• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

சாரா – விமர்சனம் ரேட்டிங் – 3/5

by Tamil2daynews
December 5, 2025
in விமர்சனம்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாரா – விமர்சனம் 

 

சாக்ஷி அகர்வால், அம்பிகா,இயக்குநர் செல்லக்குட்டி, பொன்வண்ணன்,யோகி பாபு, தங்கதுரை, ரோபோ சங்கர், விஜய் விஸ்வா , மிரட்டல் செல்வா நடித்து உள்ளனர்.  எழுதி இயக்கியிருக்கிறார் செல்லக்குட்டி .இசை : கார்த்திக் ராஜா, ஒளிப்பதிவு: ஜெ. லக்ஷ்மன் குமார், படத்தொகுப்பு :ஜான் ஆபிரகாம்.விஷ்வா ட்ரீம் வேர்ல்ட் சார்பில் ஸ்ரீ பட்டவன் தயாரித்துள்ளார்.

தனது பள்ளிப் பருவத்து தோழியான சாக்ஷி அகர்வாலை காதலை விட நட்பே பெரிது என்று ஒரு தோழியாக பாவித்து வருபவர் செல்லக் குட்டி. சாக்ஷி கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.அவரது தந்தை பொன்வண்ணன். சாக்ஷிக்குப் பல்வேறு திருமணத்தடங்கல்கள் ஏற்படுகின்றன. அதனால் வீட்டில் உள்ளவர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.சாக்சியை பல்வேறு கொலை அச்சுறுத்தல்கள் துரத்துகின்றன.

ஒரு கட்டத்தில் சாக்ஷி அகர்வாலுக்கு அவர் காதலித்த விஜய் விஸ்வா உடன் திருமண ஏற்பாடு நடந்து பத்திரிகைகள் கொடுத்து வருகிறார்கள்.அப்படிப்பட்ட தனது தோழியை ஓர் இடத்தில் அடைத்து வைத்துள்ளார் இயக்குநர் செல்லக் குட்டி. இரண்டு நாளில் திருமணம் என்ற நிலையில் இப்படி அடைத்து வைத்திருக்கிறார். தனது அம்மா அம்பிகா உடல்நிலை மோசமாக உள்ள சூழலில் சாக்ஷியை அவர் பார்க்க விரும்புகிறார் என்று நேரில் அழைத்துக் கொண்டு போய் காண்பித்து விட வேண்டும் என்பதுதான் நிபந்தனை. அது ஒரு விபரீதமான நிபந்தனையாக இருக்கிறது. ஏனென்றால் சாக்சியைத் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க அம்பிகா விரும்புகிறார் .எனவே அம்மாவுக்காக தனது தோழியை காதலியாக்கிக் கொள்ள நினைக்கிறார் செல்லக் குட்டி. இந்த விபரீத விளையாட்டின் முடிவு என்ன என்பதுதான் ‘சாரா’ படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் சாரா பாத்திரத்தில் வரும்  சாக்ஷி  அந்த பாத்திரத்தில் குறை சொல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.செல்லா ஆக வரும் இயக்குநர் செல்லக் குட்டி கேட்பார் இன்றி அடித்து விளையாடி உள்ளார்.அன்பு பாசம் காதல் ஆவேசம் கொஞ்சல் கெஞ்சல் என்று டி ராஜேந்தரை நினைவு படுத்தி வெளுத்து வாங்கியுள்ளார். சில இடத்தில் மிகையாகத் தோன்றினாலும் அஞ்சாமல் தைரியமாக நடித்துள்ளார். அம்மாவாக வரும் அம்பிகா பாந்தமான நடிப்பில் அனுதாபங்களை அள்ளுகிறார்.

காமெடி ட்ராக் போல் வரும் ரோபோ சங்கர் சம்பந்தப்பட்ட காட்சிகளைப் பெரிதாக ரசிக்க முடியவில்லை. சாக்ஷியின் தந்தையாக வரும் பொன்வண்ணன் குறைந்த அளவிலான காட்சிகளிலே வந்து போகிறார்.

இயக்குநர் நல்ல கதையைத்தான் எடுக்க நினைத்திருக்கிறார். ஆனால் திரைக்கதை செய்வதில் கவனக்குறைவாக நடந்து கொண்டு நாடகத்தனமான காட்சிகள் அமைத்து படத்தை மலினம் ஆக்கிவிட்டார்.

அம்மா சென்டிமென்ட் காட்சிகள் மட்டும் ஆறுதல் என்று கூறலாம் .இயக்குநர் நினைத்த விதத்தில் ஒளிப்பதிவும் இசையும் அவருடன் பயணித்துள்ளன.இயக்குநர் கவனத்துடன் அடுத்தடுத்த படிகளிலே ஏறினால் அவர் நல்ல குணச்சித்திர, நகைச்சுவை நடிகராக வருவதற்கு வாய்ப்புள்ளது.

சற்று விறுவிறுப்பான கதையை இயக்க இயக்குனருக்கு இன்னும் அனுபவம் தேவை

 

Previous Post

அசரடிக்கும் பிரம்மாண்ட காட்சிகள், த்ரில்லிங்கான புதிய கதாபாத்திரங்கள் என இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் பிரம்மாண்டமான ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படம் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு தொடங்கி இருக்கும் கவுண்டவுன் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது!

Next Post

சாவீ – விமர்சனம் ரேட்டிங் – 3/5

Next Post
சாவீ – விமர்சனம்   ரேட்டிங் – 3/5

சாவீ - விமர்சனம் ரேட்டிங் - 3/5

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • சோனி மியூசிக் வழங்கும் ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” வரும் ஜூன் 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கியூப்ஸ் என்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் ஷெரீப் முகம்மது வழங்கும் ‘காட்டாளன்’ திரைப்படத்தை ஜி எஸ் சினிமா இன்டர்நேஷனல் லெனின் மே 28ம் தேதி தமிழகமெங்கும் வெளியிடுகிறார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.