• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி…

by Tamil2daynews
October 11, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

திரை உலகில் சாதிக்க துடிக்கும் அக்ஷரா ரெட்டி…

 

2021 ஆம் ஆண்டு விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் பங்கேற்று நடத்திய “பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் ஆனவர் அக்ஷரா ரெட்டி. இவர் தமிழ் திரை உலகில் “ரைட் ” என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டு நடிகையாக அறிமுகமாகியிருக்கும் அக்ஷரா ரெட்டியிடம் பேட்டி கண்டபோது பல்வேறு ருசிகர விஷயங்களை கூறினார்.
அக்ஷரா ரெட்டி கூறியதாவது:

2021 ஆம் ஆண்டு உலகநாயகன் கமல் சார் பங்கேற்று நடத்திய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் நான் பங்கேற்று 87 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்தேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களை கற்றுத் தந்தது. கமல் சாருடன் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவில் ஒன்று. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்ணை மூடிக்கொண்டு நான் நடிப்பேன். அதற்கு முன்னதாக பிக் பாஸில் அவரை சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் அனைவருக்குமான ஒரு அறிவுரையை சொன்னார் குறிப்பாக அந்த அறிவுரை எனக்கு மனதில் பசுமையாக பதிந்துவிட்டது. “உன்னுடைய வாழ்க்கையின் ஸ்கிரிப்ட்டை நீதான் எழுதுகிறாய் உன் வாழ்வில் நாளைக்கு என்ன நடக்க வேண்டும் என்பதைக்கூட நீதான் முடிவு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார். அந்த அறிவுரை எனக்கு வாழ்நாள் அறிவுரையாக அமைந்துவிட்டது. அதைப் பின்பற்றி என்னுடைய வாழ்க்கையை நானே தீர்மானிக்கிறேன். என் வாழ்வில் நாளை என்ன நடக்க வேண்டும் என்பதையும் நான்தான் முடிவு செய்கிறேன்.

அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன். சினிமாவைப் பொறுத்தவரை ஐஸ்வர்யா ராய், ஸ்ரீதேவி ஆகியோரின் ரசிகை நான். நடிப்பு பாடல், இசை, நடனம் என பல்வேறு திறமைகள் கொண்ட ஸ்ருதிஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனது தந்தை சுதாகர் ரெட்டி ஐஐடி படிப்பை முடித்தவர். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் புல்லட் ப்ரூப் பாதுகாப்புக்கான அத்தனை தொழில்நுட்ப அம்சங்களையும் அவர்தான் செய்து கொடுத்தார். எனது தாய் கௌரி சுதாகர் ரெட்டி. என் வாழ்வில் எல்லாவுமாக இருந்தார். நான் நடிகையாக வர வேண்டும் என்பது அவரது எண்ணம். சிறுவயதிலேயே அந்த எண்ணத்தை எனக்கு அவர் விதைத்தார்.. என் மனதிலும் அந்த ஆசை பதிந்துவிட்டது.

தற்போது நான் “ரைட் ” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறேன். ஆனால் இன்று எனது தாய் இல்லை. அது எனக்கு மிகப்பெரிய இழப்பு. அவர் இறந்த பிறகு சினிமா துறையே வேண்டாம் என்று தான் நான் எண்ணியிருந்தேன். ஆனால் ரைட் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் கதையை எனக்கு இயக்குனர் கூறிய போது எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக் கொண்டேன்.

இப்படத்தில் அருண்பாண்டியன், நட்டி, மூணாறு ரமேஷ் போன்ற அனுபவம் வாய்ந்த நடிகர்கள் நடிக்கிறார்கள். அவர்களுடன் நான் நடித்தபோது நடிப்பு பற்றி பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்டேன். சில இடத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்றுகூட அவர்கள் எனக்கு சொல்லித் தந்தார்கள். அது எனக்கு பயனுள்ளதாக அமைந்தது.

ஏற்கனவே நான் கன்னடத்தில் “பில்கேட்ஸ்” என்ற படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறேன். தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் நல்ல கதை அம்சமுள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன்.

நான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பே மார்ஷல் ஆர்ட்ஸ், மற்றும் பாக்சிங் பயிற்சி பெற்றிருக்கிறேன். சினிமாவில் ஆக்சன் ஹீரோயினாக நடிக்க ஆசை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் உடனடியாக ஒப்புக்கொள்ள தயாராக இருக்கிறேன். மேலும் வில்வித்தை பயிற்சியும் பெற்றுக் கொண்டு வருகிறேன். பைக் ஓட்டுவேன், குதிரை ஏற்றம் தெரியும். மேலும் சிறு வயதிலிருந்து சங்கீதம் பயின்றிருக்கிறேன். பாடல்கள் பாட வேண்டும் என்ற ஆசை உள்ளது. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரது தீவிர ரசிகை.

நான் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்புக்காக ஜார்ஜியாவில் யுனிவர்சிட்டி ஆப் பிப்ளிசியில்( University of PIBILISI) சைக்காலஜி படித்தேன்.

கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் இந்தியா அழகி போட்டியில் பங்கேற்று வென்றேன். பின்னர் அதே ஆண்டு துபாயில் நடந்த மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்ட் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டம் வென்றேன். இந்த போட்டியில் 23 நாடுகளைச் சேர்ந்த 23 அழகிகள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாடலிங் செய்வதற்கு எனக்கு ரோல் மாடலாக இருப்பவர் உலக அழகி பட்டம் என்ற ஐஸ்வர்யா ராய்தான்.

எனக்கு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி மொழிகள் நன்றாக பேச தெரியும். கன்னடம் மலையாளம் மொழிகளை புரிந்து கொள்வேன். தமிழ் தவிர பிற மொழி படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது.

“ரைட்” படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகும் எனக்கு அனைவரும் ஆதரவும், ஆசியும் தரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அக்ஷரா ரெட்டி கூறினார்.
Previous Post

காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு (Boyapati Sreenu), கூட்டணியில் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் அச்சந்தா (Raam Achanta), கோபி அச்சந்தா (Gopi Achanta) ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி ( M Tejaswini Nandamuri) வழங்கும் #BB4 “அகண்டா 2: தாண்டவம்” , (#BB4 Akhanda 2: Thandavam) டிசம்பர் 5 முதல் திரையரங்குகளில்!

Next Post

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் திரைப்படமான ‘கிகி & கொகொ’!

Next Post

இனிகா புரொடக்சன்ஸ் வழங்கும் இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அனிமேஷன் திரைப்படமான 'கிகி & கொகொ'!

Popular News

  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.