• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’

by Tamil2daynews
May 6, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் திரையிடப்படும் KVN புரொடக்ஷன்ஸ், தெஸ்பியன் ஃபிலிம்ஸின் ‘பாலன் த பாய்’

 

இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பாலன் த பாய்’. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது. புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘மார்ச் டு ஃபிலிம்’-இல் (Marché du Film) வருகிற மே 14-ஆம் தேதி இந்தப் படத்திற்கான சிறப்பு திரையிடல் நடைபெறவுள்ளது.

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சிதம்பரம் இயக்கும் படம் இது. KVN புரொடக்ஷன்ஸ் (வெங்கட் கே. நாராயணா) மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் (சைலஜா தேசாய் ஃபென்) இணைந்து இப்படத்தை வழங்குகின்றன.

அடையாளம், உயிர்வாழ்வதற்கான போராட்டம் மற்றும் தாய்-சேய் இடையிலான பிணைப்பு ஆகியவற்றை மையமாக கொண்ட உலகளாவிய கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது.
இதுகுறித்து இயக்குநர் சிதம்பரம் பேசும் போது, “நாம் அறியாமலேயே சுமந்து கொண்டிருக்கும் சுமைகள் மற்றும் நாம் சேர வேண்டிய இடத்தை நோக்கிய தேடல் தான் இப்படம். உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாதவர்களுக்காகவே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளேன். உண்மையான சினிமாவை மதிக்கும் கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு இப்படம் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

KVN புரொடக்ஷன்ஸ், திரு. வெங்கட் கே. நாராயணா கூறும் போது, “மலையாள சினிமா இன்று உலகம் கவனிக்கக் கூடிய படைப்புகளை வழங்கி வருகிறது. அந்த உரையாடலின் மையப்புள்ளியாக ‘பாலன் த பாய்’ இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்றார்.

தெஸ்பியன் ஃபிலிம்ஸ், திருமதி. சைலஜா தேசாய் ஃபென், கூறும் போது, “2022-இல் கேன்ஸ் விழாவுக்கு வந்தபோது, அடுத்த முறை ஒரு சிறந்த படத்துடன் வரவேண்டும் என எனக்குள் உறுதி எடுத்தேன். இன்று அந்த வாக்குறுதியை நிறைவேற்றியது பெருமையாக உள்ளது. இந்தப் படம் வயது எல்லைகளைத் தாண்டி உலகெங்கும் உள்ள ரசிகர்களைக் கவரும்,” என்று தெரிவித்தார்.

KVN புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஜித்து மாதவன் எழுத, சிதம்பரம் இயக்கியுள்ளார். சர்வதேச திரைப்பட வல்லுநர்கள் மத்தியில் நடைபெறவுள்ள இந்தத் திரையிடல், ‘பாலன் த பாய்’ திரைப்படத்தை உலகளவில் கொண்டு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில், நடிகர்கள் பாரத், சான்வே மேக்னா நடிக்கும் ’காவிய காதல்’ படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு!

Next Post

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Next Post

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில், திரில்லர் காமெடி டிராமா “பரிமளா & கோ” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.