• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

வரலாற்று காவியமாக உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
November 28, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

வரலாற்று காவியமாக உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

 

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் இருந்து திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரக்ஷனா இந்துசூடனின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன்.ஜி-யின் கதையில் மிகத்தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் ‘திரெளபதி’ ஃபிரான்சைஸில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.

நேதாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து சோழ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் ‘திரௌபதி 2’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘திரௌபதி’ திரைப்படத்தின் நீட்சியாக அதன் வரலாற்று உலகத்தை காட்ட இருக்கிறது.  14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III இன் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது.
முதல் பார்வை போஸ்டரில் நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது.

ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் இந்த வரலாற்றுக் கதையில் நடித்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் புரோமோஷனல் பணிகள் நடைபெறும்.

நடிகர்கள்:
ரிச்சர்ட் ரிஷி, ரக்ஷனா இந்துசூடன், நட்டி நட்ராஜ், ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கவுரங், திவி, தேவயாணி ஷர்மா, அருணோதயன்.

தொழில்நுட்பக் குழு:
வசனங்கள் – பத்மா சந்திரசேகர், மோகன் ஜி.,
இசை – ஜிப்ரான் வைபோதா,
ஒளிப்பதிவு – பிலிப் ஆர்.சுந்தர்,
எடிட்டிங் – தேவராஜ்,
கலை இயக்கம் – கமல்நாதன்,
நடனம் – தணிகா டோனி,
சண்டைக்காட்சி – ஆக்‌ஷன் சந்தோஷ்,
தயாரிப்பு – நேதாஜி புரொடக்ஷன்ஸ் (ஜி. எம் பிலிம் கார்ப்பரேஷன் உடன் இணைந்து),
இயக்கம் – மோகன் ஜி.

Previous Post

‘எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’, காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த ஆங்கிலப் படத்தின் டீசர் வெளியீடு, திரைப்படம் 2026 காதலர் தினத்தன்று வெளியாகிறது

Next Post

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

Next Post

விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் இணையும் #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!!

Popular News

  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • “‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேசத் தயங்கும் விஷயங்களின் மவுனத்தை உடைக்கும் மலேசிய தமிழ் க்ரைம் த்ரில்லர் ‘இரும்புத் தோட்டம் ; விரைவில் தமிழகமெங்கும் ரிலீஸ்’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.