• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

by Tamil2daynews
October 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 கொண்டாடும், ஆங்கில ஆந்தம் பாடலை பாடியுள்ளார் ஆண்ட்ரியா ஜெரேமியா !!

 

ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025ற்கான அதிகாரப்பூர்வ கீதமான “ப்ரிங் இட் ஹோம் (Bring It Home)” பாடலின் ஆங்கில பதிப்பை புகழ்பெற்ற இந்திய பின்னணிப் பாடகி, நடிகை மற்றும் கலைஞர் ஆண்ட்ரியா ஜெரேமியா பாடியுள்ளார். வலிமையான குரல், உணர்ச்சிபூர்வமான நடிப்பு மற்றும் பன்மொழி இசை திறமைக்காக பெயர் பெற்ற ஆண்ட்ரியா, இந்த உலகளாவிய கீதத்துக்கு தனது குரல் மூலம்,  தனித்துவமான ஆன்மீகத் தொனி, உற்சாகம் மற்றும் நவீன மெருகை வழங்கியுள்ளார்.

பெரும் ஆற்றல், அசத்தும் ராகம் மற்றும் உணர்ச்சி கலந்த இந்த “ப்ரிங் இட் ஹோம்” பாடல், உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை ஒருமுகப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இது மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின் தைரியம், ஆர்வம் மற்றும் விடாமுயற்சியை கொண்டாடுகிறது. பாடலை நகுல் அபயங்கர் (Nakul Abhyankar) இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை ஆண்ட்ரியா ஜெரேமியா மற்றும் நஸீப் முகம்மது எழுதியுள்ளனர். ஆங்கில வரிகளுடன் இணைந்த “தரிகிட்ட தரிகிட்ட தரிகிட்ட தோம்” ( Tarikita Tarikita Tarikita Dhom ) என்ற இந்திய பாணி ஹுக் மற்றும் “தக் தக், வீ ப்ரிங் இட் ஹோம்” (Dhak Dhak, we bring it home)  என்ற உருக்கமான பல்லவி  இவை அனைத்தும் விளையாட்டின் இதயத் துடிப்பையும், வீராங்கனைகளின் உறுதியையும் பிரதிபலிக்கின்றன.

ஆண்ட்ரியாவின் துடிப்பான குரல் மற்றும் நவீன பாப்-ராக் பாணி,  இந்த பாடலுக்கு உலகளாவிய அழகை அளிக்கின்றன, அதேசமயம் இந்திய வேர்களும் வலுவாக இணைந்திருக்கின்றன. அவரது குரலில் கிரிக்கெட்டின் உறுதியும் அழகும் வெளிப்படுகின்றன — விளையாட்டரங்கிலும் அதற்குப் பின்னாலுமான கோடிக்கணக்கான ரசிகர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கின்றன. வெற்றி, நோக்கம் மற்றும் கனவுகளை நனவாக்கும் முயற்சியை கொண்டாடும் பாடல் வரிகள், ஆண்ட்ரியாவின் நுணுக்கமான குரல் ஆற்றலால் மேலும் அழகாகியுள்ளது.

இந்த பாடலின் வெளியீடு விளையாட்டு உலகில் ஒரு முக்கியமான கொண்டாட்டக் கணமாக அமைந்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC), 2025 செப்டம்பர் 30 அன்று “ப்ரிங் இட் ஹோம்” பாடலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நவம்பர் 2, 2025 அன்று நடைபெறவுள்ள மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கான தயாரிப்பில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்த கீதம் போட்டிக்கும், மேலும் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் மரபுக்கும் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் கௌரவம் சேர்க்கிறது.

இந்த பாடலை பாடியது குறித்து ஆண்ட்ரியா ஜெரேமியா கூறும்போது..,
“இது ஒரு பாடல் மட்டுமல்ல — பெரிய கனவு காணும், கடினமாகப் போராடும், வெற்றியை வீட்டுக்கு கொண்டு வரும் ஒவ்வொரு பெண்ணிற்குமான கொண்டாட்டம்.” என்றார்.

“ப்ரிங் இட் ஹோம்”  பாடல் இப்போது கிரிக்கெட்டின் கீதமாக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

Previous Post

ராம் அப்துல்லா ஆண்டனி – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.

Next Post
மர்மம் மற்றும் திகில் நிறைந்த “கிஷ்கிந்தாபுரி”, 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.

மர்மம் மற்றும் திகில் நிறைந்த "கிஷ்கிந்தாபுரி", 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து, ஜீ5 தளத்தின் வெற்றி திரைப்பட வரிசையில் இணைந்துள்ளது.

Popular News

  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.