• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

by Tamil2daynews
May 8, 2026
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
29 – விமர்சனம் 

மேயாத மான், ஆடை, குளு குளு, படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கத்தில் விது, ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள ’29’ திரைப்படம், 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணுக்கு இடையேயான ஆழமான காதல் மற்றும் வாழ்க்கைப் பயணத்தை பேசும் ஒரு எமோஷனல் ரொமான்டிக் படம்.

வாழ்க்கையில் பெரிய நோக்கம் இல்லாத 29 வயது சத்யா (விது), UPSC தேர்வுக்குத் தயாராகும் 21 வயது விஜி (ப்ரீத்தி அஸ்ரானி) மீது கொள்ளும் காதல் மற்றும் அவர்களின் உணர்வுப்பூர்வமான பயணம்தான்  இப்படத்தின் கதை.

29 வயதாகியும் தனக்கென்று தனி அடையாளம் இல்லாமல் தவிக்கும் நாயகன் விது, நாயகி பிரீத்தி அஸ்ரானியின் காதலால், அழகான பெண்ணின் காதலன் என்ற அடையாளத்தை பெறுகிறார். தனக்கு கிடைத்த காதலன் அடையாளமும், பீரித்தியின் காதலும் போதும் என்று வாழ்ந்துக் கொண்டிருக்கும் விதுவுக்கு, காதல் மட்டுமே வாழ்க்கை இல்லை, அதை தாண்டிய ஒரு வாழ்க்கையும், அதில் சாதிக்க வேண்டியதும் அவசியம், என்பதை புரிய வைக்க பிரீத்தி அஸ்ரானி முயற்சிக்கிறார். ஆனால், அது முடியாமல் போக அவர் காதலை முறித்துக்கொள்ள முடிவு செய்கிறார்.
29' Movie Trailer: Director Rathna Kumar Explores An Intense Love Story

தனக்கான அடையாளமாக நினைத்த காதலும், காதலியும் கைவிட்டு போன பிறகு, மீண்டும் தன் அடையாளத்தை தேடி பயணிக்கும் விதுவின் வாழ்க்கை என்ன ஆனது ?, கைவிட்டு சென்ற காதலியுடன் மீண்டும் இணைந்தாரா? இல்லையா ?, என்பதை கொண்டாடும் காதலோடும், காதலை கடந்த எதார்த்த வாழ்க்கையோடும் சேர்த்து சொல்வது தான் ‘29’.

என்ன தான் உருகி உருகி பல வருடங்கள் காதலித்தாலும், காதல் பயணத்தின் முடிவு என்பது சில நிமிட காமம் மட்டுமே, என்பதை கவித்துவத்தோடும், நாகரீகமான முறையிலும் சொல்லியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், பெண்ணை நிலா, மலர், நட்சத்திரம் என்று வர்ணித்தாலும் கடைசியில் அவர் ஒரு பெண் மட்டுமே, ஆணை சிங்கம், காளை என்று வர்ணித்தாலும் அவர் ஒரு ஆண் மட்டுமே, இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்படும் காதல், எதார்த்தமான வாழ்க்கையை விட பெரியது அல்ல, அதையும் தாண்டி இங்கு சாதிக்க நிறைய இருக்கிறது, என்பதை சொன்ன விதமும், அதற்கான காட்சிகளை கையாண்ட முறையும், காதலர்களை மட்டும் அல்ல காதலிக்காதவர்களையும் கைதட்ட வைக்கும்.
Director Rathna Kumar on exploring love and self-discovery in his film '29' - The Hindu

’ரெட்ரோ’ படத்தில் வில்லனாக மிரட்டிய விது, இதில் நாயகனாகவும், காதலனாகவும் கவர்கிறார். காதல் மட்டுமே தன் அடையாளம் என்பதையும், காதலிக்கு தன் நினைவை ஏற்படுத்த எடுக்கும் முயற்சிகளிலும் நிச்சயம் இளம் பெண்களின் கவனம் ஈர்ப்பார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிமையான தோற்றம், காதல் உணர்வுகளையும், காதலி பிரிவால் ஏற்பட்ட மன வலியையும் தன் அளவான நடிப்பின் மூலம் எதார்த்தமாக வெளிப்படுத்தி நடிப்பில் முத்திரை பதித்திருக்கும் விது, கோலிவுட்டில் நிச்சயம் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார், என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார்.

நாயகி பிரீத்தி அஸ்ரானி, அந்நிய மாநிலத்து அழகி என்பது முகத்தில் தெரிந்தாலும், தன் நடிப்பின் மூலம் அதை மறைத்து பார்வையாளர்கள் மனதில் விஜியாக ஒட்டிக்கொள்கிறார். காதலன் கண்ணத்தில் அரைந்து தன் காதலை வெளிப்படுத்துவதும், ஊருக்கு செல்லும் காதலனை வழி அனுப்பும் பதட்டமான மனநிலையை தன் சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி தன் காதலின் ஆழத்தை பார்வையாளர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
Director Rathna Kumar on exploring love and self-discovery in his film '29' - The Hindu

நாயகனின் நண்பராக நடித்திருக்கும் அவினாஸ், காதல் தோல்வியில் புலம்புவது மட்டும் இன்றி அவ்வபோது இறுக்கமான சூழல்களை விலக்கி, பார்வையாளர்களை சிரிக்கவும் வைக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஆதிரா பாண்டியலக்‌ஷ்மி, நாயகியின் அம்மாவாக நடித்திருக்கும் சிந்து ஷியாம் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொறுத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

சான் ரோல்டனின் இசை காதலர்களின் மனதை வருடும்.என்னதான் உருகி உருகி காதலித்தாலும் கடைசியில் காமத்தில் தானே முடியும், என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருந்தாலும், காட்சி மொழியில் அதை மிக நாகரீகமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ரத்னகுமார், காதல் பற்றியும், ஆண் – பெண் பாலினம் மற்றும் எதார்த்தமான வாழ்க்கை பற்றி தன் கூர்மையான மற்றும் நேர்மையான வசனங்கள் மூலம் சொல்லி கைதட்டல் பெறுகிறார்.

29 காதலர்களுக்கு மிகப்பெரிய நிம்மதியும் பெருமூச்சியும் தரும் அது மட்டுமல்ல பல பேரை காதலிக்கவும் தூண்டுகோலாக அமையும் இந்த 29.
Previous Post

மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !

Next Post

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

Next Post

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

Popular News

  • இயக்குநர் ஷிவ் மாதவ்வின் புதிய சினிமா பயணம் ; ‘3.6.9’ அனுபவங்களும் அடுத்தக் கட்ட பிரம்மாண்டமும்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஆல் பாஸ்’ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 17, 2026

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

August 17, 2026

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

August 17, 2026

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

August 17, 2026

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 51 ஆண்டுகாலப் பயணம்: ‘தர்மன்’ படப்பிடிப்புத் தளத்தில் கொண்டாடப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனை

August 17, 2026

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிக்கும் ‘சம்பராலா ஏடி கட்டு- SYG ‘ படத்தின் படப்பிடிப்பு நிறைவு : 2027 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகிறது

August 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.