• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து உருவாகிய இருண்ட, அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை’, நவம்பர் 28-ல் வெளியாகிறது!!

by Tamil2daynews
November 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ZEE5 அடுத்த அதிரடி படைப்பு, – பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உலகிலிருந்து உருவாகிய இருண்ட, அதிர்ச்சிகரமான திரில்லர் சீரிஸ் ‘ரேகை’,  நவம்பர் 28-ல் வெளியாகிறது!!

 

~ புகழ்பெற்ற கிரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ் குமார் நாவலின் மையக்கதையிலிருந்து ஈர்க்கப்பட்ட இந்த தனித்துவமான தமிழ் சீரிஸை, தினகரன் M உருவாக்கி, எழுதி, இயக்கியுள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி மற்றும் வினோதினி வைத்தியநாதன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ~

இந்தியாவின் முன்னணி தேசீய ஓடிடித் தளமான ZEE5, தன் அடுத்த அதிரடி சீரிஸ் மூலம், உண்மை கண்முன்னே இருந்தும்,  நாம் கண்டுபிடிக்க முடியாத,  ஒரு இருண்ட உலகிற்குள் பயணிக்கும் வகையிலான, புதிய  அனுபவத்தைத் தரும் படைப்பை, ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஒவ்வொரு தடயமும் மேலும் குழப்பத்திற்குள் இழுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஏழு எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் ‘ரேகை’ சீரிஸ் நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீமிங்காகிறது.

இந்த சீரிஸ், பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார் உருவாக்கிய குற்றக்கதை உலகின் கருவை எடுத்து கொண்டாலும், ‘ரேகை’ முழுமையாக தினகரன் M உருவாக்கி – எழுதி – இயக்கிய ஒரிஜினல் படைப்பாகும். ராஜேஷ் குமார் உலகின் கதைகளின் தளங்களில் ஆழமாகச் சென்று, சைக்கலாஜிகலாக ஒரு புதிய தீவிரத்தை அவர் இந்தக் கதைக்கு வழங்கியுள்ளார்.

லிங்க்  – https://www.youtube.com/watch?v=ybTJcRA5sg4

உயிருடன் இருப்பவர்கள் மரணமடைந்ததாக பதிவு செய்யப்பட்டால், அதை எப்படி விசாரிப்பது?

S.I. வெற்றி (பாலஹாசன்) மற்றும் காவலர் சந்தியா (பவித்ரா ஜனனி) சாதாரணமாக விசாரிக்க துவங்கும் ஒரு குற்ற சம்பவம், விரைவில் மிக தீவிரமான விசாரணையாக மாறுகிறது. ஐஸ் டிரக் ஓட்டுநர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது ஏற்பட்ட விபத்தில் இறந்துவிடுகிறார். ஆனால், ஐஸ்க்கட்டிகளுக்குள் வெற்றி ஒரு துண்டிக்கப்பட்ட கையை கண்டுபிடிக்கிறார்.
அங்கேயிருந்து தொடங்கும் வெற்றியின் தேடல், மருத்துவ பரிசோதனைகள், இரகசிய வலைப்பின்னல்கள், பயமுறுத்தும் உண்மைகள் ஆகியவற்றின் சுழலில்  அவரை இழுத்துக்கொள்கிறது. ஒவ்வொரு தேடலும் அதன் பதிலும் இன்னும் மூர்க்கமான கதவுகளைத் திறக்க, வேட்டையாடுபவர் – வேட்டையாடப்படுபவர் என்ற கோடு, கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகிறது.

இந்த சீரிஸை S.S Group Production சார்பில் S. சிங்காரவேலன்  தயாரித்துள்ளார். இந்த சீரிஸில், பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன் பிரகதேஷ், வினோதினி வைத்யநாதன், ஸ்ரீராம் எம், அஞ்சலி ராவ், இந்திரஜித் E. ஆகியோர் நடித்துள்ளனர்

எழுத்தாளர் ராஜேஷ் குமார் கூறியதாவது..,

“ஒவ்வொரு குற்றக்கதையும் முதலில் மனித மனதில் தான் பிறக்கிறது. ‘ரேகை’யில் என்னை ஈர்த்தது – சாதாரணமாகத் தோன்றும் ஒரு சிறு ஐடியா எவ்வாறு சமூகத்தின் இருண்ட மூலைகளுக்கு இழுத்துச் செல்கிறது என்பதே. என் உலகிலிருந்து ஒரு ஐடியாவை புதிய படைப்பாளர் எடுத்து, முற்றிலும் புதிதாக ஒரு படைப்பை உருவாக்கும்போது, அந்தக்கதை இன்னும் உயிர்ப்புடம் இருக்கிறது என்பதற்கான சான்று இந்த சீரிஸ்.”

