• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

by Tamil2daynews
November 13, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

 

கன்னடத் திரையுலகில் இருந்து புதிய இளைஞர்கள் படைப்பாளிகளாக வந்து இப்போது கவனிக்க வைக்கிறார்கள்.அப்படி அவர்களால் உருவாக்கப்பட்ட ‘கேஜிஎஃப்’, ‘காந்தாரா ‘ படங்கள் பெரிய வெற்றி பெற்றுக் கவனம் ஈர்த்தன. அந்தப் படங்கள் பெற்ற வரவேற்பைப் போலவே  கன்னடக் கலைஞர்கள் கூட்டணியில் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி இருக்கும் ‘கரிகாடன்’ படத்தின் டீசரும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே இரண்டு மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.படத்தின் டீசர் பார்வையாளர்களிடம்  அதிர்வலைகளை ஏற்படுத்திக் கவனிக்க வைக்கிறது.
மாறுபட்ட வகைமையில் ஆக்ஷனும் அமானுஷ்யமும் நிறைந்த ஒரு பரபரப்பான திரைப்படமாக ‘கரிகாடன் ‘ உருவாகியுள்ளது.
இப்படத்தில் காடா நடராஜ்,நிரிக்ஷா ஷெட்டி,குழந்தை ரித்தி, மஞ்சு சுவாமி,யாஷ் ஷெட்டி, கோவிந்த கவுடா,திவாகர், கிலாடி சூர்யா, டி.ராகேஷ் பூஜாரி,விஜய் சந்தூர், சந்திரபிரபா,கரிசுப்பு, கிரி,பாலராஜாவாடி, மாஸ்டர் ஆர்யன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கில்லி வெங்கடேஷ். இசை: அதிஷய் ஜெயின், மற்றும் ஷஷாங்க் சேஷகிரி, ஒளிப்பதிவு: ஜீவன் கவுடா, எடிட்டிங் தீபக் சி.எஸ், கலை ரவி, கவுடல்லி சாஷி, நடனம் ராம்கிரண்.
ரித்தி எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில்  தீப்தி தாமோதர் தயாரித்துள்ளார்.
இணைத் தயாரிப்பு: ரவிக்குமார் எஸ்.ஆர்.
இசையையும் சிலிர்ப்பையும் இணைக்கும் ‘கரிகாடன்’ படத்தின் சாகச மற்றும் அதிரடிப் பயணத்தைத் திரையரங்கில் விரைவில் காணலாம்.
அதிரடி ஆக்சன் காட்சிகள். அசத்த வைக்கும் இசை என்று திரையில் ஒரு மாய அனுபவத்தை உணர வைக்கும் ஒரு படைப்பாக இந்தப் படம் உருவாகி உள்ளது.
கார்ப்பரேட் உலகத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள கலைஞரான கடா நட்ராஜ், தனது கனவைப் பெரிய திரையில் நனவாக்க வந்துள்ளார்.
இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ள காடா நடராஜ் கவனமாகத் திட்டமிடப்பட்டு இதன் படப்பிடிப்பை முடித்திருக்கிறார்.
ரித்தி என்டர்டெயின்மென்ட் ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரிக்கும் அவரது மனைவி தீப்தி தாமோதர், சகோதரர் ரவிக்குமார் எஸ்.ஆர். மற்றும் நண்பர் திவாகர் பி.எம். ஆகியோர் அவரது திரை உலகக் கனவை நிறைவேற்றத் துணை நின்றுள்ளனர்.
கரிகாடனின் படக்குழுவில் ஏராளமான திறமைசாலிகள் இணைந்துள்ளனர்.
சிறந்த இயக்குநரான கில்லி வெங்கடேஷ், திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தில்  தனது நிபுணத்துவத்துடன் ‘கரிகாட’னை உருவாக்கியுள்ளார்.
ஜீவன் கவுடாவின் ஒளிப்பதிவு சிக்கமகளூரு, கலாசா, குத்ரேமுக், மண்டியா மற்றும் சக்கராயபட்னாவின் அழகைப் படம்பிடித்திருக்கிறது. தீபக் சி.எஸ்.ஸின் எடிட்டிங் படத்தை சாகசம் நிறைந்த சங்கிலித் தொடராக இணைத்துள்ளது.
‘கரிகாடன்’ படத்தின்  டீசர் இப்போது வெளியாகியுள்ளது. படத்தை ரசிக்கத் தயாராக இருக்குமாறு படக்குழுவினர் கூறியுள்ளனர்.
Previous Post

கிணறு (Kinaru) – “The Well” எனப் பொருள்படும் குழந்தைகள் படம், குழந்தைகள் தினத்தை (November 14th) முன்னிட்டு திரைக்கு வருகிறது. Madras Stories தயாரித்துள்ள இந்த படம், புதிய இயக்குநர் மற்றும் புதுமையான தொழில்நுட்பக் குழுவை அறிமுகப்படுத்தும் நோக்கில் உருவானது.

Next Post

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

Next Post

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் 'அன்கில்_123'— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

Popular News

  • டீசரில் ஒரு சாதனை படைத்த பான் இந்தியா திரைப்படம் ‘கரிகாடன்’.

    0 shares
    Share 0 Tweet 0
  • இவளைப் போல’ திரைப் பிரபலங்கள் வெளியிட்ட பாடல் !

    0 shares
    Share 0 Tweet 0
  • பாரதிய ஜனதா கட்சியின்  தமிழ் நாடு கலை மற்றும் கலாச்சார பிரிவின்  செயலாளராக பெப்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“ரஜினி கேங்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !!

November 13, 2025

காந்தா – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 13, 2025

“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

November 13, 2025

சிவகார்த்திகேயனுக்கு அப்புக்குட்டி வாழ்த்து!

November 13, 2025

‘மிடில் கிளாஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

November 13, 2025

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வழங்கும் ‘அன்கில்_123’— புகழ் மற்றும் அதன் விளைவுகளை ஆராயும் மனோதத்துவ த்ரில்லர்

November 13, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.