• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஃப்ளாக் (FLAG) – விமர்சனம்

by Tamil2daynews
November 15, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஃப்ளாக் (FLAG) – விமர்சனம் 

 

பெற்றோரை இழந்த சிறுவன் திஹான், பெங்களூரில் உள்ள தனது தாத்தா அரவணைப்பில் வளர்கிறார். தேசியக் கொடி தயாரிக்கும் இடத்தில் பணியாற்றும் தாத்தாவுக்கு டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் தேசியக் கொடியை நேரில் பார்க்க வேண்டும், என்பது கனவு.

இதற்கிடையே, தாத்தா திடீரென்று உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்தப்படுக்கையாகி விடுகிறார். தாத்தாவின் உயிர் அவரது கனவில் தான் இருக்கிறது, என்பதை உணரும் திஹான், தன் மூலம் அவரது கனவை நிறைவேற்ற முடிவு செய்து, தனியாக டெல்லி நோக்கி பயணிக்கிறார். தன் பயணத்தில் பலவிதமான இடையூறுகளையும், மனிதர்களையும் சந்திக்கும் திஹான், தனது தாத்தாவின் கனவை நிறைவேற்றினாரா? இல்லையா ? என்பதை மக்கள் உள்ளத்தில் இயல்பாக இருக்கும் நாட்டுப்பற்றை அடையாளம் கண்டு, அதைச் சமூகப் பொறுப்பாக மாற்றும் வகையில் சொல்வதே ‘ஃபிளாக்’ (FLAG).

மொழி, மதம், உணவு மற்றும் உடை எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும், ‘இந்தியர்’ என்ற ஒற்றை அடையாளம் அனைவரையும் இணைக்கிறது என்பதையும், பல வேறுபட்ட இனக்குழுக்கள் ஒரே கொடியின் கீழ் அமைதியாகவும் சகோதரத்துவத்துடனும் வாழ்வது உலக நாடுகளுக்கே ஒரு சிறந்த பாடமாக உள்ளது என்பதையும் ஒரு சிறுவனின் பயணம் மூலம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர்.

மோகனவேல் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் சிறுவன் திஹான், தனது குறும்புத்தனமான நடிப்பால் வர்வதோடு, பெற்றோரை இழந்து சோகத்தில் வாடும் போது பார்வையாளர்கள் இதயங்களை கனக்கச் செய்கிறார். தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அவர் மேற்கொள்ளும் டெல்லி பயணமும், எதிர்கொள்ளும் சில சம்பவங்களும், மனிதர்களும் பார்வையாளர்கள் மனதை பதைபதைக்க வைத்தாலும், தனது இயல்பான குழந்தை தனமான நடிப்பின் மூலமாக, பல்வேறு அனுபவங்களை வழங்கி அவருடன் பயணப்படும் அனுபவத்தை ஏற்படுத்தி விடுகிறார்.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிக்கி மக்கி ஜா, கிரி துவாரகேஷ், ஆனந்த், அபிநவ் கோசாமி, அமீர் மாலிக், பபுஷா, சினி உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் இந்தியாவின் பல்வேறு கலாச்சார பின்னணி கொண்ட மக்களை நினைவுப்படுத்தும் வகையில் பயணித்திருக்கிறார்கள்.ஃபிளாக்'(FLAG) திரைப்பட விமர்சனம் – Cinema Inbox

ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர், தனது கேமரா கண்கள் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பரந்திருக்கும் நம் பாரதத்தின் பல்வேறு கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை நம் கண்முன் நிறுத்தியிருப்பதோடு, நம் இயற்கை வளம் மற்றும் கட்டிடக்கலையை வெளிக்காட்டும் பிரமாண்ட கோவில்களை கூடுதல் அழகியலோடு காட்சிப்படுத்தி மெய்சிலிர்க்க வைத்திருக்கிறார்.

ராஜா ரவி வர்மா மற்றும் பாலசுப்பிரமணியம் இசை ஒரு சிறுவனின் ஆச்சரியம், பயம் மற்றும் குறும்புத்தனம் ஆகியவற்றை பார்வையாளர்கள் மனதில் திறம்பட கடத்தியிருப்பதோடு, தீவிரமான தேசபக்தி, மறுபுறம் சிறுவனின் மென்மையான மற்றும் விளையாட்டுத்தனமான உலகத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஒரு சிறுவனின் நீண்ட பயணத்தைச் சலிப்பு தட்டாமல், அதே சமயம் அவனது பயணத்தின் நீளத்தையும் சிரமத்தையும் பார்வையாளர்கள் உணரும் வகையில் காட்சிகளை தொகுத்து கதை சொல்லியிருக்கும் படத்தொகுப்பாளர் வரதராஜனனின் பணி சிறப்பு.பிளாக் - Flag - திரைப்பட விமர்சனம் | Virakesari.lk

சிறுவனின் தனிமை, தேடல் மற்றும் பயணத்தின் வழியே அவன் அடையும் மாற்றங்களை, தேவையற்ற வசனங்கள் இன்றி வெறும் காட்சிகளின் மூலமாகவே உணர வைத்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர், அந்த பயணத்தின் மூலம் நாட்டின் நிலப்பரப்பை வெறும் புவியியல் இடங்களாகப் பார்க்காமல், அவற்றை களமாக பயன்படுத்தி தாய்நாட்டின் மீதான அன்பையும், மரியாதையையும் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சிறுவனின் பயணம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக தோன்றினாலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மொழி, கலை, உணவு மற்றும் பண்பாட்டுச் சிறப்புகளை “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற கோணத்தில் அழகாகப் படம்பிடித்துக் காட்டியிருக்கும் இயக்குநர் எஸ்.பி.பொன்சங்கர், மக்கள் மனதில் எந்தவிதத் திணிப்புமின்றி, மிக மென்மையான வழியில் ஆழமான தேசியப் பற்றை விதைத்திருப்பதோடு, எதிர்காலத் தூண்களான சிறுவர்கள் மனதில் நாட்டுப்பற்றையும், நம் தொன்மையான கலாச்சாரத்தின் மீதான பெரும் மரியாதையையும் விதைத்திருப்பது ஒரு மகத்தான செயலாகும்.

சினிமா மக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய ஊடகம் என்றாலும், அதை வியாபார நோக்கோத்தோடு அணுகுபவர்களே அதிகம். இத்தகைய சூழ்நிலையில், இப்படி ஒரு படத்தை தயாரித்த ஐ & ஐ மூவிஸ் வைர பிரகாஷை பாராட்டுவதோடு நின்றுவிடாமல், இந்த படத்தை அனைத்து தரப்பினரும் பார்த்து கொண்டாட வேண்டும்.

ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் ஒரு சல்யூட்.

இந்தப் படம் இந்திய தேசத்தின் பெருமை
Previous Post

ஜான் டோ – விமர்சனம்

Next Post

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)!

Next Post

கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

Popular News

  • கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 01’ – முதல் கட்டப் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வான ‘அறிவு’ – உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் திரைப்படம்!

November 15, 2026

தென்னிந்தியாவின் முதல் மெட்டா சினிமாவாக உருவாகியுள்ள இயக்குநர் K.P. ஜெகனின் ‘ஜெயில் மேட்ஸ்’ (Jail Mates ) டைட்டில் டீசர் வெளியீடு

November 15, 2026

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

November 15, 2026

கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியீடு!

November 15, 2026

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye)!

November 15, 2026

ஃப்ளாக் (FLAG) – விமர்சனம்

November 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.