• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

by Tamil2daynews
May 6, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

 

உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து படங்களைத் தயாரித்து வரும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தலைமையிலான சாந்தி டாக்கீஸ் நிறுவனம், ’மாவீரன்’ மற்றும் ’3BHK’ ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு, பாரத் கதாநாயகனாக நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ என்ற புதிய திரைப்படத்தை அறிவித்தது. படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், இப்போது அந்த படத்திற்கு ’காவிய காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.  நகைச்சுவையோடும் கலர்ஃபுல்லாகவும் உருவாகியுள்ள இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பாரத் மற்றும் சான்வே மேக்னா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘காவிய காதல்’ திரைப்படத்தை ஹரிஹரசுதன் அழகிரி இயக்கியுள்ளார். சுவாரஸ்யமான ரொமாண்டிக் எண்டர்டெயினர் திரைப்படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவில், முன்னணி நடிகர்களுடன் பால சரவணனும் இடம்பெற்றிருப்பது படத்தின் நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறது. வண்ணமயமான மற்றும் வசீகரமான காட்சிகள் உற்சாகமான காதல் கதையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது.
Image
நடிகர் பாரத் கதாநாயகனாகவும், ‘குடும்பஸ்தன்’ படத்தில் தனது திறமையான நடிப்பால் கவனம் ஈர்த்த சான்வே மேக்னா கதாநாயகியாகவும், நடிகர் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர்.

சாந்தி டாக்கீஸ் பேனரில் அருண் விஸ்வா தயாரித்துள்ள ‘காவிய காதல்’ படத்தை ஹரிஹரசுதன் அழகிரி எழுதி இயக்கியுள்ளார். படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், கலை இயக்குநராக சிஎஸ் பாலச்சந்தர், ஆடை வடிவமைப்பாளராக கிருத்திகா சேகர், இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

ரொமாண்ஸ், எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த கிளிம்ப்ஸ், முதல் பார்வை இன்றைய தலைமுறை மற்றும்  குடும்ப பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

படத்தின் டீசர், இசை வெளியீடு, டிரெய்லர் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீடு குறித்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Previous Post

ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.

Next Post

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’

Next Post

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.