பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்
பிரேமலு என்கிற அழகான காமெடி மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்த கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள ஒரு ஃபீல்-குட் காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படம்.
நிவின் பாலி.. சார் இது தான் உங்க ரூட்டு, வாங்க இப்படி பீல் குட் ஜானருக்கு என்று சொல்லும்படி படம் முழுவதும் கலக்கியுள்ளார். அவரின் ஒன் லைன் கவுன்டர், ஸ்டைலாக கார்-யை ஓட்டுவது, மமிதாவுடன் பயந்து பயந்து காதலிப்பது என மனுஷன் செம ஸ்கோர் செய்துள்ளார்.மமிதா தொட்டதெல்லாம் தங்கம் தான் போல, போன வாரம்தான் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வர, இந்த வாரம் பெத்லஹேம் குடும்ப யூனிட் என பேக் டூ பேக் சிக்ஸ் தான் அடித்துள்ளார், நிவினிடம் தைரியமாக காதலை சொன்னதொடு, தைரியமாக அவருடன் பல இடங்களுக்கு நிவினே பயந்தாலும், அவர் தைரியமாக அழைத்து செல்வது கடைசி வரை என் காதலன் இவர் தான் என பிடிவாதம் இருப்பது என சூப்பர் மமிதா.
இதை தாண்டி படத்தில் நடித்த அனைவருமே குறும்பட இயக்குனர், மமிதாவின் ஒருதலை காதலன், நிவின் பாலியுடன் வரும் வயது அதிகமான நண்பர், நிவின் பாலி தோழிகள் என எல்லோருமே கலக்கல் தான். படத்தின் மிகப்பெரிய பலம் ஒன் லைன் கவுன்டர் வசனங்கள்தான்.
அதிலும் படத்தின் முதல் பாதி முழுவதும் சிரிப்பு சரவெடிதான். கண்டிப்பாக ஆங்கில சப் டைட்டில் இருக்கிறதா என்று மலையாளம் தெரியாதவர்கள் கேட்டு செல்வது நலம்.
இத்தனை கலகலப்பாக சென்ற முதல் பாதியை தொடர்ந்து இரண்டாம் பாதியும் செம ஜாலியாகவே செல்கிறது, இருந்தாலும் ஆங்காங்கே கொஞ்சம் தொய்வு ஏற்படுகிறது. ஆனால், அது பெரிய குறையாக தெரியவில்லை. கிளைமேக்ஸ் அந்த காந்தாரா போல் வந்த சண்டை எல்லாம் காமெடி என்றாலும் இது தேவையா என்பது போல் இருந்தது.
டெக்னிக்கலாக ஒளிப்பதிவு அத்தனை யதார்த்தம், நாமே அந்த ஊருக்குள் சுற்றி வந்த உணர்வு, பாடல்கள் இசை அடிபொலி தான், கொஞ்சம் ப்ரேமலு பாதிப்பு இதிலும் தெரிவதை தவிர்த்து இருக்கலாம்.
மலையாள திரை உலகமே வியக்கும் அளவுக்கு இப்படத்தின் வெற்றியும் வசூலும் இருந்தாலும் தமிழில் பார்ப்பதற்கு அவ்வளவு சுவாரஸ்யம் இல்லை.
இன்னும் ஒரு படி சொல்லப்போனால் பிரேமலு படம் அளவிற்கு இப்படம் இல்லை.









