• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மை லார்ட் – விமர்சனம்

by Tamil2daynews
February 12, 2026
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மை லார்ட் – விமர்சனம் 

 

சசிகுமார் நடிப்பில் ராஜீமுருகன் இயக்கத்தில் வந்திருக்கும் படம் மை லார்ட்.

தமிழ் சினிமாவில் மனிதநேயம் கொண்ட கதைகள் எப்பொழுதோ ஒருமுறைதான் வருகின்றது. அப்படி மனிதநேயத்தோடு வந்திருக்கும் படம் தான் மை லார்ட்..

தலைப்பைப் பார்த்து இது ஏதோ நீதி மன்றம் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம். அதிகார மமதையில் ஆதிக்கம் செலுத்த நினைப்பவர்களுக்கு ஒரு சாமானியன் தீர்ப்பு எழுத வாய்ப்புக் கிடைத்தால் அந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதுதான் கதை.

அப்படி அதிகார போதை கொண்ட மத்திய மந்திரியான ஆஷா சரத்துக்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதாக, மாற்று சிறுநீரகம் பொருத்த நேர்கிறது. ஆனால் அவரது ரத்த வகை அரிதானதாக இருக்க, சிறுநீரக தானம் பெறுவதற்கான பெரும் தேடலில் இரண்டு பேரைத் தேர்வு செய்கிறார்கள். அந்த இருவருள் ஒருவர் சசிகுமார்.

வெளியுலகுக்கு ஆஷா சரத் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்வதால் இந்த ஆபரேஷனை ரகசியமாக நடத்த முடிவெடுக்கிறார்கள்.

இதற்காக கோவில்பட்டியில் இருக்கும் சசிகுமாரைக் கூட்டி வருவதில் இருக்கும் சிக்கல்கள்தான் மொத்த படமும்.

சசிகுமாரின் அறிமுகக் காட்சியே அமர்க்களம். அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருக்க, பிணவறையில் பிரேதமாக இருக்கும் அவர் உயிரோடு வெளியே வந்து போடும் ஒற்றை ஷாட் ஆட்டம் ‘பலே..!’

கொஞ்சம் வெகுளியாக… போதிய கல்வியறிவு பெறாதவராக… ஆனால் மிகவும் நல்லவராக நடிப்பது ஒன்றும் சசிகுமாருக்குப் புதிய விஷயம் இல்லை. அதை இயல்பாக சுமந்து நடித்திருக்கிறார்.

‘மணந்தால் சசிகுமார்…!’ என்கிற ரீதியில் வருகிற மாப்பிள்ளைகளையெல்லாம் தட்டி விட்டு விட்டு இறந்து போன அப்பாவின் ஆவி ஏறியதாக நாடகமாடி சசிகுமாரையே மணக்கும் நாயகி சைத்ராவின் பாத்திரமும் அற்புதம்.

படுக்கையில் இருந்து எழாமல் படுத்துக் கொண்டே நடிப்பில் ஜெயிக்கிறார் மத்திய மந்திரியாக வரும் ஆஷா சரத். பாத்திரத்தை உள்வாங்கி எப்படி அவரால் அத்தனை அற்புதமாக நடிக்க முடிகிறது..? வாவ்..!

ஆனால் அத்தனை டெரரான அந்த பாத்திரம் பொசுக்கென்று நல்லவராகி விடுவதெல்லாம் சினிமாவிற்கான சமன்பாடு.

ஆனால் நடிப்பில் எல்லோரையும் ஓரம் தள்ளி விடுகிறார் குரு சோமசுந்தரம். அடி வங்கி… உதை வாங்கி… மிதி வாங்கி நியாயத்தின் பக்கம் நிற்கும் பத்திரிகை ஆசிரியரான அவரது பாத்திரத்தில் ஜோக்கரின் தாக்கம் நிறைய…

ஆனாலும் அப்படி தெரிந்து விடாத வண்ணம் வேறு ஒரு முகம் காட்டி நடித்திருக்கிறார் சோமு. சிறந்த துணை நடிகருக்கான விருதுகள் இவருக்கு நிச்சயம் கிடைக்கும்.

படம் தொடங்கியதில் இருந்து நானாவித புரோக்கர் வேலை பார்ப்பவராக வரும் அருள் ஏழிலனின் நடிப்பும் கச்சிதம்..!

