• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!

by Tamil2daynews
August 27, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட காதல் கவிதையாக உருவாகிறது ’18 மைல்ஸ்’!

 

பதினெட்டு மைல்களுக்கு அப்பாலும் வானம் ஒரே மாதிரியாக இருக்கலாம். ஆனால், வாழ்க்கை வெவ்வேறானது. முடிவில்லாத கடல், அமைதி, தொலைவு, சொல்லப்படாத காதல் எனப் பல விஷயங்கள் இதில் இருக்கிறது. இவற்றை எல்லாம் பேசும் கடலோர காதல் கதை ’18 மைல்ஸ்’ என்கிறது குழு. சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னா நடிப்பில் உருவான இந்த உணர்வு உங்கள் மனங்களை ஊடுருவி ஆன்மாவைத் தொடும். சித்து குமார் இசையமைப்பில், விக்னேஷ் ராமகிருஷ்ணா பாடல்கள் எழுதியுள்ளார்.

கே எழில் அரசுவின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் கவிதையாக விரியும். நாஷின் படத்தொகுப்பும் எம். தேவேந்திரனின் கலை வடிவமைப்பும் நம் உணர்வுகளை தாலாட்டும்.

இவற்றை எல்லாம் தாண்டி நடிகர்கள் அசோக் செல்வன் மற்றும் மிர்னாவுக்கு இடையிலான காதல் காலம் தாண்டியது. அவர்களின் பார்வையும் மெளனமும் கவிதையாக பார்க்கலாம். இசையின் கடைசி ரிதம் வரையிலும் பாடலை நம் மனதால் உணரலாம்.

இயக்குநர் சதீஷ் செல்வகுமார் கூறியதாவது “காதல் உலகமொழி என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லைகளும் சர்வதேச நீர்நிலைகளும் காதலுக்கு இன்னும் ஒரு தடையாகவே இருக்கிறது. இதை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச நிகழ்வு ஒன்றை காட்சி படுத்த விரும்பினேன். தற்காலிகமாக தங்குவதற்கு இடம் தேடும் ஒரு அகதி கடலின் சட்டத்தை இயற்றுபவரின் இதயத்தில் இடம் பிடிக்கிறார். மனிதர்களின் உணர்வுகளுக்கு கடலும் அதன் அலையும் மெளன சாட்சியாக எப்போதும் இருக்கும். கடலை போலவே காதல் அழகானது. அதே சமயத்தில் கடலின் ஆழத்தை போல ஆபத்தானதும் கூட! நிலம்தான் இங்கு அரசியல். உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் நிச்சயம் இந்த கதையுடன் இணைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்” என்றார்.
Previous Post

பிஸ்கான்’25 – சிடிஎம்ஏ தொடக்க விழா தொழில்முனைவோருக்கு புதிய உந்துதல், புதுமை மற்றும் நவீன சிந்தனைகள்

Next Post

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் – தெஸ்பியன் பிலிம்ஸ் இணையும் ஹைவான் படப்பிடிப்பு தொடக்கம்!!

Next Post

கே.வி.என். புரொடக்ஷன்ஸ் - தெஸ்பியன் பிலிம்ஸ் இணையும் ஹைவான் படப்பிடிப்பு தொடக்கம்!!

Popular News

  • பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    பா.இரஞ்சித் நடத்தும் மார்கழியில் மக்களிசை 2021 .

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்: பாசிபிள்’ மூலம் புதிய பரிமாணத்தில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வரும் கல்ட் கிளாசிக் திரைப்படம் ‘மூடர் கூடம் 2’!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 28-ல் திரைக்கு வரும் ‘ஒன்ஸ் மோர்’ – அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.