• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”

by Tamil2daynews
August 27, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஹாலிவுட் க்ராஃப்ட் + இந்தியா பவர்: யாஷ் டாக்ஸிக் (Toxic )படத்தில் JJ Perry-யின் 45 நாள் சாகசம்”

 

“யாஷ், கீத்து மோகன்தாஸ் (Geetu Mohandas )ஆகியோருடன் பணிபுரிவது என் கரியரில் மறக்க முடியாத தருணம்” – JJ Perry

மும்பையின் இடையறாத மழைக்காலம் காரணமாக பல படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டாலும், “டாக்ஸிக் –  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”  (Toxic: A Fairytale for Grown-ups) படக்குழு, அதற்கு மாறாக புயலை சவாலாக எடுத்துக்கொண்டு, அன்புடன் தழுவிக்கொண்டுள்ளது. இந்திய சினிமாவில் இதுவரை எடுக்கப்பட்ட மிகப் பெரிய ஆக்ஷன் ஷெட்யூல்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த 45 நாள் ஆக்ஷன் படப்பிடிப்பை, John Wick, Fast & Furious, Day Shift போன்ற படங்களில் தனது ஆக்ஷன் காட்சிகளால் உலகம் முழுவதும் பாராட்டைப் பெற்ற ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர் JJ Perry தற்போது மும்பையின் மத்தியபகுதியில் நடத்தி வருகிறார்.

பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் இதற்கு முன்பு பல்வேறு நாடுகளிலிருந்து சர்வதேச ஸ்டண்ட் நிபுணர்களை இணைத்திருந்த Perry, இப்போது முழுக்க முழுக்க இந்திய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மட்டுமே பணியாற்றத் தீர்மானித்துள்ளார். அவர்களின் அர்ப்பணிப்பையும் துல்லியத்தையும் நேரடியாகக் கண்ட பிறகு தான் இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து JJ Perry  கூறுகையில்..
“இந்திய குழு உலகத் தரம் வாய்ந்தது. அதனால்தான் நான் இவர்களுடன் பணிபுரியத் தீர்மானித்தேன். நாங்கள் தற்போது ஒரு மிகப்பெரிய சீக்குவென்ஸை எடுத்து வருகிறோம். இது ஒரு சவாலான பணி, ஆனாலும் நான் சவால்களை விரும்புவன். இந்தக் குழு அதை நேருக்கு நேர் எதிர்கொள்கிறது. இதுவரையிலான ஆக்சன் காட்சிகளின் எல்லைகளை கடந்து புதியதை உருவாக்குவதே  எங்கள் நோக்கம் – அதுதான் சினிமா”.
மாதக்கணக்கான முன் தயாரிப்பு பணிகள் மூலம் உருவான இந்தக் காட்சி – Perry, ஹீரோவும் தயாரிப்பாளருமான யாஷ், இயக்குநர் கீத்து மோகன்தாஸ், DNEG மற்றும் தயாரிப்பாளர் வெங்கட் K. நாராயணா ஆகியோரின் கூட்டு முயற்சியால் சாத்தியமானது. குறிப்பாக யாஷ் – வெங்கட் கே. நாராயணா கூட்டணி, பெரிய அளவிலான இந்தப் படத்திற்குத் தேவையான பெரும் பட்ஜெட்டையும், வசதிகளையும் பெற்றுத்தருவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

இந்த ஆக்ஷன் சீக்குவென்ஸ் – ஸ்டோரி போர்டுகள், துல்லியமான பயிற்சிகள், கலை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றின் மூலம் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்டது. இந்திய சினிமாவுக்கு புதிதாக, உயிரோட்டமுள்ள, ஒரு முழுமையான ஆக்ஷன் அனுபவத்தை உருவாக்குவதே இதன் நோக்கம்.

“என் 35 வருட அனுபவத்தில், நான் 39 நாடுகளில் வேலை செய்திருக்கிறேன். நான் இந்திய சினிமாவின் ரசிகன். இந்திய சினிமா படைப்பாற்றலானது, கலைநயம் நிறைந்தது, துணிச்சலானது. யாஷ், கீத்து, வெங்கட் மற்றும் அவர்களின் அற்புதமான குழுவுடன் இணைவது என் வாழ்க்கையின் சிறப்பான தருணம். கீத்துவின் கலைநோக்கு பார்வை அபாரமானது. ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலைக்குழுவின் பங்களிப்பு மிகச் சிறந்தது” என Perry பகிர்ந்துள்ளார்.

மும்பையில் நடைபெற்று வரும் இந்தப் படப்பிடிப்பு, இந்திய சினிமாவில் ஒரு முக்கியக் கட்டமாகும். Toxic இந்தியாவின் முதல் மிகப்பெரிய அளவிலான இருமொழிப் படம் – ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்படுகிறது. இதற்குப் பிறகு இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இத்தகைய தைரியமான முயற்சி, கதையின் உண்மைத்தன்மையை பாதுகாப்பதோடு மட்டுமல்லாது, உலகளாவிய பார்வையாளர்களையும் இணைக்கும்.

“இந்திய கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானது, செழிப்பானது, பல அடுக்குகளால் ஆனது. நான் வாழும் அமெரிக்க கலாச்சாரம் சில நூற்றாண்டுகளே பழமை வாய்ந்தது. ஆனால் இங்கே வந்து, உலகளாவிய சினிமா பாணியை இந்தியக் கதைகளுடன் இணைப்பது எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. அதனால் ஏற்கனவே செய்ததை மீண்டும் செய்ய விரும்பவில்லை – புதிதாக ஒன்றை உருவாக்கவே விரும்புகிறேன். Toxic எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுக்கிறது” என Perry கூறினார்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து தயாரிக்கும் “டாக்ஸிக் –  எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்”  (Toxic: A Fairytale for Grown-ups), KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாகும். ஆழமும், அதேசமயம் கவரும் காட்சியமைப்புகளும் கலந்த இந்தப் படம், 2026 மார்ச் 19 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

Previous Post

பெண்களின் சமத்துவ தினத்தை முன்னிட்டு உருவாகியுள்ள ‘பட்டர்ஃபிளை’ ஆல்பம்

Next Post

VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு — “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Next Post

VYOM எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பு — “Untitled Production No.1” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.