• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி

by Tamil2daynews
June 25, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ஆனந்தன் காடு’ பத்திரிகையாளர் சந்திப்பு: ஆர்யா – ஜியேன் கிருஷ்ணகுமார் கூட்டணியின் பிரம்மாண்ட முயற்சி

 

வரவிருக்கும் தமிழ்–மலையாள திரைப்படமான ‘ஆனந்தன் காடு’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், நடிகர் இந்திரன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு ஊடகங்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

நிகழ்வின் போது படத்தின் கதை, பின்னணி மற்றும் உருவாக்க அனுபவங்கள் குறித்து படக்குழுவினர் விரிவாக பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள சில அரசியல் மற்றும் வரலாற்றுப் பின்னணி தொடர்பான கேள்விகளுக்கு இயக்குநர் விளக்கம் அளித்தார். படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் சில உண்மை நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டிருந்தாலும், திரைப்படத்தின் முழு அனுபவத்தை திரையரங்கில் பார்த்து ரசிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும் நிகழ்வில் பேசுகையில் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார், “இது வெறும் ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; உணர்வுகள், மனிதர்களின் வாழ்க்கை மற்றும் பல அடுக்குகள் கொண்ட கதைக்களத்தை உள்ளடக்கிய திரைப்படம். சில வரலாற்றுப் பின்னணிகளை கொண்டிருந்தாலும், படம் எந்த சமூகத்தையோ அல்லது மக்களையோ புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், “இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பில் உருவான இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய முயற்சி. முரளி கோபியின் பல அடுக்குகள் கொண்ட திரைக்கதையை எந்த சமரசமும் இல்லாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் ஜியேன் கிருஷ்ணகுமார். தொழில்நுட்ப ரீதியாகவும், கதைக்கள ரீதியாகவும் இது மிகுந்த திருப்தி அளிக்கும் படைப்பாக இருக்கும்” என்று கூறினார்.

மேலும், படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், பார்வையாளர்கள் உணர்வுகளை முழுமையாக அனுபவிக்கும்படி தனித்துவமான வெளியீட்டு வடிவமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

படத்தின் ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சிப்பூர்வமான தருணங்கள் மற்றும் இடைவேளை பகுதி (Interval Block) குறித்து ஆர்யா சிறப்பாகக் குறிப்பிட்டார். படத்தில் நடித்துள்ள இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், தேவமோகன், நிகிலா விமல் உள்ளிட்ட நடிகர்களின் நடிப்பையும் அவர் பாராட்டினார்.

படத்தின் ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், கலை அமைப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் குறித்து பேசிய ஆர்யா, படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டியதுடன், திரையரங்கில் இந்த திரைப்படம் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.
படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் இந்திரன்ஸ் தனது உரையில், “கருப்பு திரைப்படத்திற்கு முன்பே நான் நடித்த படம் ஆனந்தன் காடு. இதில் எனது திரைப்பயணத்தில் முக்கியமான மற்றும் சவாலான கதாபாத்திரம் ஒன்றை செய்திருக்கிறேன் என்றும். படம் வெளியான பிறகு ரசிகர்கள் அதை பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

நிகழ்வின் போது படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பும் பாராட்டப்பட்டது. ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், பின்னணி வடிவமைப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.படத்தின் வெளியீடு குறித்து தயாரிப்பாளர் எஸ்.விநோத் குமார் பேசுகையில், தற்போதைய OTT சூழலிலும் ரசிகர்களின் திரையரங்கு அனுபவத்தின் மீது நம்பிக்கை வைத்து ‘ஆனந்தன் காடு’ திரைப்படத்தை உலகளவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்தார். மேலும், 60 கோடிக்கும் மேற்பட்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படம் முழுமையாக ரசிகர்களின் ஆதரவை நம்பியே திரையரங்குகளில் வெளியாகிறது என்றும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் நிறைவில், படத்தை உலகளவில் வெளியிடும் Gokulam Movies நிறுவனத்திற்கும் அதன் தலைவர் கோகுலம் கோபாலனுக்கும் படக்குழுவினர் நன்றியை தெரிவித்தனர்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆனந்தன் காடு’ திரைப்படம் ஜூன் 25ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகவுள்ளது.

இயக்கம்:
ஜியன் கிருஷ்ணகுமார்
கதை, திரைக்கதை, வசனம்:
முரளி கோபி
தயாரிப்பு:
எஸ். வினோத் குமார்
ஒளிப்பதிவு:
எஸ். யுவா
படத்தொகுப்பு:
ரோஹித் வி.எஸ். வரியத்
இசை:
பி. அஜனீஷ் லோக்நாத்
கலை இயக்கம்:
ரஞ்சித் கோதேரி
நிர்வாகத் தயாரிப்பாளர்:
ஜெயின் பால்
சண்டைக் காட்சிகள்:
ஆர். சக்தி சரவணன்
விஎஃப்எக்ஸ் இயக்கம்:
பினோய் சதாசிவன்
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்:
பிரணவ் மோகன்
ஒப்பனை:
பைஜு எஸ்
ஒலி வடிவமைப்பு:
அருண் எஸ். மணி
ஒலி கலவை
விஷ்ணு பி.சி
பாடல் வரிகள்:
பழனி பாரதி • முரளி கோபி
வண்ணச் சீரமைப்பு:
சிவசங்கர் வி. (B2H)
முதன்மை இணை இயக்குநர்:
அபில் ஆனந்த் எம்.டி
நிதி கட்டுப்பாட்டாளர்:
எம்.எஸ். அருண்
ஆடை வடிவமைப்பு:
அருண் மனோஹர்
ஸ்டில்ஸ் புகைப்படம்:
ரிஷ்லால் உண்ணிகிருஷ்ணன்
விளம்பர வடிவமைப்பு:
மா மி ஜோ
Previous Post

சிறந்த சமூக மாற்றத்தை நிகழ்த்திய படமாக ‘நந்தன்’ தேர்வு. டெல்லி தமிழ்ச் சங்கம் கௌரவம்!

Next Post

உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!

Next Post

உலக இசை தினத்தில் 15,000-க்கும் மேற்பட்ட ரசிகர்களுடன் ராக்ஸ்டார் அனிருத் கொண்டாடிய ‘வைப் வித் அரவிந்த்’!

Popular News

  • இதயம் முரளி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ராவ் பஹதூர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இதயம் முரளி – விமர்சனம்

July 12, 2026

வில்லுப்பாட்டு மாதவியை சினிமாவிற்கு அழைத்துவந்த ‘வேட்ட சாமி’: ஜிப்ரான் இசையில் பாடகியாக அறிமுகம்

July 12, 2026

‘டாக்ஸிக்’’ திரைப்படத்தின் ‘தபாஹி’ அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ வெளியீடு – ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறியது !

July 12, 2026

மீண்டும் ஒரு பிரமாண்ட கூட்டணியில் சாம் சி எஸ்… ராம் பொதினேனியின் #RAPO23-க்கு இசையமைக்கிறார் !

July 12, 2026

சவுரவ் கங்குலியின் பிறந்தநாளில் வெளியான ‘தாதா – தி சவுரவ் கங்குலி ஸ்டோரி’ ஃபர்ஸ்ட் லுக்

July 12, 2026

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

July 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.