• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

by Tamil2daynews
August 8, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

 

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’, நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது.

பிரம்மாண்டமாக உருவாகும் “வடம்” படம், கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில்,  படக்குழுவினர் கலந்துகொள்ள 1500 பேருக்கு அன்னதானம் அளித்து, பிரம்மாண்ட பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது.

தமிழக கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்று மஞ்சுவிரட்டு, கிராம மக்கள் உயிராக நேசிக்கும் வட மஞ்சு விளையாட்டின் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் முதல் முறையாக மஞ்சு விரட்டு விளையாட்டை மையமாக வைத்து வடம் படம் உருவாகிறது. மேலும் காதல், நட்பு மற்றும் குடும்ப உணர்வைக் கூறும் கதையம்சத்துடன், கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகிறது.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்தில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டிருக்கும் நடிகர் விமலின் அடுத்த திரைப்படமாக வடம் உருவாகிறது. தமிழ் திரையுலகில் கால் பதித்திருக்கும் மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம், தங்களது முதல் தயாரிப்பாக இப்படத்தை தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக சங்கீதா நடிக்கிறார். மேலும் இவர்களுடன் பாலசரவணன், நரேன், ராமதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் V. கேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை பிரசன்னா எஸ் குமார் மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொள்கிறார். இந்தப் படத்திற்கு வி.சசிகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

சண்டைப்பயிற்சியை முருகன் வழங்க, தயாரிப்பு மேற்பார்வையை K.R.பாலமுருகன் கவனிக்கிறார். இந்தப் படத்தை மாசாணி பிக்சர்ஸ் நிறுவனமும் சன் மாறோ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின்  படப்பிடிப்பை மதுரை, பொள்ளாச்சி, காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
Previous Post

அறிமுக நடிகர் வினோத் நடிக்கும் ‘பேய் கதை’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

Next Post

ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா

Next Post

ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. 'கூலி' மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.