• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

by Tamil2daynews
February 15, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார்

 

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்கியுள்ள முதல் படத்திற்கு ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தின் முதல் பார்வையை காதலர் தினத்தை முன்னிட்டு பிரபல இயக்குநரும் கோயம்புத்தூர் மண்ணின் மைந்தருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பாராட்டிய அவர், படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் ‍பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிக்கும் இப்படத்தை ‘நாய் சேகர்’ திரைப்படத்தை இயக்கிய ராஜ்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ படத்தை விரைவில் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். திரைப்படத்தின் இசை வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் கண்டு ரசிக்கும் வைகையில் இப்படம் உருவாகியுள்ளது, தொடக்கம் முதல் இறுதி வரை நகைச்சுவைக்கு பஞ்சம் இல்லாத வகையில் இந்த திரைப்படம் இருக்கும் என்று குழுவினர் தெரிவிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தை கிஷோர் ராஜ்குமார் எழுதி இயக்குவதோடு, நாயகனாகவும் நடிக்கிறார். பிரபல மலையாள நடிகையும் ‘கொட்டுக்காளி’ தமிழ் படத்தில் நடித்தவருமான‌ அன்னா பென் நாயகியாக நடிக்க, முன்னணி நடிகர்கள் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.திரைப்படம் குறித்து பேசிய கிஷோர் ராஜ்குமார், “காதலும் நகைச்சுவையும் நிரம்பிய‌ கதை இது. படம் முழுக்க ஃபீல் குட் உணர்வை ரசிகர்களுக்கு தரும் வகையில் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் சார் இயக்கிய படங்கள் போல இன்றைய காலகட்டத்தில் திரைப்படங்கள் வருவதில்லையே என ரசிகர்களிடையே ஒரு ஏக்கம் உண்டு. அந்த இடைவெளியை நிரப்பும் வகையில் இந்த படம் இருக்கும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜோடி பொருத்தம் குறித்து பேசும் இந்த கலகலப்பான படம் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இருக்கும். மிகவும் திறமையான நடிகை என பெயரெடுத்த அன்ன பென் உடன் பணியாற்றியதில் மிகவும் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்களித்த நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றி,” என்றார்.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும் இணை எழுத்தாளராகவும் பிரவீன் பாலு பங்காற்ற, படத்தொகுப்பை ராம் பாண்டியன் கையாள்கிறார். இவர்கள் இருவரும் சதீஷ் நாயகனாக அறிமுகமாகி கிஷோர் ராஜ்குமார் இயக்கிய ‘நாய் சேகர்’ படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. கலகலப்பான பாடல் ஒன்றுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஶ்ரீ சசிகுமார் கலை இயக்குநர் ஆவார். ஆடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர், நிர்வாக தயாரிப்பு – எஸ். என். அஸ்ரப்/நரேஷ் தினகரன்.

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் பேனரில் கார்த்திக் ஸ்ரீநிவாஸ் மற்றும் மகாவீர் அசோக் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் எழுதி, இயக்கி, நாயகனாக நடிக்கும் ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்காக விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Previous Post

அலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்பிரமணி வழங்கும், மலர்விழி நடேசன் இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகி இருக்கும் ’சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!

Next Post

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் ‘அரிசி’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Next Post

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட இரா.‌ முத்தரசனின் 'அரிசி' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

Popular News

  • ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    ‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

    0 shares
    Share 0 Tweet 0
  • புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

‘நிறம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 3, 2026

ஆகஸ்ட் 14ஆம் தேதி ஆலி

August 3, 2026

புத்தியே சிறந்த ஆயுதம் ; க்ரைம் த்ரில்லராக உருவாகும் ‘பீப்’ திரைப்படம்

August 3, 2026

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் ‘டயங்கரம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு

August 3, 2026

கார்த்தி நடிப்பில் ‘சர்தார் 2’ டீசர் வெளியீடு

August 3, 2026

பிரைம் வீடியோ வழங்க, சசிகுமார் நடிக்கும் ‘வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி’ இணையத் தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு.

August 3, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.