• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீவா லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

by Tamil2daynews
July 20, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜீவா  லார்க் ஸ்டூடியோஸ் கூட்டணியில் – ‘தகப்பன்’ பூஜையுடன் இனிதே தொடக்கம்!

‘கருடன்’, ‘மாமன்’ உள்ளிட்ட தரமான வெற்றிப் படங்களை தயாரித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ள லார்க் ஸ்டூடியோஸ், முன்னணி நட்சத்திர நடிகர் ஜீவா நடிப்பில், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பான ‘தகப்பன்’ படப்பிடிப்பை இன்று  பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ளது.

மதுரையில் கோலாகலமாக நடைபெற்ற பூஜையில் படக்குழுவினரோடு  திரை பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், தேசிய விருது பெற்ற நடிகை ரஜிஷா விஜயன் கதாநாயகியாக இணைந்துள்ளார். இந்தப் புதிய கூட்டணி ரசிகர்களிடையே  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியான ‘TTT’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஜீவா மீண்டும் மதுரை மண்ணின் மண்வாசனையோடு, வலுவான உணர்வுகளை மையமாகக் கொண்ட கதையில் நடிக்கிறார். விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்த ‘கிடா’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. வெங்கட், இப்படத்தின் கதை, திரைக்கதை  இயக்கத்தை மேற்கொள்கிறார்.
Imageமதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் ‘தகப்பன்’, அப்பா – மகன் உறவின் ஆழமான பாசம், குடும்ப உறவுகளின் வலிமை மற்றும் மனித உணர்வுகளை மையமாகக் கொண்ட ஒரு உணர்வுபூர்வமான படைப்பாக உருவாகிறது. குடும்ப ரசிகர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளது.

K. குமார் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, ஒளிப்பதிவை M. சுகுமார் கவனிக்கிறார். படத்தொகுப்பை நாகூரான் ராமச்சந்திரன் மேற்கொள்கிறார். கலை இயக்கத்தை K.B.நந்தபாலன், சண்டைக் காட்சிகளை மகேஷ் மேத்யூ, ஆடை வடிவமைப்பை M. செல்வராஜ் மற்றும் ரிதேஷ் செல்வராஜ் கவனிக்கின்றனர். ஒலிப்பதிவை T. உதய் குமார் மேற்கொள்ள,  புகைப்படங்களை அன்பு பதிவு செய்கிறார். நிர்வாகத் தயாரிப்பாளராக R. பாலகுமார், விநியோகத் தலைவராக பிரிதிவிராஜா சின்னசாமி, மக்கள் தொடர்பாளராக யுவராஜ், விளம்பர வடிவமைப்பாளராக தினேஷ் அசோக் பணியாற்றுகின்றனர். இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை திங்க் மியூசிக் பெற்றுள்ளது.Imageஇன்று நடைபெற்ற பூஜை நிகழ்ச்சியுடன் படத்தின் பணிகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

வலுவான கதை, திறமையான நடிகர்கள், அனுபவம் மிக்க தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தரமான தயாரிப்புடன் உருவாகும் ‘தகப்பன்’, ஜீவாவின் திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கியமான படைப்பாகவும், தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க குடும்ப உணர்வுப் படமாகவும் அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பிறந்தநாளில் 5 ஆண்டுகால கனவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய நடிகை சாக்ஷி அகர்வால்!

Next Post

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Next Post

நயன்தாரா- கவின் இணைந்து நடித்திருக்கும் 'ஹாய்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Popular News

  • அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

    0 shares
    Share 0 Tweet 0
  • துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செப்டம்பர் 24-இல் வெளியாகிறது! நேச்சுரல் ஸ்டார் நானியின் ‘தி பாரடைஸ்’ – டிரெய்லர் இன்றி புதிய முயற்சி

September 14, 2026

‘அன்பில் அவன்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியானது !!

September 14, 2026

“ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கிரைம் த்ரில்லர்…” ; ‘பீப்’ படம் குறித்து மனம் திறந்த நடிகர் ராகவ்!

September 14, 2026

அரசியலும், சமூக அக்கறையும் சேர்ந்து உருவாகியுள்ள படம் “ஆகாயம் ” தினந்தோறும் நாகராஜ் இயக்கியுள்ளார்.

September 14, 2026

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் படம்

September 14, 2026

‘தி டார்க் ஹெவன்’ திரைப்பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா!

September 14, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.