காந்தகுரல் கள்வன் – அர்ஜுன் தாஸ்.
1990 அக்டோபர் 5 அன்று சென்னையில் பிறந்த இந்திய நடிகர். இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “கைதி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி, தன் தனித்துவமான குரலுக்கும், வில்லன் கதாபாத்திரங்களுக்கும் பிரபலமானவர்.

தனது உயரத்திற்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை என்று தமிழ் சினிமாவில் இவருக்கு ரசிகர்கள் தந்த உற்சாக வரவேற்பில் இவரது வளர்ச்சியை பார்த்தே பல நடிகர்கள் பொறாமைப்படும் அளவிற்கு தனது திரைப்பட வரிசைகளை வளர்த்துக் கொண்டார் அர்ஜுன் தாஸ்.

பள்ளி கல்லூரி விழாக்களில் இவர் கலந்து கொள்கிறார் என்றால் மாணவ மாணவிகளின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்து அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பாம் திரைப்படத்தில் இவரது நடிப்பு மேலும் மெருகேறி இருப்பது குறிப்பிடத்தக்கது.