• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

by Tamil2daynews
January 30, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“ஆகாசம்லோ ஒக தாரா” (Aakasamlo Oka Tara) படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

 

துல்கர் சல்மான் நடித்துவரும் “ஆகாசம்லோ ஒக தாரா” திரைப்பட உலகிலிருந்து நடிகை ஸ்ருதி ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளார்.

Geetha Arts & Swapna Cinema வழங்க,  சந்தீப் குன்னம் ( Sandeep Gunnam) , ரம்யா குன்னம் (Ramya Gunnam) தயாரிப்பில் உருவாகும் இந்த படம், 2026 கோடைக்காலத்தில் பான்-இந்தியா அளவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது

தொடர்ச்சியான பிளாக்பஸ்டர் வெற்றிகளாலும், பான்-இந்தியா அளவிலான புகழாலும் உச்சத்தில் இருக்கும்  நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான், அடுத்ததாக  “ஆகாசம்லோ ஒக தாரா” படத்தில் நடித்து வருகிறார் . புதுமையான கதை சொல்லல் மற்றும்  தனித்துவமான காட்சி அமைப்புகளுடன், பல வெற்றிப்படங்களைத் தந்து,  புகழ் பெற்ற பவன் சடினேனி  ( Pavan Sadineni ) இப்படத்தை இயக்குகிறார் . புகழ்பெற்ற Geetha Arts மற்றும் Swapna Cinema வழங்கும் இந்த திரைப்படத்தை, சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் தயாரிக்கின்றனர். புதுமுக நடிகை சாத்விகா வீரவள்ளி துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதற்கு முன்பு வெளியான புரமோக்கள், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன்,  இப்படத்தின் மீது  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், படக்குழு ரசிகர்களுக்கு ஒரு இனிய ஆச்சரியத்தை வழங்கியுள்ளது. சமீப காலமாக தேர்ந்தெடுத்த படைப்புகளில் மட்டுமே நடிக்கும் நடிகை ஸ்ருதி ஹாசன், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, அவரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. போஸ்டரில் கண்ணாடியுடன், கீழ்நோக்கி பதிந்த தீவிரமான பார்வையுடன்,  இயல்பான தோற்றத்தில் இருக்கிறார் —அது அவரின் கதாபாத்திரத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது. அவரது உதட்டில் இருக்கும் சிகரெட்டும், மேலெழும் புகையும், அந்த கதாபாத்திரத்தில் உள்ள உணர்ச்சி ஆழத்தையும் சொல்லப்படாத கதைகளையும் சுட்டிக்காட்டுகிறது.Image
இந்த திரைப்படத்தின்  கதையோட்டத்தில் ஸ்ருதி ஹாசனின் கதாபாத்திரம் ,கதையின் திருப்புமுனையாக முக்கிய பங்கு வகிக்கவுள்ளது. அவர் இப்படத்தில் இணைந்துள்ளது, கதையை ஒரு புதிய கட்டத்திற்கு கொண்டு செல்லும். அவரது தோற்றமே, இந்த டிராமாவுக்கு புதிய பரிமாணத்தையும் கனத்தையும் சேர்க்கும் சக்தியாக அவரை நிலைநிறுத்துகிறது.இந்த திரைப்படத்தின் இசையமைப்பை ஜி.வி. பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார். ஒளிப்பதிவை சுஜித் சாரங், தயாரிப்பு வடிவமைப்பை ஸ்வேதா சாபு சிரில் கவனிக்கின்றனர்.தற்போது தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் மலையாள மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக தயாராகி வருகிறது.

நடிகர்கள்: துல்கர் சல்மான்,  சாத்விகா வீரவள்ளி, ஸ்ருதி ஹாசன் மற்றும் பலர்

தொழில்நுட்ப குழு:
இயக்கம்: பவன் சடினேனி
கதை: கங்கராஜு குன்னம்
தயாரிப்பாளர்கள்: சந்தீப் குன்னம், ரம்யா குன்னம்
வழங்குபவர்கள்: Geetha Arts, Swapna Cinema
இசை: GV பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு: சுஜித் சாரங் (Sujith Sarang)

தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்வேதா சாபு சிரில்
Previous Post

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா

Next Post

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

Next Post

டஸ்கர்ஸ் டென் பிக்சர்ஸ் வழங்கும் ‘வெள்ளகுதிர’ பட புகழ் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் கோமலி பிரசாத் நடிக்கும் ’மண்டவெட்டி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது!

Popular News

  • ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    ஃபேண்டஸி உலகத்துக்குள் அழைத்துச் செல்லும் ‘டிரோன்ஸ்’ டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஹைக்கூ’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

October 12, 2026

கற்பனை உலகில் புதிய அனுபவம் தரும் ‘டிரோன்ஸ்’ – பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

October 12, 2026
‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

‘சிக்னல் அட் 11:30’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகை புஜிதா பொன்னாடா!

October 12, 2026

‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது!

October 12, 2026

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

October 12, 2026

சிலம்பரசன் TR வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரைலர்… காதல், ஆக்ஷன், காமெடி என கமர்ஷியல் அம்சங்களுடன் கவனம் ஈர்க்கும் லியோ சிவக்குமாரின் புதிய படம்!

October 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.