• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

by Tamil2daynews
May 6, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

 

அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.

இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.

சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்‌ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.

“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.

ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது…
“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”

Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்..,
“சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.

LINK:  https://www.instagram.com/p/DX_NcfpGvsA/
Previous Post

நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!

Next Post

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

Next Post

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.