• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!

by Tamil2daynews
May 8, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி  ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta)  படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ்  வீடியோ வெளியானது !!

 

விஜய் சில்லா மற்றும் சசி தேவி  ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ்  வெளியாகியுள்ளது.

இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.

சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது  திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட்  அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ்  கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ்  காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின்  திறனை வெளிப்படுத்துகிறது.

ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால  உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.

படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

நடிப்பு:
சந்தீப் கிஷன்

தொழில்நுட்ப குழு:
எழுத்து, இயக்கம் – கிருஷ்ண சைதன்யா
தயாரிப்பாளர்கள் – விஜய் சில்லா, ஷஷி தேவிரெட்டி
தயாரிப்பு நிறுவனம் – 70mm Entertainments
இசை – மணி சர்மா
ஒளிப்பதிவு – மதி
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா
சவுண்ட் டிசைன்  – சச்சின் சுதாகரன், ஹரிஹரன்
PRO – யுவராஜ்

Previous Post

29 – விமர்சனம் ரேட்டிங் -3.5 / 5

Next Post

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்’சைக்கிள் கேப்’!

Next Post

டியூப் லைட் புரொடக்ஷன்ஸ் வழங்கும், இயக்குநர் எம்.ஆர். பாரதி இயக்கத்தில், நவாஸ் மற்றும் ஷெர்ரி அகர்வால் நடிப்பில் காதல், ஏக்கம் மற்றும் இசையின் மாயாஜாலத்தைக் கொண்டாடும் மியூசிக்கல் ரொமான்ஸ் திரைப்படம்'சைக்கிள் கேப்'!

Popular News

  • ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்

    0 shares
    Share 0 Tweet 0
  • பிகினி உடையில் கீர்த்தி சுரேஷ் – விட்டு வைக்காத பாலிவுட் மோகம்..! 

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.