• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ்” படத்தின் புரோமோ(வுக்கு) – அபார வரவேற்பு!!!

by Tamil2daynews
December 24, 2025
in சினிமா செய்திகள்
0
ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ்” படத்தின் புரோமோ(வுக்கு) – அபார வரவேற்பு!!!
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் “ஹேப்பி ராஜ்” படத்தின் புரோமோ(வுக்கு) – அபார வரவேற்பு!!!

Beyond Pictures தயாரிப்பாளர் ஜெயவர்தன் தயாரிப்பில், திரைப்பட இயக்குநர் மரியா இளஞ்செழியன்  இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் – ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கும் படம் “ஹேப்பி ராஜ்”

பெரிதும் பேசப்பட்ட தலைப்பு அறிவிப்புக்குப் பிறகு, “ஹேப்பி ராஜ்” படக்குழு தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ புரோமோவை வெளியிட்டுள்ளது. புரோமோ வெளியானதிலிருந்து அனைத்து தளங்களிலும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பையும் உற்சாகமான ஆதரவையும் பெற்று வருகிறது. படத்தின் உயிரோட்டத்தையும், நேர்மறை உணர்வையும் அழகாகப் படம் பிடித்துக் காட்டும் இந்த புரோமோ, ரசிகர்கள், திரையுலகினர் மற்றும் சினிமா ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Beyond Pictures நிறுவனம் சார்பில் ஜெயவர்தன் தயாரிக்கும் “ஹேப்பி ராஜ்”, அந்த தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாகும். அனைத்து வயதினரையும் கவரும் முழுமையான பொழுதுபோக்கு படமாக இதை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த படம் திட்டமிடப்பட்டுள்ளது. மரியா இளஞ்செழியன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த புரோமோ, நம்பிக்கை, ஆறுதல் மற்றும் மனதிற்கு இனிமையான உணர்வுகள் நிரம்பிய உலகை சுட்டிக்காட்டுகிறது. மேலும் படத்தின் தலைப்பே கதாபாத்திரத்தின் நம்பிக்கையூட்டும்  உணர்வை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தப் புரோமோ, அதன் புத்துணர்ச்சியான அணுகுமுறை, சுறுசுறுப்பான காட்சிகள் மற்றும் கதாநாயக வேடத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாரின் மகிழ்ச்சியான தோற்றம் ஆகியவற்றுக்காக பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இலகுவான மனநிலையும், சந்தோஷம் நிரம்பிய திரையனுபவத்தை வழங்கும் தன்மையும் பார்வையாளர் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இத்தகைய கதைகள் இன்றைய காலத்தில் மிகவும் தேவையானவை என்பதால், சமூக ஊடகங்களில் புரோமோவைப் பற்றிய நேர்மறை கருத்துகள் குவிந்து வருகின்றன. பலர் இதன் நெருக்கமான உணர்வையும் ஊக்கமளிக்கும் தன்மையையும் புகழ்ந்து வருகின்றனர்.
இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு எவர்கிரீன் நடிகர் அப்பாஸ் “ஹேப்பி ராஜ்” மூலம் மீண்டும் வருவது ரசிகர்களிடையே கூடுதல் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. துணை நடிகர்களாக ஜார்ஜ் மரியம், பிரார்த்தனா, அதிர்ச்சி அருண், மதுரை முத்து, சோஃபா பாய் ரசூல் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
மரியா இளஞ்செழியன் எழுதி இயக்கும் இந்த படத்திற்கு ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பாளராக உள்ளார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஜஸ்டின் பிரபாகரன், படத்தொகுப்பை ஆர்.கே. செல்வா, கலை இயக்கத்தை குமார் கங்கப்பா, உடை வடிவமைப்பை பிரவீன் ராஜா மேற்கொண்டுள்ளனர். படத்தின் மக்கள் தொடர்பு பணிகளை ரேகா கவனித்து வருகிறார்.
சரியான மனநிலையை அமைத்துக் கொடுத்து, இத்தனை உற்சாகமான வரவேற்பைப் பெற்றுள்ள “ஹேப்பி ராஜ்”, சிரிப்பு, உணர்வு மற்றும் நிறைவான மகிழ்ச்சியை ரசிகர்களுக்கு வழங்கும் ஒரு உணர்வுப்பூர்வமான பொழுதுபோக்கு படமாக உருவெடுத்து வருகிறது.
Previous Post

சிறை – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘மிஷன் சாண்டா’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது

Next Post
உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘மிஷன் சாண்டா’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது

உலகத்தரம் வாய்ந்த அனிமேஷன் காட்சிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘மிஷன் சாண்டா’ திரைப்படம் கிறிஸ்துமஸ் வெளியீடாக உலகெங்கும் ரிலீஸ் ஆகிறது

Popular News

  • வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஆதி புருஷ்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக சைஃப் அலி கான் ஒப்பந்தம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வாரி வாரி பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாப் நட்சத்திர பாடகி தீ (DHEE)

May 2, 2026

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, பிரீத்தி முகுந்தன் நடிக்கும் குடும்ப ஆக்ஷன் திரில்லர் ‘பிளாஸ்ட்’

May 2, 2026

‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் உணர்ச்சிமிகு பயணத்தை வெளிப்படுத்தும் கவித்துவமான ‘வெள்ளிச்சுடரே’ பாடல்!

May 2, 2026

பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது

May 2, 2026

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

May 2, 2026

நடிகர் சூர்யாவின் ‘கருப்பு ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

May 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.