• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா !!

by Tamil2daynews
August 12, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
அகண்டா 2 தாண்டவம் படத்தின் டப்பிங்கை முடித்துள்ளார் காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா !!

காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா,  பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), ராம்  அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta), 14 ரீல்ஸ் பிளஸ் (14 Reels Plus), M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 அகண்டா 2: தாண்டவம் பட டப்பிங்கை முடித்துள்ளார். இப்படம்  செப்டம்பர் 25 ஆம் தேதி திரையரங்கு வெளியாகிறது.

‘காட் ஆஃப் தி மாஸஸ்’ நந்தமூரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu) கூட்டணி, நான்காவது முறையாக இணைந்து, மிகவும் எதிர்பார்க்கப்படும், அதிக வரவேற்பைப் பெற்ற  ‘அகண்டா 2 : தாண்டவம்’ படத்தில் பணியாற்றி வருகின்றனர். தற்போது போஸ்ட்-புரொடக்‌ஷன் கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், மிகப்பெரிய பட்ஜெட்டில்,  மிகச்சிறந்த தொழில்நுட்பத் தரத்தில், பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் கீழ் ராம் அச்சந்தா (Raam Achanta) மற்றும் கோபிசந்த் அச்சந்தா (Gopi Achanta) இணைந்து  தயாரிக்கும்  இந்தத் திரைப்படத்தை,  M தேஜஸ்வினி நந்தமூரி (M Tejaswini Nandamuri) பெருமையுடன் வழங்குகிறார். திரையரங்க வெளியீடு வேகமாக நெருங்கி வருவதால், மீதமுள்ள அனைத்து போஸ்ட்-புரொடக்‌ஷன் பணிகளையும் திட்டமிட்ட நேரத்திற்கு முன்பே முடிக்க படக்குழு அயராது உழைத்து வருகிறது.
இப்படத்தின் டீசர் ஏற்கனவே இணையத்தையே பரபரப்பாக்கியுள்ளது. நந்தமுரி பாலகிருஷ்ணா இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு புதிய அவதாரத்தில் மிரட்டலான தோற்றத்தில் தோன்றி, ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளார். படத்தைக் காண ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

டோலிவுட்டின் அதிர்ஷ்ட தேவதை எனக் கொண்டாடப்படும் நடிகை சம்யுக்தா (Samyuktha) மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பன்முகத் திறமை கொண்ட ஆதி பினிசெட்டி ( Aadhi Pinisetty) இப்படத்தில் தீவிரத்தையும் ஆழத்தையும் கொண்டு வரும்,  கதையில் தனித்து நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார், ஹர்ஷாலி மல்ஹோத்ரா (Harshali Malhotra) ஒரு முக்கிய வேடத்தில் டோலிவுட் அறிமுகமாகிறார்.

மிகச்சிறந்த தொழில்நுட்பக் குழுவினர் பணியாற்றும், அகண்டா 2: தாண்டவம் படத்தில் இசையமைப்பாளர் S. தமன் அற்புதமான இசையை வழங்குகிறார், C. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார். தம்மிராஜு  எடிட்டிங்  செய்கிறார், மேலும் அகண்டாவின் உலகத்தை  கலை இயக்குநர் A.S. பிரகாஷின் அற்புதமான அரங்க அமைப்புகளால் உயிர்ப்பித்துள்ளார்.

படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால், படத்தின் விளம்பர பணிகளைத் தீவிரப்படுத்தத் தயாரிப்பாளர்கள் தயாராகி வருகின்றனர், தொடர்ந்து புதுப்புது அறிவிப்புகளை வெளியிடுவதன் மூலம், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறார்கள்.

நடிகர்கள்: காட் ஆஃப் மாஸ் நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிசெட்டி, ஹர்ஷாலி மல்ஹோற்றா

தொழில்நுட்பக் குழு:

எழுத்து, இயக்கம் : போயபதி ஸ்ரீனு தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா
பேனர் : 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் : M தேஜஸ்வினி நந்தமூரி
இசை: தமன் எஸ்
ஒளிப்பதிவு : C ராம்பிரசாத், சந்தோஷ் D டெடகே
நிர்வாக தயாரிப்பாளர்: கோடி பருச்சுரி
கலை: A.S.பிரகாஷ்
எடிட்டர்: தம்மிராஜு
ஸ்டண்ட் : ராம்-லக்ஷ்மன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Previous Post

28 ஆண்டுகளுக்குப் பிறகு டிஸ்கோ சாந்தி ஶ்ரீஹரி ‘புல்லட்’ படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-எண்ட்ரி

Next Post

மலைக் கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன் மகிழ்ச்சி

Next Post

மலைக் கிராம மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது ‘கெவி’ ; -இயக்குநர் தமிழ் தயாளன் மகிழ்ச்சி

Popular News

  • சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ராம் அண்ட் லீலா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பூந்தமல்லியில் ஜஸ்’ ஆன்கோவின் (Jus’ Onco) 4-வது புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு தரமான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் மக்களுக்கு அருகில் கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒன்மேன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

”நல்ல கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் வரவேற்பார்கள். ’மொத ராத்திரி’ திரைப்படமும் நிச்சயம் அவர்களை மகிழ்விக்கும்”: தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர்!

August 21, 2026

அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

August 21, 2026

செம்போஸ்கி மோஷன் பிக்சர்ஸ், ஃபார்ஸ் ஃபிலிம்ஸ் வழங்கும் ‘டிஸ்கோ’ – நவம்பர் 6-ல் உலகமெங்கும் ரிலீஸ்!

August 21, 2026

விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

August 21, 2026

சாய்ரா இயக்கி நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஹலோ மிஸ்’

August 21, 2026

“பார்வையாளர்கள் ஒவ்வொருவரின் மனதை நெகிழ வைக்கும் குடும்பம், உணர்வு மற்றும் மாற்றத்தின் கதைதான் ‘இருமுடி கட்டு’”: மைத்ரி மூவி மேக்கர்ஸ்!

August 21, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.