• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

by Tamil2daynews
September 5, 2026
in விமர்சனம்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

 

பிரேமலு என்கிற அழகான காமெடி மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ஒரு ஃபீல்-குட் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம்.

புதிய ஊருக்குக் குடிபெயரும் அஷ்லி (மமிதா பைஜூ) என்ற இளம்பெண்ணுக்கும், அவளது வயது முதிர்ந்த அயலவரான ஜஸ்டின் (நிவின் பாலி) என்ற எளிய மனிதருக்கும் இடையே மலரும் அழகான காதலைப் பற்றியது இப்படத்தின் கதை.வழக்கமான காதல்கதையைத் தாண்டி, இருவருக்குமான வயது வித்தியாசத்தை ரொம்ப இயல்பாகவும் கலகலப்பாகவும் இயக்குனர் கையாண்டுள்ளார்.நிவின் பாலியின் யதார்த்தமான நடிப்பும், மமிதா பைஜூவின் எனர்ஜிக்கான வெளிப்பாடும் ரசிகர்களைக் கவரும் வகையில் உள்ளன.முதல் பாதி ஜாலியாகவும் கலகலப்பாகவும் நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் திரைக்கதை மெதுவாக நகர்வதால் சற்று சலிப்பு ஏற்படுகிறது.
நிவின் பாலி.. சார் இது தான் உங்க ரூட்டு, வாங்க இப்படி பீல் குட் ஜானருக்கு என்று சொல்லும்படி படம் முழுவதும் கலக்கியுள்ளார். அவரின் ஒன் லைன் கவுன்டர், ஸ்டைலாக கார்-யை ஓட்டுவது, மமிதாவுடன் பயந்து பயந்து காதலிப்பது என மனுஷன் செம ஸ்கோர் செய்துள்ளார்.

மமிதா தொட்டதெல்லாம் தங்கம் தான் போல, போன வாரம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வர, இந்த வாரம் பெத்லஹேம் குடும்ப யூனிட் என பேக் டூ பேக் சிக்ஸ் தான் அடித்துள்ளார், நிவினிடம் தைரியமாக காதலை சொன்னதொடு, தைரியமாக அவருடன் பல இடங்களுக்கு நிவினே பயந்தாலும், அவர் தைரியமாக அழைத்து செல்வது கடைசி வரை என் காதலன் இவர் தான் என பிடிவாதம் இருப்பது என சூப்பர் மமிதா.

இதை தாண்டி படத்தில் நடித்த அனைவருமே குறும்பட இயக்குனர், மமிதாவின் ஒருதலை காதலன், நிவின் பாலியுடன் வரும் வயது அதிகமான நண்பர், நிவின் பாலி தோழிகள் என எல்லோருமே கலக்கல் தான். படத்தின் மிகப்பெரிய பலம் ஒன் லைன் கவுன்டர் வசனங்கள்தான்.

அதிலும் படத்தின் முதல் பாதி முழுவதும் சிரிப்பு சரவெடிதான். கண்டிப்பாக ஆங்கில சப் டைட்டில் இருக்கிறதா என்று மலையாளம் தெரியாதவர்கள் கேட்டு செல்வது நலம்.

இத்தனை கலகலப்பாக சென்ற முதல் பாதியை தொடர்ந்து இரண்டாம் பாதியும் செம ஜாலியாகவே செல்கிறது, இருந்தாலும் ஆங்காங்கே கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. ஆனால், அது பெரிய குறையாக தெரியவில்லை. கிளைமேக்ஸ் அந்த காந்தாரா போல் வந்த சண்டை எல்லாம் காமெடி என்றாலும் இது தேவையா என்பது போல் இருந்தது.

டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அத்தனை யதார்த்தம், நாமே அந்த ஊருக்குள் சுற்றி வந்த உணர்வு, பாடல்கள் இசை அடிபொலி தான், கொஞ்சம் ப்ரேமலு பாதிப்பு இதிலும் தெரிவதை தவிர்த்து இருக்கலாம்.

மலையாள திரை உலகமே வியக்கும் அளவுக்கு இப்படத்தின் வெற்றியும் வசூலும் இருந்தாலும் தமிழில் பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.

இன்னும் ஒரு படி சொல்லப்போனால் பிரேமலு  படம் அளவிற்கு இப்படம் இல்லை.

ஒரு முறை எல்லோரும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்குப் படமாக இது அமைந்திருக்கிறது.
Previous Post

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

Next Post

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

Next Post

‘மூன்வாக்’ - 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

Popular News

  • “உயிர் தமிழுக்கு” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மிஷன்- சாப்டர்1’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர் ரிவான் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஃபைண்டர்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு நல்ல தமிழ் படத்தை கெடுத்த பவண்கல்யாண்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.