ஹைக்கூ – விமர்சனம்
கவிதைகளில் ஹைலைட்டானது ஹைக்கூ கவிதை. அதைப் போலவே தான் இப்படத்தில் கதையும். நாம் ஒன்றே விரும்பும் போது அது நமக்கு கிடைக்குமா கிடைக்காதா என்ற எண்ணத்தில் யாரும் எதிர்பார்த்து பழகுவதில்லை. நாம் எதையும் எதிர்பார்க்காத நேரத்தில் நாம் எதிர்பார்த்தது கிடைக்கும் அதுதான் இப்படத்தின் கதை சுருக்கம்.

ஹீரோ ஏகன் “இவர் நம்ம வீட்டுப் பையன் பா” என்ற எண்ணத்தை இந்தப்படத்திலும் நமக்குள் ஏற்றியிருக்கிறார். ஒரு எதார்த்தமான நடிகர் என்ற குவாலிட்டியை பல இடங்களில் தருகிறார். நாயகிகள் ஸ்ரீதேவி, பெமினா இருவருமே கேரக்டரின் சாராம்சத்தை உணர்ந்து ஆகச்சிறப்பான நடிப்பைத் தந்துள்ளனர். ஏகனின் நண்பர் கேரக்டர் உள்பட எல்லோரும் கொடுத்த வேலைக்கு நியாயம் செய்துள்ளனர்.
ஐடியில் வேலை பார்க்கும் அந்த காமெடியனை இன்னும் சற்று நேரம் கவரும்படி காட்சிகள் வைத்திருக்கலாம்.
இயக்குநர் ஒரு கம்ப்ளீட் காதல் கதையை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பை திரையெழுத்தில் காட்டியிருக்கிறார். அது பல காட்சிகளில் நன்றாகவே வொர்க் ஆகியுள்ளது. கல்லூரி காதலில் இருக்கும் இன்ட்ரெஸ்டிங் அடுத்த காதலிலும் ஹிப்ட் ஆகி வந்திருப்பது சிறப்பான ஒன்று! குட்டி குட்டி எமோஷ்னலில் இன்னும் கவனம் எடுத்திருக்கலாம். க்ளைமாக்ஸ் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது.
படத்தின் நாயகன் ஏகன் இவர் தான் படத்தின் ஹைலைட் ஹைக்கூ.









