• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!

by Tamil2daynews
March 3, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இயக்குநர் மணிகண்டன் இணையும் முத்து என்கிற காட்டான் சீரிஸின் டீசர் வெளியானது !!

 

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸின்  டீசர் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஜியோ ஸ்டார் வெளியீடாக உருவாகியுள்ள இந்த சீரிஸ் விரைவில் OTT தளத்தில் வெளியாக உள்ளது.

டீசரில் , மூன்று வருடமாக புகார் ஏதும் வராததால் மூடப்படும் தருவாயில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தின் காவல் நிலையம், ஒரு மனிதனின் வெட்டப்பட்ட தலையால் உயிர் பெறுகிறது. “முத்துவின் தலை’. யார் இந்த முத்து? அவனது உடல் எங்கே? என்ற தேடல் ஏராளமான ஆச்சரியங்களும் மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. மர்மம் கலந்த காட்சிகள் மற்றும் வித்தியாசமான கதாபாத்திர வடிவமைப்பு என  பார்வையாளர்களின் கவனத்தை வலுவாக  ஈர்க்கின்றது. குறிப்பாக, விஜய் சேதுபதி தலை புதிய தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களிடையே ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சீரிஸின் கதை எதை மையமாகக் கொண்டது என்பது குறித்து முழு விவரம் வெளியாகாதபோதிலும், டீசர் மிகப் புதுமையான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த சீரிஸ்  மூலம் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் M.  மணிகண்டனின் மேஜிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர். முன்பு ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி என அற்புதமான இரண்டு படங்களில் இந்த கூட்டணி ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட படைப்புகளை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மனித உணர்வுகள், சமூக அரசியலின் நுணுக்கங்கள் மற்றும் இயல்பான கதை சொல்லும் பாணியில் தனித்துவம் கொண்ட இயக்குநர் மணிகண்டன், இந்த OTT முயற்சியிலும் அதே வலிமையை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  விஜய் சேதுபதியின் எளிமையான ஆனால் ஆழமான நடிப்பு, கதைக்கு மேலும் உயிரூட்டும் என்பதில் ரசிகர்களுக்கு நம்பிக்கை உள்ளது.

இவர்களின் கூட்டணியை ரசிகர்கள் வெகு ஆவலாக எதிர்பார்த்த நிலையில் இந்த டீசர் பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

இந்த சீரிஸில் நடிகர் பட்டியலிலும் பல வலுவான பெயர்கள் இடம்பெற்றுள்ளன. பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், இர்ஷாத் அலி, ரிஷா ஜேகப்ஸ், கலைவாணி பாஸ்கர், சிங்கம்புலி, முத்துக்குமார், பாலாஜி சக்திவேல், வடிவேல் முருகன்
VJ. பார்வதி, அபி நக்ஷத்ரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பல்துறை அனுபவம் கொண்ட இந்த நடிகர்கள் இணைந்திருப்பது, சீரிஸின் தரத்தை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்து என்கிற காட்டான் தமிழ் OTT உலகில் வித்தியாசமான கதையமைப்புடன் வெளியாகும் முக்கியமான சீரிஸாக பார்க்கப்படுகிறது. டீசர் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யும் படைப்பாக இது அமையும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜியோ ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் படைப்பாக, இயக்குநர் மணிகண்டன் தலைமையில் உருவாகியுள்ள இந்த சீரிஸை,  B. அஜித் குமார், M. மணிகண்டன் இணைந்து இயக்கியுள்ளனர். இந்த சீரிஸ் வரும் 2026 மார்ச் 27 ஆம் தேதி ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.

தொழில் நுட்ப குழு
தயாரிப்பு  – ஜியோ ஹாட்ஸ்டார்,
விஜய்  சேதுபதி புரொடக்ஷன்ஸ்
இயக்குநர்கள் –  B. அஜித் குமார், M. மணிகண்டன்
கதை / திரைக்கதை – M. மணிகண்டன், B.அஜித் குமார், L.A. ராஜ்குமார்
ஒளிப்பதிவு –  N. சண்முக சுந்தரம், மது நீலகண்டன்
எடிட்டர் –  B. அஜித் குமார்
இசையமைப்பாளர் –  ராஜேஷ் முருகேசன்
கலை இயக்குநர் – ஜாக்கி, சாபு மோகன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

link: https://youtu.be/PZEwB1fWtkY?si=D1Qeh679tkFWLOlq
Previous Post

தந்த்ரா பிலிம்ஸ் தயாரிப்பில், சுவாமி ஐயப்பனின் மகிமை சொல்லும் இரண்டு பிரம்மாண்ட திரைப்படங்கள் – தலைப்புகளை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டார்!!

Next Post

இயக்குனர் விஜய் – இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

Next Post

இயக்குனர் விஜய் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியின் 'காதல் ரீசெட் ரிப்பீட்' படத்தின் முன் வெளியீட்டு விழா

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஆரத்தி கிருஷ்ணாவின் ‘லைட்வெயிட்,பேபி!’ படத்தின் கலகலப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்கா மீடியா ஒர்க்ஸ் மற்றும் ஷோயிங் பிசினஸ் நிறுவனங்களின் “ டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் ” ( Don’t Trouble the Trouble ) மின்னல் வேக ஃபர்ஸ்ட் சிங்கிள் “கேக்கு வாக்கு” ( Cakeu Walku ) இசை வீடியோ வெளியாகியுள்ளது.

    0 shares
    Share 0 Tweet 0
  • எதிர்பார்ப்பை எகிறவைத்த “கான் சிட்டி”… டிஜிட்டல் உரிமையை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் !

    0 shares
    Share 0 Tweet 0
  • “வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.