம் போன்று செயல்படுவதைக் காட்ட வேண்டியிருந்தது!’ : அனைதா ஷ்ராஃப் அட்ஜானியா

Next Post

SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

Next Post

SunNXT உடன் ஒரு மாஸ் மாதத்தை அனுபவிக்க தயாராகுங்கள்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.