வாத்தி, லக்கி பாஸ்கர் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் வெங்கி அட்லூரி தற்போது சூர்யாவை வைத்து விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் மமிதா பைஜூ ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். லக்கி பாஸ்கர் படமும், சூர்யா கடைசியாக நடித்த கருப்பு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தை ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகி இருக்கிறது.
பரம்பரை பணக்காரரான சூர்யா (சஞ்சய் விஸ்வநாத்) ஒலிம்பிக் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்புகிறார். தனது மகன் தங்கம் வென்று வந்த மகிழ்ச்சியில் ராதிகா இருந்தாலும், 42 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறானே என்கிற கவலையில் இருக்கிறார்.

இந்த சமயத்தில் அந்த குழந்தைக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போக, அவனுக்கு உடனடியாக bone marrow transplant அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர் கூறுகிறார். ஆனால், குழந்தையின் தாயின் எலும்புதான் இதற்கு சரியாக இருக்கும், அவரை உடனடியாக அழைத்து வாருங்கள் என கூறுகிறார்கள்.
இதனால் உடனடியாக வெளிநாட்டிற்கு புறப்படும் சூர்யா, அங்கு தன் குழந்தையின் அம்மாவான மமிதா பைஜூவை சந்தித்து, சூழ்நிலையை எடுத்துக்கூறி, அவரை இந்தியாவிற்கு அழைத்து வருகிறார். குழந்தைக்காக வரும் மமிதா பைஜூவிற்கு சூர்யா மீது காதல் ஏற்படுகிறது; நான் உன்னை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என அவர் கூறுகிறார். ஆனால், சூர்யா மமிதாவை ஏற்க மறுக்கிறார். சூர்யா மனம் மாறினாரா இல்லையா? இவர்களின் காதல் இணைந்ததா இல்லையா? என்பதே படத்தின் மீது கதை..
படத்தை பற்றிய அலசல் கதாநாயகன் சூர்யா, இவருக்கு நடிப்பை சொல்லித்தர வேண்டிய அவசியமே இல்லை. வழக்கம்போல் இப்படத்திலும் தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்துள்ளார். கண்டிப்பு, மறைந்திருந்து காதலை காட்டுவது, நகைச்சுவை என தனது நடிப்பால் திரைக்கதையை அழகாக கொண்டு சென்றுள்ளார்.
இயக்குநர் வெங்கி அட்லூரி, 20 வயது வித்தியாசம் உள்ள இருவரின் காதலை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதில் குழந்தை, அம்மா, உறவுகள் என பல உணர்ச்சிகளை திரைக்கதையில் அடக்கிய விதம் நன்றாக இருந்தது. நகைச்சுவையாக காட்சிகளை கொண்டு சென்ற விதமும் ரசிக்க வைத்தது.
ஆனால், திரைக்கதையில் சுவாரஸ்யம் குறைவாக இருந்தது. இதனால் சில நல்ல காட்சிகளில் கூட தொய்வு ஏற்படும்படி அமைந்துவிட்டது. மேலும், எமோஷனல் கனெக்ட் கதையோடு இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும். சண்டை காட்சிகள் ஒர்ஸ்ட்.
ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம். சூர்யாவின் வீடு, மருத்துவமனை காட்சிகள், திருமண காட்சிகள் என அனைத்தையும் அழகாக காட்டியுள்ளார். ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவான இப்படத்தில், பட்டாம்பூச்சி மற்றும் அம்மாவுக்காக வந்த பாடலை தவிர்த்து வேறு எதுவும் மனதை தொடவில்லை. பின்னணி இசையும் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம்.
சூர்யா மம்மிதா பைஜூ ராதிகா சரத்குமார் இந்த மூன்று கதாபாத்திரங்கள் மனதில் நின்ற அளவிற்கு மற்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்காதது சற்று குறை தான் இருந்தாலும் படத்தின் வேகமும் விறுவிறுப்பும் இதை சமாளித்துக் கொள்கிறது.
காலங்கள் எவ்வளவு கடந்தாலும் கோலங்கள் மாறாது என்ற கோணத்தில் வந்திருக்கும் படம் விஸ்வநாத் அண்ட் சன் ஸ்.









