• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘திரெளபதி2’ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க வலியுறுத்தும் இயக்குநர் மோகன் ஜி!

by Tamil2daynews
December 5, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘திரெளபதி2’ திரைப்படத்தின் ‘எம் கோனே’ பாடல் குறித்து பாடகி சின்மயி தான் பதிவிட்ட ட்வீட்டை நீக்க வலியுறுத்தும் இயக்குநர் மோகன் ஜி!

 

வெளியாகவிருக்கும் ‘திரௌபதி 2’ படத்தின் முதல் தனிப்பாடலான ‘எம் கோனே’ சமீபத்தில் வெளியானது. இந்தப் பாடலைப் பாடிய சின்மயி வெளியிட்டுள்ள கருத்தால் பாடலை சுற்றி எழுந்துள்ள விமர்சனங்களுக் இயக்குநர் மோகன் ஜி பதிலளித்துள்ளார்.

இந்த பாடல் வெளியான பின்பு பாடலை பாடிய  சின்மயி, மன்னிப்பு கேட்டு தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவிட்டார். அதாவது, அந்த பாடலை பதிவு செய்யும் நேரத்தில் படத்தின் சித்தாந்த பின்னணி குறித்து தனக்குத் தெரியாது என்றும், தெரிந்திருந்தால் பாடலை பாடியிருக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

சின்மயி வெளியிட்டிருக்கும் இந்தப் பதிவிற்கு இயக்குநர் மோகன்.ஜி கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் பாடலுக்கு சின்மயி குரலை தனிப்பட்ட முறையில் தான் தேர்ந்தெடுத்ததாகவும், இசையமைப்பாளர் இல்லாமல் பாடல் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர்  குறிப்பிட்டார். மேலும், பாடலுக்குத் தேவையான பாணி குறித்து மட்டுமே சின்மயியிடம் விளக்கப்பட்டதாகவும் படத்தின் கருத்தியல் விவரங்களும் விவாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
Mohan G urges Chinmayi Sripada for clear explanation over Draupadi 2 apology amid controversy - India Todayசின்மயி தன்னிடமோ அல்லது இசையமைப்பாளரிடமோ விளக்கம் கேட்காமல் தனது கருத்தை வெளியிட்டது ஆச்சரியமாக இருப்பதாகவும் சின்மயி தனது கருத்துக்களை தெளிவுபடுத்த வேண்டும் அல்லது ட்வீட்டை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் இயக்குநர் கூறியுள்ளார்.

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினரை குறிவைக்க வேண்டாம் என்றும், விமர்சனங்கள் தன்னை மட்டுமே நோக்கி இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மோகன் ஜி. ஒட்டுமொத்த படக்குழுவினரை குறிவைத்து பேசுவது கோழைத்தனம் என்றும் அவர்  குறிப்பிடுகிறார்.

சின்மயி குறிப்பிடும் முரண்பாடான சித்தாந்தங்கள் பற்றி கேள்வி எழுப்பும் இயக்குநர், உண்மை மற்றும் நம்பிக்கை எனப் பொருள்படும் ‘ஸ்ரீபாதா’ என்ற குடும்பப் பெயரை  சின்மயி எதற்காக தனது பெயருடன் இணைத்து வைத்துள்ளார் என்றும், அவர் குறிப்பிடும் சித்தாந்த வேறுபாடுகள் குறித்து அவருக்குத் தெளிவாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டார்.

Previous Post

*காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா “அகண்டா 2: தாண்டவம்” தமிழ் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

Next Post

“நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்” – இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்!

Next Post
“நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்” – இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்!

“நாங்கள் வாழ்ந்ததாக உணர்ந்த ஒரு கதையைச் சொல்ல விரும்பினோம்” - இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன்!

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • டி. கோபிசந்த், சங்கல்ப் ரெட்டி, ஸ்ரீனிவாசா சித்தூரியின் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன், பவன் குமார் வழங்கும் வரலாற்றுப் படம் ‘பாரதவர்ஷா’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.