செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் வரலாற்று சிறப்புமிக்க இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக Bhagyashri Borse நடித்துள்ளார். இதைத் தவிர Samuthirakani, Rana Daggubati போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரையுலகம் புதிதாக எழுந்து, கனவுகளும் கலைக்கும் இடையே நடந்த காலம். அந்தக் காலத்தின் திரைப்பட மேடையை மையமாகக் கொண்டே உருவாகி உள்ள புதிய படம் – “காந்தா “.
கதை, ஒரு பிரபல இயக்குநரையும், அவர் அறிமுகப்படுத்திய முன்னணி நடிகரையும் மையமாகக் கொண்டது. ஒருகாலத்தில் இருவரும் கலைக்காக ஒன்றாக உழைத்தவர்கள். ஆனால், காலப்போக்கில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டி, ஆளுமை மோதல் – அதுவே “காந்தா”வின் இதயம்.
இந்த மோதலின் நடுவில் வருகிறார் ஒரு புதிய முகம் – ஒரு இளம் நடிகை. அவள் அவர்களின் வாழ்க்கையையும், கலை உலகத்தையும் முழுவதும் மாற்றி விடுகிறார். அந்த பெண்ணின் வருகை, அந்த காலத்திலிருந்த பெண்களின் கனவுகள், அச்சங்கள், போராட்டங்களை வெளிக்கொணர்கிறது.

காந்தா” படம் ஒரு சாதாரண காதல் கதை அல்ல. இது கலைஞர்களின் மனப்போராட்டம். ஒரு இயக்குநர் தனது சினிமாவை உயிரோடு புனைகிறார்; ஒரு நடிகர் தனது புகழை காத்துக்கொள்கிறார்; ஒரு பெண் தனது அடையாளத்தை தேடுகிறார். இந்த மூன்று வாழ்க்கைகளும் ஒன்றுடன் ஒன்று மோதும் தருணங்களில் தான் கதை தீவிரமடைகிறது.
பின்னணியாக 1950களின் பிந்தைய காலனி மதராஸ் (Post Colonial Madras). சினிமா உலகம் புதிய பரிமாணத்துக்குள் நுழைந்த காலம். பழைய மதராஸின் கலை உலகம், ஸ்டூடியோ கலாசாரம், பிளாக் & வைட் காட்சிகள் – அனைத்தும் அற்புதமான திரைபட அனுபவமாக வரவிருக்கின்றன.
காந்தா” என்பது ஒரு கலைஞனின் பெருமை, ஒரு மனிதனின் பொறாமை, ஒரு பெண்மணியின் கனவு – இம்மூன்றையும் இணைக்கும் உணர்ச்சி மிக்க கதை. சினிமா மீது கொண்ட பற்று, போட்டி, பேராசை, பிரிவு – எல்லாவற்றையும் அழகாக வெளிப்படுத்தும் ஒரு பீரியட் டிராமா!
1950களின் மதராஸ் திரைப்பட உலகத்தை தழுவி, இயக்குநர்–நடிகர் போட்டியும், ஒரு பெண்ணின் வருகையால் மாறும் கலை உலகமும் – “காந்தா” சினிமா ரசிகர்களை காலப்பயணத்தில் அழைத்து செல்லத் தயாராகிறது!









