• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!

by Tamil2daynews
June 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!

 

சென்னை, ஜூன் 21, 2026: உலக இசை தினத்தை முன்னிட்டு சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் நடைபெற்ற ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரனின் ‘வைப் வித் அரவிந்த்’ என்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பி்த்தனர்.

பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ், யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து வழங்கிய இந்த நிகழ்வில் இந்தியாவின் செல்வாக்கு பெற்ற இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத்தின் இசையை கொண்டாடப்பட்டது.

‘மொட்டமாடி மியூசிக்’ குழுவினர் அனிருத்தின் பிரபலமான பாடல்களை உற்சாகத்துடன் இசைத்து ரசிகர்களை மகிழ்வித்ததோடு அந்த மாலைப்பொழுது தொடங்கியது. டிஜே தீபிகா தனது துள்ளலான இசை மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

‘ராக்ஸ்டார்’ அனிருத் வருகைக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், அரங்கம் நிறைந்த ரசிகர்களின் ஆரவாரத்திற்கு மத்தியில் அனிருத் மேடைக்கு வந்தார். ‘அரவிந்த்’ மற்றும் தனது மிகவும் பிரபலமான ஹிட் பாடல்களை அவர் பாடியபோது அரங்கம் உற்சாகத்தில் திளைத்தது. அந்த மாலைப்பொழுது இசை, கொண்டாட்டம் மற்றும் ரசிகர்களின் உற்சாகம் நிறைந்த பிரம்மாண்ட நிகழ்வாக மாறியது.

நிகழ்வில் பேசிய அனிருத், எக்ஸ்பிரஸ் அவென்யூவுடனான தனது நீண்டகால உறவை நினைவுகூர்ந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகளவில் டிரெண்டான ‘ஒய் திஸ் கொவெறி டி’ பாடலின் வெற்றியின்போது இதே இடத்திற்கு வந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். தற்போது தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’தை கொண்டாட அதே இடத்திற்கு மீண்டும் வந்துள்ளது சிறப்பான தருணம் என்றார்.
’அரவிந்த்’ ஆல்பம் உருவான கதை பற்றியும் அவர் பேசினார். தனது நெருங்கிய நண்பரான அரவிந்துக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலேயே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டதாகவும், மேலும் இது தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான மற்றும் இசைப்பயணத்தில் முக்கியமான மைல்கல் என்றும் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பல நகரங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்திய அனிருத், தனது விருப்பமான நகரம் எப்போதும் சென்னைதான் என குறிப்பிட்டார். சென்னை ரசிகர்களின் அன்பு, எனர்ஜி மற்றும் உற்சாகத்திற்கு ஈடு இணையில்லை என்றும், இந்த நகரம் எப்போதும் தனக்கு ஸ்பெஷல் என குறிப்பிட ரசிகர்கள் அவரை கைத்தட்டி உற்சாகப்படுத்தினர். மேலும், இந்த சிறப்பான நிகழ்வை ஏற்பாடு செய்த பிராண்ட் அவதார், எக்ஸ்பிரஸ் அவென்யூ, அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கும் அனிருத் நன்றி தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக ரசிகர்களின் பங்கேற்பு அமைந்தது. பல்வேறு கலந்துரையாடல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ரசிகர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டதுடன், அனிருத் வால் ஆஃப் ஃபேமில் தங்களது வாழ்த்துகள் மற்றும் நினைவுகளை பதிவு செய்தனர். யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடனான தனது பார்ட்னர்ஷிப்புடன் அசல் இசை, படைப்புரிமை மற்றும் வளர்ந்து வரும் திறமைகளை தொடர்ந்து ஊக்குவிக்கும் அனிருத்தின் சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸுக்கும் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.

15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து அனிருத் மீது அன்பு காட்டியதோடு, மக்களை ஒன்றிணைப்பதில் இசைக்குள்ள ஆற்றலையும் இந்நிகழ்வு நிரூபித்தது. இந்நிகழ்ச்சி எக்ஸ்பிரஸ் அவென்யூ வளாகத்தை இசை, கலாச்சாரம் மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டக் களமாக மாற்றியதோடு ரசிகர்களுக்கும் மறக்க முடியாத அனுபவமாக மாறியது.

நிகழ்ச்சி நிறைவடைந்தபோது ஒரு விஷயம் தெளிவாக தெரிந்தது. அதாவது, வைப் வித் அரவிந்த் வெறும் இசை நிகழ்ச்சி மட்டுமல்ல! இசை, நட்பு, நினைவுகள் மற்றும் ஒரு கலைஞருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையிலான அழகான உறவை கொண்டாடிய நிகழ்வாக மாறியது.