எழுத்தாளர் / இயக்குநர் தினகரன்  M கூறியதாவது..,

“நம் கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு  வன்முறையைக் குறித்து இந்தத் சீரிஸ் பேசுகிறது. போலீஸ் புகாராக கூட மாறாத அந்த வன்முறை, பலர் வாழ்க்கையைச்  சிதைக்கிறது. அந்த அசௌகரியத்தையும், யாரை நம்புவது என்ற குழப்பத்தையும் பார்வையாளர்கள் உணர வேண்டும் என்பதே என் நோக்கம். ராஜேஷ் குமார் சார் கருவிலிருந்து தொடங்கியதாக இருந்தாலும்,   இந்த கிரைம் உலகின் சம்பவங்கள்  எனக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன. அதை பார்வையாளர்களும் உணர்வார்கள்”

முன்னணி நடிகர் பாலஹாசன்..,

“வெற்றி கதாப்பாத்திரம் எப்போதும் பதில்களைத் தேடி அலையும் ஒரு மனிதன். ஆனால் அவன் கண்டுபிடிக்கும் உண்மைகள் அவனையே பயமுறுத்துகின்றன. அந்த பயத்தை வெளிப்படுத்தாமல் உள்ளே வைத்துக்கொண்டு நடிப்பது சவாலானது. ‘ரேகை’ எனக்கு மனித உணர்வுகளின் பலவீனத்தை சுமந்து பார்க்கும், அவற்றை ஆராய்ந்து பார்க்கும் வாய்ப்பை வழங்கியது.”

ZEE5 தமிழ் மற்றும்  மலையாளம் – வணிகத் தலைவர் & SVP South Marketing – லாய்டு C சேவியர் கூறியதாவது..,

“‘ரேகை’ ஒரு திரில்லர் மட்டுமல்ல, நம் பூர்வீகக் கதைகள் ஏன் முக்கியம் என்பதற்கான நினைவூட்டல். இது மர்மத்தின் பின்னால் இருக்கும் மௌனங்களை வெளியில் கொண்டுவருகிறது. மனிதர்களைக் காக்க வேண்டிய அமைப்புகள், சில சமயம் அவர்களை பகடையாக பயன்படுத்தும்  உண்மையைத் தட்டி எழுப்புகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை எவ்வாறு பெரிய சக்திகளிடம் சிக்கிக்கொள்ளுகிறது என்பதை இந்தத் சீரிஸ், மிக நிஜமாக காட்டுகிறது. உண்மை, நேர்மை, எமோசன் மூன்றும் கலந்த கதைகளைத் தருவதே எங்களின் முக்கிய நோக்கம். ‘ரேகை’ சீரிஸ் அதைத் துல்லியமாக பிரதிபலிக்கிறது.”

ஒருமுறை நீங்கள் ‘ரேகை’யின் சதுரங்கத்தில் சிக்கிக்கொண்டால்,  அதில் குற்றம் உங்களை  பயமுறுத்தாது — குற்றத்திற்குப் பின்னால் இருக்கும் உண்மை தான் மிகப்பெரிய பயத்தைத் தரும்.

‘ரேகை’ ZEE5-இல் நவம்பர் 28 முதல்!
Previous Post

’டிரம்ப் கார்டு’ மற்றும் ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படங்களின் அறிவிப்பு விழா

Next Post

“லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் பெரியாரிஸ்ட் சுப. வீரபாண்டியன்.

Next Post

"லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு" திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார் பெரியாரிஸ்ட் சுப. வீரபாண்டியன்.

Popular News

  • ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    ‘ஜெயில்’ படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மகளிர் தின கொண்டாட்டம்…!!!

    32 shares
    Share 32 Tweet 0
  • CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம், வெளியீட்டிற்கு முன்பே தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருது வென்றுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.