தீபாவளி பண்டிகை ரிலீஸாக நேரடியாக டென்ட் கொட்டாய் ஓடிடி தளத்தில் வெளியாகிய ‘டியர் ஜீவா
‘டியர் ஜீவா’ திரைப்படம் உருவான விதம் குறித்தும் இந்தப் படத்தின் நேரடி ஒடிடி வெளியீடு குறித்தும் இயக்குநர் பிரகாஷ் வி.பாஸ்கர் கூறும்போது,
“இந்த படம் ஒரு உணர்ச்சி மிகுந்த காதல் கதை. குடும்பத்துடன் அமர்ந்து அனைவரும் பார்க்கும் விதமான ஒரு ரொமான்டிக் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ரிலீஸ் செய்யத்தான் எங்களுக்கு விருப்பம். ஆனால் நாங்கள் இதில் குறைந்த அளவே முதலீடு செய்திருப்பதால் நிறைய பேரிடம் சென்று சேருவதற்காக நேரடியாக டென்ட் கொட்டகை ஓடிடி தளத்தில் இந்தப்படத்தை தீபாவளி வெளியீடாக ஒளிபரப்பு செய்துள்ளோம்.
படத்தின் நாயகன் டிஎஸ்கேவும் நானும் 15 வருட நண்பர்கள். நான் இயக்கிய எல்லா குறும்படங்களிலும் டிஎஸ்கே தான் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த கதைக்கு பக்கத்து வீட்டு பையன் போன்ற ஒரு கதாபாத்திரத்திற்கு டிஎஸ்கே தான் தேவைப்பட்டார்.
ஏற்கனவே என்னுடைய குறும்படங்களில் அவர் நடித்திருந்ததாலும் அவரை பர்சனலாகவே எனக்கு நன்றாகத் தெரியும் என்பதாலும் இந்த கதைக்கு அவர் மிகச்சரியாக பொருந்துவார் என நம்பினேன்.
அவர் ஒரு மிமிக்ரி கலைஞர், நல்ல டான்சர்.. இதையெல்லாம் தாண்டி மனித உணர்வுகளை மிகச்சரியாக பிரதிபலிப்பவர் என்பதை நான் கவனித்து இருக்கிறேன். அதனால் இந்தக் கதையை அவர் சிறப்பாக பண்ண முடியும் என்று அவருக்காகவே பண்ணப்பட்ட கதை தான் இது.
இந்த படத்தின் படப்பிடிப்பை வெறும் 15 நாட்களில் நடத்தி முடித்தோம். மொத்த படப்பிடிப்பும் திருச்சியில் நடைபெற்றது..
படத்தின் கதாநாயகியாக நடித்துள்ள தீப்ஷிகா அடிப்படையில் ஒரு டாக்டர். இதுதான் அவருக்கு முதல் படம்.
அருண்ராஜா காமராஜூடன் இணைந்து கனா போன்ற பெரிய படங்களில் பணியாற்றிய போது அந்த படத்தில் பணியாற்றிய கலைஞர்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முடிந்தது. அந்த அனுபவம் இந்த படத்தில் எனக்கு ரொம்பவே கை கொடுத்தது. அதனால் இந்தப் படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டபடி விரைவாக நடத்தி முடிக்க முடிந்தது.
இந்த தீபாவளிக்கு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி உள்ள டீசல் திரைப்படத்தின் இயக்குநர் சண்முகம் முத்துசாமியிடம் தான் முதன் முதலாக உதவி இயக்குநராகப் பணியாற்றினேன்.. தற்போது அவரது படமும் எனது படமும் ஒரே சமயத்தில் வெளியாவது மகிழ்ச்சி.
‘டியர் ஜீவா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லையே என்கிற வருத்தம் ஒரு இயக்குநராக எனக்குள் இருந்தாலும் கூட, நேரடியாக ஓடிடி தளத்தில் தீபாவளிக்கு வெளியாகிறது என்பதில் எனக்கும் படக்குழுவினருக்கும் சந்தோசம் தான்” என்று கூறினார்..
டி.எஸ்.கே (TSK), தீப்ஷிகா, மனிஷா ஸ்ரீ, கலக்கப்போவது யாரு யோகி, லொள்ளு சபா உதய், பிரியதர்ஷினி ராஜ்குமார்








