• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

by Tamil2daynews
December 24, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பார்வதா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

 

தேசிய விருதினை வென்ற ‘அசுரன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அழுத்தமாக தடம் பதித்த கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
நடிகர் கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தில் கென் கருணாஸ், சுராஜ் வெஞ்சாரமூடு, தேவதர்ஷினி, அனீஷ்மா அனில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி  யாதவ், நளினி ஆகியோருடன் டிஜிட்டல் திரை பிரபலங்களான சின்ன தமிழா-  தாஜ்மோலா – கெட்டவன் மணிகண்டன்- கேரன் வின்சென்ட் – உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ .வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் மற்றும் சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
”இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் பாரம்பரியமான முறையில் பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஒரே கட்டமாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இடைவிடாமல் அறுபது நாட்கள் வரை நடைபெற்றது. மாணவ மாணவியர்களின் பள்ளிக்கூட வாழ்க்கையை திரையில் நேர்த்தியாக காட்சிப்படுத்துவதற்காக சென்னையின் மையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது தினமும் குறைந்த பட்சம் நூறு துணை நடிகர்கள் கலந்து கொண்டனர். முக்கிய காட்சிகளை படமாக்கும் போது 300 முதல் 450 துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டனர். மேலும் படத்தின் முக்கிய பகுதியை படமாக்குவதற்காக படக் குழுவினர் கேரளாவில் உள்ள ஆலப்புழாவிற்கும் ஒரு வாரம் பயணம் மேற்கொண்டனர்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையில் உருவான பாடல் காட்சிக்கு நடன இயக்குநர் ஷோபி மாஸ்டரின் நடன அசைவில் பிரம்மாண்டமான பாடல் காட்சியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மூத்த நடிகை நளினி இப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் மறுபிரவேசம் செய்திருக்கிறார்.

இப்படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே வியாபார ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு வருகிறது. அறிமுக கதாநாயகன் – அறிமுக இயக்குநர் – அறிமுக தயாரிப்பு நிறுவனம் – எனும் இந்த கூட்டணிக்கு இது அரிய நிகழ்வாக கருதப்படுகிறது.

இத்திரைப்படத்தை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டு வருகிறது. அத்துடன் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று வெளியாகும் ” என தெரிவித்தனர்.
Previous Post

கொல்கத்தாவில் எஸ்.ஏ.சிக்கு சிறந்த நடிகர் விருது!

Next Post

பிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்!

Next Post

பிரம்மாண்டமான புராண காவிய கதைக்காக மீண்டும் இணையும் நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குநர் திரிவிக்ரம்!

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.