• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா” திரைப்படம் – இந்திய சினிமாவில் புதிய சரித்திரம் படைத்து வருகிறது!!

by Tamil2daynews
August 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

துல்கர் சல்மானின்  Wayfarer Films நிறுவனத்தின், துணிச்சலான முயற்சியாக “லோகா”  திரைப்படம் – இந்திய சினிமாவில்  புதிய சரித்திரம் படைத்து வருகிறது!!

 

துல்கர் சல்மானின் Wayfarer Films  தயாரிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் ஒன்  – சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது. Wayfarer Films பேனரில் உருவான ஏழாவது படமிது. உலகத் தரத்துக்கு இணையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மலையாள படம், கேரளாவின் எல்லைகளைத் தாண்டி அனைத்துப் பக்கங்களிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. படம் மட்டுமல்லாமல், துல்கர் சல்மானுக்கும் Wayfarer Films க்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

உயர்தர தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கி, ஒரு பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இவ்வளவு பெரிய கேன்வாஸில் கதை சொல்லியிருப்பது—மலையாள சினிமாவில் இதுவரை நடந்திராத ஒன்று. இதன் மூலம் துல்கர் மிகத் துணிச்சலான, தொலைநோக்குடன் கூடிய முடிவை எடுத்துள்ளார். இது மலையாள சினிமா தயாரிப்பாளர்களின் வரலாற்றில் வித்தியாசமான ஒரு முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் புதிய சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸ் தொடங்கப்பட்டுள்ளது. எல்லைகளை உடைத்து மலையாள சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் சக்தியாகவே Wayfarer Films மாறியுள்ளது. இதற்கு முன் பல சிறந்த படங்களை மலையாள ரசிகர்களுக்குக் கொடுத்திருந்தாலும், “லோகா” மூலம் இந்த  பேனர் ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. துல்கர் சல்மான் எடுத்த துணிச்சலான இந்த முயற்சி, இந்திய சினிமாவின் வரலாற்றில்  திருப்புமுனையாக  அமைந்துள்ளது. நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் துல்கரின் பங்களிப்பு லோகா மூலம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.இப்படத்தின் முக்கிய சிறப்பாகத் திகழ்வது இயக்குநர் டொமினிக் அருண். இயக்குநராகவும், எழுத்தாளராகவும் அவர் வெளிப்படுத்திய கற்பனை மற்றும் கலைத்திறன் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி கொடுத்த காட்சிகள், இது உண்மையிலேயே ஒரு மலையாளப் படமா என்ற கேள்வியை எழுப்பும் அளவிற்கு உலகத் தரத்தில் இருக்கின்றன. புரடக்சன் டிசைனர் பங்களன் ( Banglan) மற்றும் ஆர்ட் டைரக்டர் ஜீது செபாஸ்டியன் (Jithu Sebastian)  சேர்ந்து இந்த படத்தின் அதிசயமிக்க, வண்ணமயமான, மர்மமிகு உலகை உருவாக்கியுள்ளனர். இசையமைப்பாளர் ஜேக்ஸ் பெஜாய் (Jakes Bejoy) , தனது பின்னணி இசையின் மூலம் ரிதம், திரில் மற்றும் உணர்ச்சி ஆழத்தை வழங்கியுள்ளார். சாமன் சகோவின் கூர்மையான எடிட்டிங் மற்றும் யானிக் பென் வழங்கிய அதிரடி சண்டைக் காட்சிகள் இப்படத்தின் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்படுகின்றன.

கேரளாவிலும், சர்வதேச அளவிலும் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. வசூல் தரப்பிலும் வலுவாகச் செல்கிறது. முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள கல்யாணி பிரியதர்ஷன் தனது சிறப்பான நடிப்புக்காக பெரும் பாராட்டைப் பெற்று வருகிறார். அவருடன் நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன், விஜயராகவன், சரத் சபா மற்றும் பல சிறப்பு தோற்றங்கள் வழங்கிய நடிகர்களும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர். பன்முகப்படுத்தப்பட்ட சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகமாக வெளிவந்துள்ள லோகா, ரசிகர்களின் இதயத்தில் வலுவான அடித்தளத்தை அமைத்துவிட்டது.எக்சிக்யூட்டிவ் தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
மேக்கப் – ரோனக்ஸ் சேவியர்
உடை அலங்காரம் – மெல்வி ஜே, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே சுரேஷ், அமல் கே சதார்
புரடக்சன் கண்ட்ரோலர்கள் – ரினி திவாகர், விநோஷ் கைமோல்
சீஃப் அசோசியேட் – சுஜித் சுரேஷ்

Previous Post

ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக உருவாகி இருக்கும் ‘போலீஸ் போலீஸ்’ ஜியோஹாட்ஸ்டாரில் செப்டம்பர் 19 முதல் ஸ்ட்ரீம் ஆகிறது!

Next Post

“யோலோ” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!

Next Post

"யோலோ" படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா !!

Popular News

  • சலீம் இயக்குனரில் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்!

    சலீம் இயக்குனரில் இயக்கத்தில் நடிக்கும் சசிகுமார்!

    3 shares
    Share 3 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0
  • CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.