நீதிபதியாக வரும் ஜெயபிரகாஷ், முற்போக்கு வழக்கறிஞராக வரும் கோபி நயினார் போன்ற முகம் தெரிந்தவர்கள் மட்டுமல்லாமல் முகம் தெரியாத ஒவ்வொரு பாத்திரமும் அத்தனை பொருத்தமாக நடித்திருப்பதற்கு ஒரே காரணம் இயக்குனர் ராஜு முருகனின் திறன்தான்.

நீரவ் ஷாவால் இப்படியும் இயல்பான ஒளிப்பதிவை தர முடியுமா என்று நாம் ஆச்சரியப்படுவதற்குக் காரணம் இயக்குனரின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்ததுதான்.

ராஜுமுருகனின் படம் என்றாலே ஷான் ரோல்டனும் தனிக் கவனம் எடுத்து தேவைக்கு மிகாத இசையைக் கொடுத்து விடுகிறார்.

படம் நெடுக அரசு நிலைப்பாடுகளின் நடைமுறை முரண்பாடுகளை எள்ளலும் நக்கலுமாக விவரிக்கிறது ராஜுமுருகனின் உரையாடல்.

சற்றே மெதுவான கதை சொல்லல் போலத் தெரிந்தாலும் இடைவேளை காட்சியிலும் கிளைமாக்ஸ் காட்சியிலும் நம்முள் ஒரு பதட்டத்தை படர விட்டு விடுகிறார் அவர்.

சசிகுமாரை சுற்றி எழுப்பப்படும் சதி வலையில் எங்கே கண்ணீரோடு படம் முடியப் போகிறதோ என்ற பதை பதைப்பு நம்முள் எழ, சசிகுமார் எடுக்கும் முடிவு அதைவிட ஆனந்த கண்ணீரில் நம்மை நனைக்கிறது.

உள்நாட்டின் அவலங்கள் தொடங்கி உலகத் தரத்தில் முடிகிறது படம்.

படமாக்கலில் நவீனத்துவம் தொடாததும், நகைச்சுவை என்ற பெயரில் இம்சிக்கும் ஓரிரு காட்சிகளும் மட்டும் குறைகள்.

மொத்தத்தில் இந்த மயிலார்ட் மனிதநேயத்தின் மறு உருவம்.
ரேட்டிங் – 3.5 / 5
Previous Post

சசிகுமார்- ராஜு முருகன் கூட்டணியில் ‘ மை லார்ட் ( My Lord) திரைப்பட இசை வெளியீட்டு விழா

Next Post

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”

Next Post

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”

Popular News

  • பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் நாகார்ஜுனாவின் ‘கிங் 100 – King 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா – Karna’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • பேஷன் ஸ்டுடியோஸ், ஆக்ஸெஸ் பிலிம் பேக்டரி, டங்கல் டிவி & RDC மீடியா வழங்கும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக வெளியாகியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜியோஹாட்ஸ்டாரின் புதிய அலுவலக நகைச்சுவைத் தொடர் ‘மிஸ்டர் & மிஸஸ் ஆபிஸ்’ நவம்பர் 18 ஆம் தேதி முதல் ப்ரீமியர் ஆகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஃபேமிலி பாய் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

November 12, 2026

டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் டிப்ஸ் மியூசிக் நிறுவனங்கள் இம்ரான் ஹாஷ்மியின் இசை மற்றும் ஹாரர் திரைப்படமான ‘ரூஹ்’ (ROOH) படத்தில் இணைகின்றன!

November 12, 2026

பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் கே. மணிகண்டன் நடிக்கும் ‘மக்கள் காவலன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர் – IGNORE’ வெளியீடு!

November 12, 2026

லைகா புரொடக்ஷன்ஸ் வழங்கும், மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இஞ்சி வெல்லம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

November 12, 2026
ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

ஹரிசங்கர் நாராயணன் & ஷாரி இணையும் முதல் இருமொழி இன்டி ஆல்பம் பாடல் ‘நீயும் நானும்’!

November 12, 2026

ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் இயக்குநராக அறிமுகமாகும் ‘வன மடி’

November 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.