• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

by Tamil2daynews
July 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகை நயன்தாரா – நடிகர் கவின் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் படக்குழு பிரத்யேக காணொளியை வெளியிட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிலோமின் ராஜ் மேற்கொள்ள.. கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ்- தி ரவுடி பிக்சர்ஸ் – செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நயன்தாரா- விக்னேஷ் சிவன்- எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி. ஜே. மற்றும் கே. எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.
இப்படத்தின் பாடல் ஒன்று ஏற்கனவே வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளை பெற்று.. படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில்… இப்படத்தின் வெளியீட்டு தேதி தொடர்பான பிரத்யேக காணொளியை படக் குழு வெளியிட்டுள்ளது. அதில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14- ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஹாய் திரைப்படம்-  பெயருக்கு ஏற்றபடி எளிமையான… இனிமையான…. திரைப்படம். ரசிகர்கள் தங்களுடைய குடும்பத்துடன் இரண்டே கால் மணி நேரம் ஜாலியாக பார்த்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தயாராகி இருக்கிறது. சென்னை- கோயம்புத்தூர்- பொள்ளாச்சி- ஆகிய மூன்று இடங்களில் ‘ஹாய்’ படத்தின் கதை நிகழ்கிறது. ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ – ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ – ‘யாரடி நீ மோகினி’ படங்களைப் போல் வில்லன்களே இல்லாத ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகி இருக்கிறது” என்றார்.

இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘கைதி’, ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ ஆகிய படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவரும், பாடலாசிரியருமான விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி இருப்பதாலும்…. நயன்தாரா – கவின்- கே. பாக்யராஜ் – பிரபு – ராதிகா சரத்குமார்-  உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் …’ஹாய்’  திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடம் மட்டுமல்லாமல் ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=YthIekaAuFM
Previous Post

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

Next Post

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Popular News

  • சிங்காரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

    0 shares
    Share 0 Tweet 0
  • மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

November 2, 2026

சிங்காரம் – விமர்சனம்

November 2, 2026

அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ (John Doe) நவம்பர் 13 முதல் திரையரங்குகளில் வெளியீடு!

November 2, 2026

மெகாஸ்டார் சிரஞ்சீவி கிளாப்ஸ் அடிக்க, மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் இயக்குநர் சுகுமார் மீண்டும் இணைந்துள்ள பிரம்மாண்டமான புதிய திரைப்படம் பூஜையுடன தொடங்கியது!

November 2, 2026
‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

‘எனிமி ஆஃப் தி ஸ்மக்லர்’ – விமர்சனம்

November 2, 2026

சூர்யா நடிக்கும் ‘சீன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

November 2, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.