• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

ஜாக்கி – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

by Tamil2daynews
January 24, 2026
in விமர்சனம்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜாக்கி – விமர்சனம்

 

ஆடுகளம் படத்திற்குப் பிறகு மதுரை மாவட்டத்தை சம்பந்தமான ஆடுகளை போட்டியாக வைத்து கதைக்களமாக உருவாகி இருக்கும் படம் ஜாக்கி.

ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை போன்ற கலாச்சார விளையாட்டுகள் போல் கிடா முட்டு சண்டையும் காலம் காலமாக மதுரை பகுதியில் நடைபெற்று வருகிறது. கிடா முட்டு சண்டையை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது ஜாக்கி திரைப்படம்.
மதுரையில் ஷேர் ஆட்டோ ஓட்டும் ராமர் (யுவன் கிருஷ்ணா)தான் வளர்க்கும் காளி என்ற கிடாவை கிடா முட்டு போட்டிக்கு அழைத்து வருகிறார். இந்த போட்டியில் வருட வருடம் ஜெயித்து மெடல் வாங்கும் கார்த்தி  (ரிதான் கிருஷ்ணாஸ்) இந்தாண்டும் போட்டியில் வெல்கிறார். அவரது கிடாவுடன் மோதலுக்கு தயாராகிறார் ராமர். இவர்களது கிடாக்கள் மோதும் நிலையில் ராமரின் கிடா காளி வெற்றி பெறுகிறது. அதை பொறுத்துக் கொள்ள முடியாத கார்த்தி அடுத்தடுத்து ராமருக்கு தொல்லை தருவதுடன் ராமரின் கிடா காளியை வெட்டி சாய்க்க முயல்கிறார். இந்த மோதலின் முடிவு என்ன என்பது ஆக்சன் அதிரடியுடன் கிளைமாக்ஸ் விளக்குகிறது.
கிடா முட்டு சண்டை என்பது அவ்வப்போது ஒரு சில படங்களில் ஓரிரு காட்சிகளாக வந்து சென்றிருக்கிறது. ஆனால் கிடா முட்டு சண்டையை மையமாக வைத்து வந்திருக்கும் முதல் படம் இதுதான். இந்த கதையை தயாரிப்பதற்காக இயக்குனர் பிரகபல் மூன்று ஆண்டுகள் மதுரையிலேயே தங்கி அதன் வரலாறுகளை ஆராய்ந்து ஸ்கிரிப்ட் உருவாக்கியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏனோ தானோ என்று கதையை எழுதி விடாமல் கிடா முட்டு சண்டை பாரம்பரியம், சென்டிமெண்ட், காதல் என்று ஒரு முழு திரைப்படமாக திரைக்கதை அமைத்திருப்பது ரசிக்க முடிகிறது.

ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் யுவன் கிருஷ்ணா தனது கிடா காளியிடம் காட்டும் பாசம், நேசம் எல்லாமே உயிர்ப்பு டன் இருக்கிறது. அந்த கிடாவுடன் அவர் வருடக் கணக்கில் பழகி தான் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்பதை காட்சிக்கு காட்சி புரிந்து கொள்ள முடிகிறது.
வில்லன் கார்த்தியாக வரும் ரிதான் கிருஷ்ணாஸ் தொடக்கம் முதல் கிளைமாக்ஸ் வரை தனது வில்லத்தன கெத்தை விடாமல் நடித்திருக்கிறார். முரட்டுத்தனமான கிடா உடன் இவரும் நன்கு பழகித்தான் இந்த படத்தில் நடித்திருக்க முடியும் என்பதை முரட்டு கிடாவின் கொம்பை பிடித்து சண்டை மைதானத்திற்கு அழைத்து வரும்போது உணர முடிகிறது.கிடாக்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் முட்டி மோதிக் கொள்ளும் அந்த சண்டையின்போது எழும் கொம்பு மோதல் சத்தம் காதில் இடியாக பாய்கிறது.
அம்மு அபிராமி காதல் காட்சிக்கு பயன்பட்டிருக்கிறார். மற்றபடி அவருக்கு பெரிதாக வேலை இல்லை.

எப்போதும் வில்லனாக வரும் மது சூதனராவ் இந்த படத்தில் நியாயமான நடுவராக வருவது ஆச்சரியம்.

படத்தை பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்திருக்கிறார்.

புது இசையமைப்பாளர் சக்தி பாலாஜி மதுரை மண்ணுக்கு ஏற்ற, கிடா சண்டைக்கு விறுவிறுப்பு ஏற்றுகிற இசை அமைத்திருக்கிறார்.
என். எஸ். உதயகுமார் ஒளிப்பதிவு பழைய மதுரையை பார்ப்பது போல் காட்சிகளை சித்தரித்திருக்கிறது.

ஆர் பி பாலா நறுக்கு தெறிக்கும் வசனங்களை எழுதி இருக்கிறார்.

ஏற்கனவே மட்டி என்ற படத்தை இயக்கிய பிரகபல் மற்றுமொரு ஜாக்கி என்ற கடினமான கதையை கையாண்டிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார்.

முத்தத்தில் இந்த ஜாக்கி சுமாரான படமாக இருந்தாலும் திரையில் காணும் போது புதிய அனுபவத்தை தருகிறது.
Previous Post

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13 ‘ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

Next Post

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Next Post

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

Popular News

  • அஜித்குமார் ரேசிங்கின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சில நொடிகளில்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பாலிவுட்டில் கால் பதித்த இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் (Hesham Abdul Wahab )!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) –  விமர்சனம்

வங்காள விரிகுடா (குறுநில மன்னன்) – விமர்சனம்

January 25, 2026

டோவினோ தாமஸ் பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi) ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

January 24, 2026

ஜாக்கி – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

January 24, 2026

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் தயாரிப்பில் L. K. அக்ஷய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 13 ‘ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கப்பட்டு, படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது

January 24, 2026

மாயபிம்பம் : A 2005 Love Story திரைப்படம் அதன் பல அடுக்குகளைக் கொண்ட கதைக்களம், திரைக்கதை மற்றும் நடிகர்களின் நடிப்புகளுக்காக பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் இருந்து வலுவான பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

January 24, 2026

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் – புருஷன் !

January 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.