• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
July 16, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

 

மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான ‘மாறுவேஷம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது.

விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய துப்பறியும் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சவால் நிறைந்த வழக்குகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியான திலக் என்ற கதாபாத்திரத்தில் வைபவ் நடித்துள்ளார். ஆனால், அவரது திறமைக்கு சவால் விடும் வகையிலான வழக்குகள் எதுவும் தனக்குக் கிடைக்காதது அவருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. அப்படியான தருணத்தில் அவரது எதிர்பார்ப்புக்கும் அப்பாற்பட்ட பல திருப்பங்கள், ரகசியங்கள் மற்றும் அதிர்ச்சியூட்டும் உண்மைகளை கொண்ட ஒரு வழக்கு அவருக்கு வருகிறது. அந்த வழக்கின் பயணம்தான் ‘மாறுவேஷம்’ திரைப்படம்.

படம் குறித்து இயக்குநர் ஸ்ரீனி பகிர்ந்து கொண்டதாவது, “எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்த ‘மாறுவேஷம்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பே ரசிகர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய ஒன்று. யார் எதை மறைக்கிறார்கள், ஏன் ஒரு கதாபாத்திரம் மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறது, அது வெறும் வெளிப்புற மாற்றமா அல்லது ஆழமான உணர்வுப்பூர்வமான பயணமா, பழிவாங்கலா, உயிர் பிழைப்பதற்கான போராட்டமா, காதலா அல்லது மறக்கப்பட்ட கடந்த காலத்திலிருந்து தப்பிக்கும் முயற்சியா என இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் படத்தில் சுவாரஸ்யமாக இருக்கும். கதாபாத்திரங்களின் இரட்டை முகங்கள், வெளிப்படும் ரகசியங்கள் மற்றும் இரண்டு அடையாளங்களுக்கு இடையில் சிக்கித் தவிக்கும் ஒருவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் சவால்தான் இப்படத்தின் மையம். முகம் மாறலாம். ஆனால், ஒருவரால் தனது கடந்த காலத்திலிருந்து தப்பிக்க முடியுமா?” என்றார்.

நடிகர்கள்:  வியானா இதில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராம்கி, முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டன், ஜார்ஜ் மரியன், ஜார்ஜ் விஜய், இந்துமதி, மு. ராமசாமி மற்றும் செல் முருகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தொழில்நுட்பக்குழுவினர்:

ஒளிப்பதிவு: பாலாஜி கே. ராஜா,
இசை: ராஜ்குமார் அமல்,
படத்தொகுப்பு: என்.பி. ஸ்ரீகாந்த்,
கலை இயக்கம்: மணிகண்டன் சீனிவாசன்,
கூடுதல் திரைக்கதை: எஸ். இசையமுதன்
Previous Post

‘அன்பே டயானா’ டிரெய்லர் வெளியீட்டு விழா!!

Next Post

ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

Next Post

ரெபெல் ஸ்டார்' பிரபாஸ் நடிக்கும் 'ஃபௌசி - Fauzi டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது

Popular News

  • தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

    தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்ட தனுஷ் ரசிகர் மன்றத்தின் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

    0 shares
    Share 0 Tweet 0
  • இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இசை கலைஞர் பால் டப்பாவின் புதிய மியூசிக் வீடியோ ஆல்பம் ‘ஏரோபிளேன்’ வெளியீடு

October 30, 2026

நடிகர்கள் ராஜ் அய்யப்பா, டெல்னா டேவிஸ் நடிப்பில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கும் ‘லவ் இங்க்’ திரைப்படத்தின் வில்லனாக சுனில் ரெட்டி!

October 30, 2026

“அக்கா’வில் நடிப்பதற்கு முன்பு என்னால் ஒரு கேங்க்ஸ்டராக நடிக்க முடியும் என நம்பவில்லை” கீர்த்தி சுரேஷ்!

October 30, 2026

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்திலிருந்து ‘தங்கப்புள்ள’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

October 30, 2026

‘வேட்டுவம்’ – பொங்கல் 2027-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

October 30, 2026
அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம்  ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’! பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது!

October 27, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.