பிராண்ட் அவதார் பற்றி:
பிராண்ட் அவதார் என்பது பொழுதுபோக்கு, கலாச்சாரம், வணிகம் மற்றும் வாழ்க்கை முறையில் பெரிய அளவிலான நேரடி நிகழ்வுகள், அறிவுசார் சொத்துகள் (IP), பிராண்ட் செயல்பாடுகள் மற்றும் சமூக மையப்படுத்தப்பட்ட தளங்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் பெற்ற அனுபவ அடிப்படையிலான நிறுவனம்.

இந்த நிறுவனம் இசை நிகழ்ச்சிகள், ஆடியோ வெளியீட்டு விழாக்கள், பிரபலங்களுடனான நிகழ்வுகள், படைப்பாளர்கள் சார்ந்த விழாக்கள், விருது வழங்கும் தளங்கள் மற்றும் பல்வேறு தனித்துவமான நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

தொழில்முனைவு, புதுமை மற்றும் வணிகத்தில் வளர்ந்து வருபவர்களைக் கொண்டாடும் தென்னிந்தியாவின் முன்னணி ஸ்டார்ட்அப் ரியாலிட்டி தளங்களில் ஒன்றான ‘ஸ்டார்ட்அப் சிங்கம்’-ஐ உருவாக்கியது பிராண்ட் அவதார்.

‘அனுபவங்களை உருவாக்குதல். தாக்கத்தை ஏற்படுத்துதல்.’ என்பதன் அடிப்படையாகக் கொண்டு பிராண்ட் அவதார் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் பற்றி:
அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் என்பது ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தரால் நிறுவப்பட்ட ஒரு சுயாதீன இசை நிறுவனமாகும். தனித்துவமான இசை, படைப்புரிமை மற்றும் வளர்ந்து வரும் திறமையாளர்களை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. கலைச் சுதந்திரத்தை முன்னிறுத்துதல், வளர்ந்து வரும் படைப்பாளிகளை ஆதரித்தல் மற்றும் இந்தியாவில் சுயாதீன இசைக்கான வலுவான சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் இந்நிறுவனம் செயல்படுகிறது.

யுனிவர்சல் மியூசிக் இந்தியா பற்றி:
உலகின் முன்னணி இசை மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான யுனிவர்சல் மியூசிக் குழுமத்தின் ஒரு பிரிவே யுனிவர்சல் மியூசிக் இந்தியா. இந்திய திரைப்படம் மற்றும் திரைப்படம் அல்லாத இசைத் துறையின் ஆளுமைகளை ஒன்றிணைக்கிறது. கலைஞர் மேம்பாடு, இசை விநியோகம் மற்றும் பார்ட்னர்ஷிப் மூலம், இந்நிறுவனம் இந்திய திறமைகளை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் இணைத்து வருகிறது.

எக்ஸ்பிரஸ் அவென்யூ பற்றி:
எக்ஸ்பிரஸ் அவென்யூ சென்னையின் முதன்மையான ஷாப்பிங், உணவு, பொழுதுபோக்கு மற்றும் லைஃப்ஸ்டைல் மையமாகும். இது நகரின் மிகவும் புகழ்பெற்ற கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதில் பெயர் பெற்றது.

நிகழ்வு விவரங்கள்:
யுனிவர்சல் மியூசிக் இந்தியா மற்றும் எக்ஸ்பிரஸ் அவென்யூவுடன் இணைந்து பிராண்ட் அவதார் மற்றும் அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் வழங்குகிறது.

Previous Post

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி

Next Post

மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான “குட் நியூஸ்” (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

Next Post

மூவிட்ரான் புரொடக்ஷன் நிறுவனத்தின் 2-வது தயாரிப்பான "குட் நியூஸ்" (GOOD NEWS) திரைப்படம் பூஜையுடன் இனிதே துவங்கியது!

Popular News

  • உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!

    0 shares
    Share 0 Tweet 0
  • அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

அட்டாக்கர் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது

June 25, 2026

இரண்டு மணி நேரம் குடும்பத்துடன் ஜாலியாக ரசிக்கலாம்; கான் சிட்டி அப்படிப்பட்ட படம்” – அர்ஜுன் தாஸ்

June 25, 2026

’ஹபீபி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!

June 25, 2026

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

June 25, 2026

குறுகிய நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்த விஷாலின் ‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்! – உற்சாகத்தில் ராப் பாடகர் வினோத் (V7h)

June 25, 2026

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

June 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.