“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!
MISHRI ENTERPRISES சார்பில்Mமறைந்த ஸ்ரீ எஸ். செயின்ராஜ் ஜெயின் நல்லாசியுடன், ரஜினி கிஷன் தயாரித்து நடிக்க, இயக்குநர் M ரமேஷ் பாரதி இயக்கத்தில், கலக்கலான ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரஜினி கேங்”.
சமீபத்தில் இப்படத்தின் புதுமையான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவ்விழாவினில்..,
இது எங்கள் குடும்ப விழா. எனக்கு செயின்ராஜ் சார் குடும்பத்தை 40 வருடமாகத் தெரியும். இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போது அவர் இல்லை என வருத்தமாக இருக்கிறது. கிஷன் ஒரு ஹீரோவாக வேண்டும் என அவர் அதிகம் ஆசைப்பட்டார். அவரது சகோதரர்கள் சேர்ந்து அஷ்டகர்மா வெற்றிப்படத்தைத் தந்தனர். இப்போது ரஜினி கேங் படத்தைத் தந்துள்ளார்கள். சின்ன பட்ஜெட்டில் அழகாக எடுத்துள்ளார்கள். அவர்கள் வெற்றி பெற என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். நன்றி.
எத்தனையோ பேர் ஆசைப்படும் இந்த திரைத்துறையில் கிஷன் அவர்கள் போராடி ஹீரோவாக நடித்துள்ளார். முதல் சந்திப்பில் இயக்குநர் பற்றியும், கதையைப் பற்றியும் அவ்வளவு ஆவலோடு பேசினார். MISHRI ENTERPRISES பல படங்கள் வெளியாக உதவியாக இருக்கிறது. இது அவர்களது படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். இன்றைய நிலையில் படம் வெளியிடுவது பெரும் சிக்கலாக உள்ளது. நல்ல கண்டன்ட் உள்ள படம் கண்டிப்பாக ஜெயிக்கும். நல்ல கதை உள்ள இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன் நன்றி.
நடிகர் அஜய் பேசியதாவது..,MISHRI ENTERPRISES தயாரிப்பாளர் நடிகர் ரஜினி கிஷனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ரஜினி என்னும் பெயருக்குத் தனி மவுசு இருக்கிறது. ரஜினி கேங் எனும் பெயர் கண்டிப்பாக ஜெயிக்கும். நல்ல கண்டன்ட் எப்போதும் ஜெயிக்கும், இதை நான் உறுதியாகச் சொல்கிறேன். இயக்குநர் ரமேஷ் பாரதி உடன் நான் வேலை பார்த்துள்ளேன். அவர் உருவாக்கித் தந்த ஒரு வெப் சீரிஸ் பார்த்து, பலர் எனக்கு நிதியுதவி அளிக்க முன்வந்தார்கள். அவர் மிகத் திறமையானவர். அடுத்ததாக ஜோன்ஸ் அவர் சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். அவர் கண்டிப்பாக இதில் கலக்குவார். இந்தக்குழு என்னுடைய கேங், இதில் இருக்கும் அனைவரும் ஜெயிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். நன்றி.
தயாரிப்பாளர் நடிகர் ரஜினி கிஷன் சார் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. ஒரு ஆக்சன் ஹீரோ போல இதில் கடுமையாக உழைத்துள்ளார். எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் குழுவினருக்கு நன்றி. படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு தாருங்கள்.
ரஜினி கேங் குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சி. இசையமைப்பாளர் ஜோன்ஸ் உடன் 10 வருடமாக வேலை பார்க்கிறேன். அவர் இசையில் பாடியது மகிழ்ச்சி. அவருக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும் படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
இசையமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட் பேசியதாவது..,ஒரு அழகான படைப்பை எனக்குத் தந்ததற்கு இந்த டீமுக்கு பெரிய நன்றி. ரமேஷ் பாரதி அண்ணா நாம் டீமாக ஒரு படம் செய்கிறோம் என எல்லோருக்கும் வாய்ப்பு தந்தார். இவர்களுடன் வேலை பார்த்தது மிகச் சந்தோசமான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் பாடிய, பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.








